Advertisment

Chennai Rains Highlights: சென்னை உள்பட 9 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை

இன்று தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பதிவாகும் மழையின் அளவு, அரசின் அறிவிப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகள் குறித்த அனைத்து தகவல்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Chennai Rains Highlights: சென்னை உள்பட 9 மாவட்ட கல்வி நிறுவனங்களுக்கு 2 நாள் விடுமுறை

Chennai Rains Highlights : தெற்கு வங்கக் கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ள நிலையில் தமிழகத்தில் நாளை மற்றும் நாளை மறுதினம் அதி கனமழை பெய்ய வாய்ப்புகள் உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

வெள்ளத்தால் பாதித்த மக்களுக்கு சாப்பாடு

அடுத்த மூன்று மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழை

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், குமரி, தென்காசி, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் அடுத்த 3 மணிநேரத்திற்கு இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

publive-image

சென்னை வெள்ள பாதிப்பு : மண்டல வாரியாக ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

மேட்டூர் அணையில் இருந்து 20 ஆயிரம் கனஅடி நீர் திறப்பு

காவிரி நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்தது. இன்று காலை 6 மணிக்கு முதற்கட்டமாக 5 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்ட நிலையில் தற்ஓது 2ம் கட்டமாக 20 ஆயிரம் கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. செக்கானுர், நெரிஞ்சிப்பேட்டை, ஊராட்சிக்கோட்டை, குதிரைக்கால் மேடு, உள்ளிட்ட கதவணைகளில் மின் உற்பத்தி துவங்கப்பட்டுள்ளது. மேலும் கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

12 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை

தொடர் மழை காரணமாக ராமநாதபுர, நாகை, விருதுநகர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • 19:16 (IST) 09 Nov 2021
    ரெட் அலர்ட்: சென்னை உட்பட 9 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் நாளையும் நாளை மறுதினமும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

    சிவங்கங்கை, புதுக்கோட்டை மாவட்டங்களில் நாளை பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

  • 19:15 (IST) 09 Nov 2021

  • 19:11 (IST) 09 Nov 2021

  • 18:10 (IST) 09 Nov 2021
    வடகிழக்கு பருவமழை; 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று வருகின்றனர்.

  • 18:09 (IST) 09 Nov 2021
    வடகிழக்கு பருவமழை; 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை *தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்பு

  • 18:09 (IST) 09 Nov 2021
    வடகிழக்கு பருவமழை; 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து 6 மாவட்ட ஆட்சியர்களுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தி வருகிறார். தஞ்சை, திருவாரூர், நாகை, உள்ளிட்ட மாவட்டங்களின் ஆட்சியர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் ஆலோசனையில் பங்கேற்று வருகின்றனர்.

  • 17:20 (IST) 09 Nov 2021
    தொடர்மழை: திருவாரூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு

    திருவாரூர் மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுகிறது என்று மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் அறிவித்துள்ளார்.

  • 16:56 (IST) 09 Nov 2021
    பூண்டி நீர்தேக்கத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு

    பூண்டி நீர்தேக்கத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ஆய்வு செய்து வருகிறார். தொடர் மழை காரணமாக பூண்டி நீர்த்தேக்கத்தில் மொத்த உயரமான 35 அடியில் தற்போது 33.53 அடிக்கு தண்ணீர் உள்ளது.

  • 16:30 (IST) 09 Nov 2021
    தமிழகத்தில் அடுத்த 2 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழை - வானிலை ஆய்வு மையம்

    குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், விழுப்புரம், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.

  • 16:24 (IST) 09 Nov 2021
    சென்னையில் மின்சாரப் பிரச்னை இன்று இரவுக்குள் சரி செய்யப்படும் - அமைச்சர் செந்தில் பாலாஜி

    மழை வெள்ளம் காரணமாக சென்னையில் நிறுத்தி வைப்பட்ட மின் இணைப்புகள் அனைத்தும் இன்று இரவுக்குள் வழங்கப்படும் என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்தார். முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டதால் சென்னை மற்றும் தமிழகத்தில் மின்சார விபத்து உள்ளிட்ட எந்த பாதிப்பும் இல்லை எனவும் கூறினார்.

  • 16:12 (IST) 09 Nov 2021
    வெள்ள சூழல்களில் ஜெயலலிதாவைப் போல செயல்படுங்கள்... தமிழக அரசுக்கு சசிகலா அறிவுறுத்தல்

    கடந்த கால வெள்ள சூழல்களில் ஜெயலலிதா மேற்கொண்ட நடவடிக்கைகளை போல துரிதமாக செயல்படுங்கள் என்று தமிழ்நாடு அரசுக்கு சசிகலா வலியுறுத்தியுள்ளார்.

  • 15:10 (IST) 09 Nov 2021
    புதுக்கோட்டையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    புதுக்கோட்டை மாவட்டத்தில் தொடர்மழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 14:50 (IST) 09 Nov 2021
    புதுச்சேரி, காரைக்காலில் இரண்டு நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் மழை காரணமாக புதுச்சேரி மற்றும் காரைக்காலில் நாளை, நாளை மறுநாள் (நவம்பர் 10, 11) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • 14:36 (IST) 09 Nov 2021
    அம்மா உணவகங்களில் 3 வேளையும் இலவச உணவு

    மழை பாதிப்பு சீராகும் வரை அம்மா உணவகங்களில் 3 வேளையும் உணவு இலவசமாக வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

  • 13:48 (IST) 09 Nov 2021
    இன்றும், நாளையும் டெல்டா மாவட்டங்களில் அதிக மழைக்கு வாய்ப்பு

    வட தமிழகம் நோக்கி நகரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னை-கடலூர் இடையே காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும். தஞ்சை, நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 3 நாட்களுக்கு மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

  • 13:17 (IST) 09 Nov 2021
    தென்கிழக்கு வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் குறைந்த காற்றழுத்த தாழ்வு

    சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என்றும் தென்கிழக்கு வங்க கடலை ஒட்டிய பகுதிகளில் அடுத்த 36 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

  • 12:01 (IST) 09 Nov 2021
    மேட்டூர் அணையிலிருந்து 20,000கன அடி உபரி நீர் திறப்பு

    மேட்டூர் அணை முழு கொள்ளளவை எட்டவுள்ள நிலையில் பாதுகாப்பு கருதி அணையிலிருந்து 20ஆயிரம் கன அடி உபரி நீர் காவிரியாற்றில் திறக்கப்பட்டுள்ளது.

  • 11:31 (IST) 09 Nov 2021
    கனமழை எதிரொலி : தக்காளி விலை கிடுகிடு உயர்வு

    சென்னையில் கனமழை எதிரொலி காரணமாக சில இடங்களில் தக்காளியின் விலை கிலோவுக்கு ரூ. 100ஐ தாண்டியதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • 11:07 (IST) 09 Nov 2021
    முழுக்கொள்ளளவை எட்டும் வைகை அணை

    71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் தற்போது 68.50 அடியாக அதிகரித்துள்ளது. வைகை அணை எப்போது வேண்டுமானாலும் நிரம்பலாம் என்ற நிலையில் 5 மாவட்ட மக்களுக்கு 2ம் கட்ட வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்படுள்ளது.

  • 11:00 (IST) 09 Nov 2021
    புயலாக மாற வாய்ப்பு இல்லை

    வங்கக் காலில் அந்தமான் அருகே இன்று காலை காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. 11ம் தேதி அன்று அது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக 11ம் தேதி அன்று வட தமிழக கரையை நெருங்கும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் வழுவிழந்து பிறகு கடலூர் இடையே கேரளாவிற்கு செல்லும் என்று அறிவித்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம். இது புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 10:15 (IST) 09 Nov 2021
    மூன்றாவது நாளாக மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிடுகிறார் மு.க.ஸ்டாலின்

    சென்னை கொளத்தூர் பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு, நிவாரண உதவிகளை வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின். மழையால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளை 3வது நாளாக அவர் பார்வையிட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

  • 10:01 (IST) 09 Nov 2021
    கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

    திருவள்ளூர் மாவட்டம் பூண்டி சத்தியமூர்த்தி நீர் தேக்கத்தில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் 5000 கனஅடி நீர் தற்போது திறக்கப்பட உள்ளது. எனவே கொசஸ்தலை ஆற்றங்கரையோரத்தில் வசிப்பவர்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

  • 09:37 (IST) 09 Nov 2021
    12 மணி நேரத்தில் உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி

    தென்கிழக்கு வங்கக் கடல், அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் பகுதியில் தற்போது மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த 12 மணி நேரத்தில் தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்திற்கு 5 நாட்களுக்கு மிக கனமழை பெய்ய வாய்ப்பு என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

  • 09:05 (IST) 09 Nov 2021
    தமிழகத்திற்கு இரண்டு நாட்கள் ரெட் அலெர்ட்

    காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக இன்றும், நாளையும் கனமழை முதல் அதி கனமழை பெய்யும் என்பதால் தமிழகத்திற்கு 2 நாட்களுக்கு ரெட் அலெர்ட் விடுத்துள்ளது சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம்

  • 08:54 (IST) 09 Nov 2021
    மேட்டூரில் இருந்து 20 ஆயிரம் கன அடிநீர் திறப்பு

    மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக உயர்ந்துள்ள நிலையில் மூன்றாம் கட்டமாக அணையிலிருந்து காவிரி ஆற்றில் 20,000 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது.

  • 08:52 (IST) 09 Nov 2021
    புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர்மழை காரணமாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • 08:17 (IST) 09 Nov 2021
    தடுப்பணை உடைந்து வெள்ளப்பெருக்கு

    விழுப்புரம் தளவானூர் பகுதியில் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை பெரும் மழையால் உடைந்து அப்பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

  • 08:12 (IST) 09 Nov 2021
    மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    தொடர் மழை காரணமாக மதுரை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்துள்ளார் அம்மாவட்ட ஆட்சியர் அனீஸ் சேகர்

Tamil Nadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment