Advertisment

Chennai Rains : மாமல்லபுரம்- ஸ்ரீஹரிகோட்டா இடையே நாளை கரையை கடக்கும்- தமிழக அமைச்சர்

தமிழகத்தில் மழை தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
New Update
Chennai Rains, Chennai flood

Chennai Rains Live Updates : 09/11/2021 அன்று தென்கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது புயலாக உருவாக வாய்ப்பில்லை என்று அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக 10, 11 தேதிகளில் தமிழகத்தின் அநேக மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

Advertisment

சென்னையில் ரெட் அலெர்ட், ஆனால் மெரினாவில் கூட்டம்

17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு

17 மாவட்டங்களில் அடுத்த 2 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சை, திருவாரூர், நாகை, ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்திற்கு எச்சரிக்கை: ரெட் அலர்ட் என்றால் என்ன?

செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 2000 கனஅடி நீர் வெளியேற்றம்

செம்பரம்பாக்கம் நீர்பிடிப்பு பகுதியில் மழை நின்றதால் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்துள்ளது. தற்போது ஏரியில் இருந்து 2 ஆயிரம் கனஅடிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. ஏரியின் நீர்மட்டம் தற்போது 20.37 கனஅடியாக உள்ளது.

மேலும் படிக்க

  1. சென்னை மக்களின் கவனத்திற்கு; அவசர உதவிக்கு மாநகராட்சியை இப்படி அணுகவும்
  2. சென்னை பெருவெள்ளம்: தவறான நீர்நிலை மேலாண்மையே இன்னல்களுக்கு காரணம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 20:08 (IST) 10 Nov 2021
    மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்

    குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்ட ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுபெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை 6 மணி அளவில் மாமல்லபுரம் கடற்கரை நோக்கி நெருங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 19:47 (IST) 10 Nov 2021
    தொடர் மழை : கோவை மாவட்டத்தில் விடுமுறை அறிவிப்பு

    குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாநிலத்தின் பல பகுதிகளில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுழற அறிவிக்கப்பட்டுள்ளது. இநநிலையில், கனமழை காரணமாக கோவை மாவட்டத்தில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக கோவை மாவட்ட ஆட்சியர் சமீரன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.



  • 19:05 (IST) 10 Nov 2021
    மக்களுக்கு தேவையான அளவுக்கு ரொட்டி, பால் பவுடர்கள் வழங்க நடவடிக்கை

    தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருவதால் பல இடங்களில் மக்களின் இயல்புவாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில, மக்களுக்கு தேவையான அளவுக்கு ரொட்டி, பால் பவுடர்கள் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும், 2015ஆம் ஆண்டோடு ஒப்பிடுகையில் தற்போது அடையாறு ஆற்றில் பாதிப்பு குறைவு என்றும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார்.



  • 19:02 (IST) 10 Nov 2021
    நாளை மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிப்பு

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • 19:02 (IST) 10 Nov 2021
    நாளை மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என அறிவிப்பு

    வங்கக்கடலில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாமல்லபுரம் – ஸ்ரீஹரிகோட்டா இடையே கரையை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும் இதற்காக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் தயார் நிலையில் இருப்பதாக பேரிடர் மேலான்மைத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.



  • 18:33 (IST) 10 Nov 2021
    முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 மின் மாற்றிகளில் மின் விநியோகம்

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல இடங்களில் வெள்ளம் வீடுகளின் புகுந்துள்ளதால் மக்களின் இயல்புவாழ்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 41 மின் மாற்றிகளில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் 10 மாவட்டங்களில் 12,000 மின் ஊழியர்கள் பணியில் உள்ளனர் என்றும் 1.32 லட்சம் மின் கம்பங்கள் தயார் நிலையில் உள்ளன என்றும், அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.



  • 18:28 (IST) 10 Nov 2021
    சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

    தெற்கு வங்க கடலில் நிலை கொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 5 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை 6 மணி அளவில் மாமல்லபுரம் அருகே கரையை கடக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 18:24 (IST) 10 Nov 2021
    தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு

    தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், பல மாவட்டங்களுக்கு ரெட் அலார்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "மழையால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவ விரும்பும் தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி அழைப்பு விடுத்து்ளளது.



  • 16:55 (IST) 10 Nov 2021
    சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு

    தமிழகத்தில் சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர், திருவண்ணாமலை, நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், நீலகிரி, கோவை, தென்காசி, ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுவை காரைக்கால் பகுதிகளில் அடுத்த 3 மணி நேரத்திற்கு இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 16:16 (IST) 10 Nov 2021
    மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

    வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க 10 மாவட்டங்களுக்கு மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை நியமனம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.



  • 14:53 (IST) 10 Nov 2021
    சென்னையில் மீண்டும் கன மழை

    மயிலாப்பூர், நுங்கம்பாக்கம், தி.நகர், கிண்டி, சைதாப்பேட்டை , மாம்பலம், ஆழ்வார்பேட்டை பகுதியில் கடந்த 1 மணி நேரமாக கன மழை பெய்து வருகிறது.



  • 13:43 (IST) 10 Nov 2021
    சென்னைக்கு இன்றும், நாளையும் ரெட் அலர்ட் - வானிலை மையம்

    சென்னையில் இன்றும், நாளையும் அதி கன மழைக்கான ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தலைவர் தகவல் தெரிவித்துள்ளார்.



  • 12:35 (IST) 10 Nov 2021
    சென்னை உள்பட 8 மாவட்டங்களில் அதிகனமழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம்

    சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, புதுச்சேரியில் அதி கனமழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 11:59 (IST) 10 Nov 2021
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்க வாய்ப்பு

    காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை காலை வட தமிழக கடலோரப் பகுதிகளை நெருங்கும். ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை மாலை கடலூர் அருகே கரையைக் கடக்க வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது



  • 11:47 (IST) 10 Nov 2021
    பேரிடர் கட்டுப்பாட்டு மையத்தில் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு

    சென்னை எழிலகத்தில் உள்ள மாநில அவசர கட்டுப்பாட்டு மையத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு செய்தார். அப்போது கட்டுப்பாட்டு மையத்தின் செயல்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் முதல்வர் கேட்டறிந்தார்



  • 11:29 (IST) 10 Nov 2021
    இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க கூடாது

    இரவு நேரத்தில் செம்பரம்பாக்கம் ஏரியை திறக்க கூடாது என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் அறிவித்துள்ளார்.



  • 11:29 (IST) 10 Nov 2021
    சென்னையில் இருந்து 850 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி

    சென்னையில் இருந்து 850 கி.மீ தொலைவில் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி நிலை கொண்டுள்ளது. நாளை சென்னை கடலூர் அருகே கரையை நெருங்கும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் உள்ளிட்ட 25 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது



  • 11:15 (IST) 10 Nov 2021
    சென்னை நகர் முழுவதும் கனமழை

    சென்னை - கடலூர் - ஸ்ரீஹரிகோட்டா வரை உள்ள பகுதிகளில் இன்று மதியம் துவங்கி நாளை மதியம் வரை கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என்று தமிழ்நாடு வெதர்மென் ப்ரதீன் ஜான் கூறியுள்ளார். கிழக்கு கடற்கரை சாலை துவங்கி சென்னை நகர் முழுவதும் கனமழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 11:04 (IST) 10 Nov 2021
    நவம்பர் 13-ல் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி

    வங்கக் கடலில் நவம்பர் 13ம் தேதி அன்று புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுவடைந்து வடமேற்கில் நகர்ந்து அடுத்த ஓரிரு நாட்களில் தமிழகத்திற்கு கனமழையை தரும் என்றும் அறிவிப்பு



  • 10:12 (IST) 10 Nov 2021
    முழுக்கொள்ளளவை எட்டியது வைகை

    வைகை அணை 71 அடி கொள்ளளவை எட்டிய நிலையில் 7 மதகுகள் வழியாக வைகை அணைக்கு வரும் 3000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. பாசன கால்வாய் வழியாக வைகை அணையில் நீர் திறக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை, திண்டுக்கல், தேனி உள்ளிட்ட ஐந்து மாவட்டங்களில் வைகை கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.



  • 09:12 (IST) 10 Nov 2021
    சென்னை விரைந்தது தேசிய பேரிடர் மேலாண்மை குழு

    தமிழகம் மற்றும் புதுவையில் கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில் 13 தேசிய பேரிடர் மேலாண்மை குழு தமிழகம் வந்தது. 5 குழுக்கள் சென்னையில் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.



  • 08:59 (IST) 10 Nov 2021
    நாகையில் வெளுத்து வாங்கும் கனமழை

    கடந்த 24 மணி நேரத்தில் நாகையில் 29 செ.மீ மழையும், வேதாரண்யம் பகுதியில் 25 செ.மீ மழையும், தலைஞாயிறு பகுதியில் 23 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.



  • 08:42 (IST) 10 Nov 2021
    கோவையில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை

    கோவை மாவட்டத்தில் கனமழை காரணமாக இன்றூ பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் கோவை மாவட்ட ஆட்சியர்.



  • 08:30 (IST) 10 Nov 2021
    மீனவர்களுக்கு எச்சரிக்கை

    தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடல், குமரி பகுதி, மன்னார் வளைகுடா, மற்றும் தமிழக கடற்கரை மற்றும் ஆந்திர கடற்கரையில் காற்றின் வேகம் 40 முதல் 50 கி.மீ வேகத்தில் வீசக் கூடும். எனவே இந்த பகுதிக்கு மீனவர்கள் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.



  • 08:17 (IST) 10 Nov 2021
    சென்னை மக்களின் கவனத்திற்கு

    மழை வெள்ளத்தில் நீங்கள் தவித்துக் கொண்டிருந்தால், உங்களுக்கு உடனடியாக அரசின் உதவி தேவைப்படும் பட்சத்தில் 1913 என்ற எண்ணுக்கு அழையுங்கள். அதே போன்று சமூக வலைதளங்களில் chennai1913 என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்துங்கள்



  • 08:00 (IST) 10 Nov 2021
    சென்னையில் 09/11/2021 அன்று பதிவான மழையின் அளவு

    09ம் தேதி அன்று சென்னையில் மொத்தமாக 174.00 மி.மீ மழை பதிவாகியது. சராசரி மழையின் அளவு 15.83% ஆகும். அதிகபட்சமாக மயிலாப்பூரில் 32.60 மி.மீ மழை பதிவாகியுள்ளது. குறைந்தபட்சமாக மீனம்பாக்கத்தில் 5.80 மி.மீ மழை பதிவாகியுள்ளது.



  • 07:52 (IST) 10 Nov 2021
    திருப்பூரில் பள்ளிகளுக்கு விடுமுறை

    திருப்பூர் மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக இன்று பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் வினித்



  • 07:51 (IST) 10 Nov 2021
    நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக நாமக்கல் மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா பி.சிங் அறிவித்துள்ளார்



  • 07:50 (IST) 10 Nov 2021
    ராணிப்பேட்டை மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் அறிவித்துள்ளார்.



  • 07:50 (IST) 10 Nov 2021
    திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக இன்று திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அறிவித்துள்ளார் மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.



Tamil Nadu Chennai Rains Northeast Monsoon
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment