Advertisment

Chennai Rains : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Chennai Rain Live Updates, Tamil Nadu Rain Today Live : இன்று மழை தொடர்பான அனைத்து அப்டேட்களையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Chennai Rains : கனமழை காரணமாக பள்ளிகளுக்கு நாளை விடுமுறை

Chennai, Tamil Nadu Rain Live News: : சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சி ஆகிய மாவட்டங்களில் 45 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காலை 10 மணிக்குள் இம்மாவட்டங்களில் தீவிர கனமழை பெயும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Advertisment

Tamil Nadu, Chennai IMD Alert News : 9 மாவட்டங்களில் மிதமான கனமழைக்கு வாய்ப்பு

கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், ராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, குமரி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் மிதமான கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

மழை நிற்க கூடாது VS மழை நிற்கணும் - சென்னை மக்கள் கருத்து என்ன?

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர் வரத்து 5240 கனஅடியாக அதிகரிப்பு

செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து விநாடிக்கு 850 கனஅடியில் இருந்து 5240 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஏரியில் இருந்து தொடர்ந்து 5வது நாளாக 2,000 கன அடிக்கு உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது

  1. காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் இடம் மாற்றம்: சென்னைக்கு பலத்த மழை
  2. சென்னை பெருவெள்ளம்: தவறான நீர்நிலை மேலாண்மையே இன்னல்களுக்கு காரணம்
  3. என் இருப்பிடத்தை எனக்குத் தாருங்கள்… நான் யாரையும் தொந்தரவு செய்ய மாட்டேன்!

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:47 (IST) 11 Nov 2021
    கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை – அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



  • 21:47 (IST) 11 Nov 2021
    கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை – அளிக்கப்படுவதாக அந்தந்த மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

    திருவண்ணாமலை, வேலூர் மாவட்டங்களில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கனமழை காரணமாக நாளை விடுமுறை

    சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை



  • 21:44 (IST) 11 Nov 2021
    நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதால மாவட்ட ஆட்சியர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.



  • 19:11 (IST) 11 Nov 2021
    கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை

    கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.



  • 18:29 (IST) 11 Nov 2021
    கனமழைக்கான ரெட் அலர்ட் தொடர்கிறது - அமைச்சர்

    சற்று முன் செய்தியாளர்களை சந்தித்த பேரிடர் மேலாண் துறை அமைச்சர் கூறுகையில், காற்றும் கன மழையும் தொடர்ந்து இருக்கும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரத்தில் அதி கன மழை பெய்துள்ளது மழை நீரை வெளியேற்றும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது காற்று மற்றும் கனமழைக்கான ரெட் அலர்ட் தொடர்கிறது என்று கூறியுள்ளார்.



  • 18:25 (IST) 11 Nov 2021
    சென்னை சைதாப்பேட்டை அரங்கநாதன் சப்போ குறித்து ட்விட்

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாநகரின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில் உள்ளது இந்நிலையில் சென்னை சைதாப்பபேட்டை அரங்கநாதன் சப்வேயில் தண்ணீர் நிரம்பியுள்ளதை சுட்டிக்காட்டி ட்விட் செய்துள்ள ஒருவர், மக்கள் அனைவரும் அதிகாரிகள் பரிசாக வழங்கிய இந்த புதிய நீச்சல் குளத்தை பார்த்து பிரம்பித்து போயுள்ளனர் என்று கூறியுள்ளார்.



  • 18:20 (IST) 11 Nov 2021
    இதுதான் சென்னையின் பிரபலமான போட் கிளப்

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாநகரின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில் உள்ளது இந்நிலையில் சென்னையில் தண்ணீரால் சூழப்பட்டுள்ள புகைப்படத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள ஒருவர் இதுதான் சென்னையின் பிரபலமான படகு கிளப். இங்குதான் ஒருவர் சதுரஅடி ரூ35000 ஆயிரத்திற்கு வாங்குகிறார். இங்கேயே இப்படி என்றால் மற்ற ஏரியாக்களை நினைத்து பாருங்கள் என்று பதிவிட்டுள்ளார். .



  • 18:14 (IST) 11 Nov 2021
    சென்னை அண்ணா நகரில் பலத்த காற்று : மக்கள் பாதுகாப்பாக இருக்க அறிவுறுத்தல்

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாநகரின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில் உள்ளது இந்நிலையில் அண்ணா நகரில் பலத்த காற்று வீசி வரும் நிலையில், 3 மணி நேரமாக மின்சாரம் தடை செய்யப்பட்டுள்ளது. மேலும் பலத்த காற்று வீசுவதால் கார் உரிமையாளர்கள் தங்களது வாகனங்களை மரத்திற்கு அருகில் நிறுத்த வேண்டாம் என்றும் அனைவரும் பாதுகாப்பாக வீட்டிற்குள் இருக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.



  • 18:08 (IST) 11 Nov 2021
    சென்னையில் கனமழை : பல ஆண்டுகளுக்கு பின் நிரம்பிய மைலாப்பூர் குளம்

    சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வரும் நிலையில், மாநகரின் பல இடங்கள் வெள்ளத்தால் மூழ்கிய நிலையில் உள்ளது இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக பல ஆண்டுகளுக்கு பிறகு முதல்முறையிகா மைலாப்பூர் சித்திரைக்குளம் நிரம்பியுள்ளது. இது தொடர்பாக புகைப்படம் ட்விட்டர் பக்கத்தில் வைரலாகி வருகிறது



  • 17:29 (IST) 11 Nov 2021
    சென்னையில் அதி கனமழைக்கான ரெட் அலர்ட் வாபஸ்

    சென்னையில் அதிகனமழைக்கான ரெட் அலர்ட் திரும்பப் பெறப்படுகிறது; பலத்த காற்று வீசும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிகனமழைக்கான வாய்ப்பு குறைகிறது என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.



  • 17:00 (IST) 11 Nov 2021
    காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையை கடக்கத் தொடங்கியது - வானிலை ஆய்வு மையம்

    வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னை அருகே கரையை கடக்கத் தொடங்கியது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 16:44 (IST) 11 Nov 2021
    மழை பாதிப்பு: தமிழக அரசுக்கு ரூ.1000 கோடி நிதி வழங்க வேண்டும்... மத்திய அரசுக்கு ராமதாஸ் வலியுறுத்தல்

    மழை நிவாரணப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசுக்கு முதற்கட்டமாக குறைந்தபட்சம் ரூ.1,000 கோடி நிதி வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளை மதிப்பிடுவதற்காக அதிகாரிகள் குழுவை மத்திய அரசு அனுப்ப வேண்டும் என்று மத்திய அரசுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.



  • 16:42 (IST) 11 Nov 2021
    காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை நெருங்கிய பின் தொடர்ந்து வலுவிழக்கும்... படிப்படியாக மழை குறையும்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் இன்று கரையை நெருங்கிய பின் தொடர்ந்து வலுவிழக்கும் இதனால் தமிழ்நாடு ஆந்திராவில் தொடரும் கனமழை நாளை முதல் படிபடியாக குறைய தொடங்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 16:30 (IST) 11 Nov 2021
    சென்னையில் மழை ஓய்ந்தது; காற்று வீசுவதால் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் - காவல்துறை

    சென்னையில் தொடர்ந்து மழை பெய்து வந்த நிலையில், 2 மணி நேரமாக மழை சற்று ஓய்ந்துள்ளது. ஆனால், காற்று வேகமாக வீசுவதால் தேவையின்றி யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம் என காவல்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 16:20 (IST) 11 Nov 2021
    பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிரம்பியது; பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் போக்குவரத்து பாதிப்பு

    சென்னை பள்ளிக்கரணை நாராயணபுரம் ஏரி நிறைந்து வழிவதால் பல்லாவரம் - துரைப்பாக்கம் சாலையில் 2 அடிக்கு தண்ணீர் தேங்கியதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.



  • 15:57 (IST) 11 Nov 2021
    சென்னையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்; முதல்வர் தொடங்கி வைக்கிறார்.

    சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட 200 வார்டுகளிலும் நாளை சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற உள்ளது.

    சென்னை ஆழ்வார்பேட்டையில் சிறப்பு மருத்துவ முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார்.



  • 15:55 (IST) 11 Nov 2021
    சென்னையில் நிரம்பி வழியும் மயிலாப்பூர் சித்திரக்குளம்; வெள்ளத்தில் மூழ்கிய சாலை

    சென்னையில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், மயிலாப்பூரில் உள்ள சித்திரக்குளம் நிரம்பி வழிகிறது. மழை காரணமாக அப்பகுதியில் உள்ள சாலைகள் வெள்ளத்தில் மூழ்கி உள்ளன.



  • 15:28 (IST) 11 Nov 2021
    தொடர் மழையால் 61,700 மின் இணைப்புகள் துண்டிப்பு

    கனமழையால் சென்னையில் மொத்தமுள்ள 44 லட்சம் மின் இணைப்புகளில் 61,700 மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது



  • 14:05 (IST) 11 Nov 2021
    கனமழையால் விமான சேவை பாதிப்பு

    தொடர் மழை காரணமாக சென்னையில் விமான சேவை 2ஆம் நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் அல்லது ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மாலை 6 மணி நேர வரை விமான வருகை ரத்து செய்யப்படுவதாகவும், சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:59 (IST) 11 Nov 2021
    சென்னையில் தரை காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசும்

    சென்னைக்கு தென்கிழக்கில் சுமார் 100 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டுள்ளது. இதன் காரணமாக சென்னையில் தரை காற்று 40 முதல் 45 கி.மீ. வேகத்தில் வீசும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.



  • 13:53 (IST) 11 Nov 2021
    கனமழையால் விமான சேவை பாதிப்பு

    தொடர் மழை காரணமாக சென்னையில் விமான சேவை 2ஆம் நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் அல்லது ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மாலை 6 மணி நேர வரை விமான வருகை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:44 (IST) 11 Nov 2021
    கனமழையால் விமான சேவை பாதிப்பு

    தொடர் மழை காரணமாக சென்னையில் விமான சேவை 2ஆம் நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் அல்லது ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன.



  • 13:41 (IST) 11 Nov 2021
    கனமழையால் விமான சேவை பாதிப்பு

    தொடர் மழை காரணமாக சென்னையில் விமான சேவை 2ஆம் நாளாக பாதிக்கப்பட்டுள்ளது. டெல்லி, கொல்கத்தா, மதுரை, திருச்சி உள்ளிட இடங்களில் இருந்து சென்னை வந்த 11 விமானங்கள் பெங்களூர் அல்லது ஹைதராபாத்திற்கு திருப்பி விடப்பட்டுள்ளன. மாலை 6 மணி நேர வரை விமான வருகை ரத்து செய்யப்படுவதாகவும், சென்னையில் இருந்து செல்லும் விமானங்கள் தொடர்ந்து இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:39 (IST) 11 Nov 2021
    திருவள்ளூரில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை (12.11.21) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 13:26 (IST) 11 Nov 2021
    முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடல்

    வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்பட்டுள்ள பாதிப்புகள் மற்றும் மீட்பு பணிகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் ஆளுநர் ஆர்.என்.ரவி தொலைபேசியில் கலந்துரையாடினார்.



  • 12:55 (IST) 11 Nov 2021
    என்டிஆர்எப் குழு தயார்நிலை

    மழை பாதித்த இடங்களுக்கு செல்ல என்டிஆர்எப் குழு தயார்நிலையில் இருக்கிறது. பாதிப்புகளை கணக்கீடு செய்து தேவைக்கேற்ப மத்திய அரசிடம் உதவி கேட்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.



  • 12:32 (IST) 11 Nov 2021
    பயிர்சேத அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு

    மழை வெள்ளம் பாதித்த டெல்டா மாவட்டங்களில் பயிர்சேத அறிக்கை அளிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி தலைமையிலான இந்தக் குழுவில் அமைச்சர்கள் பெரிய கருப்பன், தங்கம் தென்னரசு, ரகுபதி, மெய்யநாதன், அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.



  • 12:24 (IST) 11 Nov 2021
    கடலூர் செல்லும் முதல்வர் ஸ்டாலின்

    வெள்ள பாதிப்புகள் குறித்து டெல்டா மாவட்டங்களில் ஆய்வு மேற்கொள்வதற்காக இன்று மாலை முதல்வர் மு.க.ஸ்டாலின் கடலூர் செல்கிறார்.



  • 12:06 (IST) 11 Nov 2021
    சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் காற்றழுத்த மண்டலம்

    காற்றழுத்த தாழ்வு மண்டலம், சென்னைக்கு தென்கிழக்கே 160 கி.மீ தொலைவில் மையம் கொண்டுள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



  • 11:06 (IST) 11 Nov 2021
    ஜேசிபி கொண்டு மிதக்கும் கழிவுகள் நீக்கம்

    விருகம்பாக்கம் கால்வாயில் மழையால் அடித்து வரப்படும் மிதக்கும் கழிவுகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.

    விருகம்பாக்கம் கால்வாயில் மழையால் அடித்து வரப்படும் மிதக்கும் கழிவுகள் ஜேசிபி இயந்திரம் கொண்டு அகற்றப்பட்டு வருகிறது.

    Garbage that is flowing into the canal in virugambakkam is been continuously removed.@GSBediIAS @vishu_mahajan chennairains chennaicorporation pic.twitter.com/RKRfjwr1ak

    — Greater Chennai Corporation (@chennaicorp) November 11, 2021


  • 10:50 (IST) 11 Nov 2021
    சென்னையை நெருங்குகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம் - வானிலை மையம் எச்சரிக்கை

    காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையை நெருங்குவதால் வட சென்னைப் பகுதியில் இன்று மாலையில் தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது



  • 10:33 (IST) 11 Nov 2021
    பாம்பு புகுந்தால் என்ன செய்வது? உதவி எண் இங்கே

    சென்னயில் மழை வெள்ளம் சூழ்ந்துள்ள நிலையில் வீடுகளுக்குள் பாம்பு நுழைந்தால் வனத்துறை அலுவலர்களை நீங்கள் 044-22200335 என்ற எண்ணிலும், 9840648011 என்ற எண்ணிலும் தொடர்பு கொண்டு உதவியை நாடலாம்.



  • 10:32 (IST) 11 Nov 2021
    முதல்வர் அவசர ஆலோசனைக் கூட்டம்

    தொடர்ந்து பருவமழை தீவிரம் அடைந்து வருகின்ற நிலையில், அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த உள்ளார்



  • 10:27 (IST) 11 Nov 2021
    தேகங்களை தீர்க்க கூடுதலாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது

    ரயில் பயணிகளுக்கு எழும் சந்தேகங்களை தீர்க்க கூடுதலாக இரண்டு தொலைபேசி எண்களை அறிவித்துள்ளது தெற்கு ரயில்வே 1. 044-25330952 2. 044-25330953 மொபைல் எண்: 83000 52104 ஆகிய எண்களில் தொடர்பு கொண்டு உங்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்து கொள்ளுங்கள்



  • 10:06 (IST) 11 Nov 2021
    முகையூரில் சூறை காற்று வீசியதால் மின்சாரம் துண்டிப்பு

    செங்கல்பட்டு மாவட்டம் கிழக்கு கடற்கரை சாலையில் கல்பாக்கம் அருகே உள்ள முகையூரில் பலத்த சூறை காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது



  • 09:45 (IST) 11 Nov 2021
    பயணிகள் முன்கூட்டியே விமான நிலையம் வரவும் - சென்னை விமான நிலையம்

    அட்டவணைப்படியே சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானங்கள் புறப்படுகிறது. கனமழை எச்சரிக்கை உள்ளதால் பயணிகள் முன்கூட்டியே விமான நிலையத்திற்கு வருகை புரிந்து சிரமத்தை தவிர்க்க வேண்டும் என்றும் விமான நிலையம் அறிவித்துள்ளது.



  • 09:43 (IST) 11 Nov 2021
    மகாலிங்கபுரம் இரு வழி சாலை ஒருவழி சாலையாக மாற்றம்

    சென்னை நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரி வளாகத்தில் இருந்த மிகவும் பழமையான தூங்குமூஞ்சி மரம் அடியோடு பெயர்ந்து விழுந்ததுள்ளது. இதனால் மகாலிங்கபுரம் இருவழி சாலை ஒருவழி சாலையாக மாற்றப்பட்டுள்ளது



  • 09:40 (IST) 11 Nov 2021
    ஸ்ரீபெருமந்தூர் ஏரி முழுக் கொள்ளளவை எட்டியது

    ஸ்ரீபெருமந்தூர் ஏரி தன்னுடைய முழுக் கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீரானது விநாடிக்கு 235 கன அடியாக வெளியேறி வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது



  • 09:11 (IST) 11 Nov 2021
    சென்னை புறநகர் ரயில் சேவை எப்படி இருக்கும்?

    பீச் முதல் தாம்பரம் மற்றும் செங்கல்பட்டு வரை செல்லும் புறநகர் ரயில்கள் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணைப்படி செயல்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ‘

    Dear passengers, all services from Madras Beach towards Tambaram & Chengalpattu are running as per the Sunday schedule. We are constantly monitoring the situation and will constantly update you regarding any further disruption of train services. We request your kind cooperation.

    — DRM Chennai (@DrmChennai) November 11, 2021


  • 08:28 (IST) 11 Nov 2021
    சென்னையில் விடிய விடிய தொடரும் மழை

    நேற்று மாலை 05.30 மணி முதல் இன்றூ காலை 05:30 மணி வரை பெய்த அதிகபட்சமாக எண்ணூரில் 17.5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. நுங்கம்பாக்கத்தில் 14 செ.மீ மழையும், எம்.ஆர்.சி. நகரில் 13.6 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.



  • 07:59 (IST) 11 Nov 2021
    11 சுரங்கப் பாதைகள் மூடல்

    வியாசர்பாடி சுரங்கப்பாதை, கணேஷ்புரம் சுரங்கப்பாதை, திருவொற்றியூர் அஜாக்ஸ் சுரங்கப்பாதை, கெங்கு ரெட்டி சுரங்கப்பாதை, மேட்லி சுரங்கப்பாதை, துரைசாமி சுரங்கப்பாதை, பழவந்தாங்கல் சுரங்கப்பாதை, தாம்பரம் சுரங்கப்பாதை, அரங்கநாதன் சுரங்கப்பாதை, வில்லிவாக்கம் சுரங்கப்பாதை, கக்கன் சுரங்கப்பாதை



  • 07:53 (IST) 11 Nov 2021
    மின்சாரம் துண்டிப்பு

    சென்னை முழுவதும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால் தியாகராய நகர், மேற்கு மாம்பலம், சூளைமேடு, புரசைவாக்கம், பெரம்பூர் உள்ளிட்ட இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது



  • 07:51 (IST) 11 Nov 2021
    பூண்டு ஏரியில் நீர் திறப்பு அதிகரிப்பு

    பூண்டு ஏரிக்கு வரும் நீர் வரத்து 8 ஆயிரம் கனஅடியாக

    உள்ள நிலையில், ஏரியில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு 5 ஆயிரம் அடியில் இருந்து 6 ஆயிரம் அடியாக அதிகரிகப்பட்டுள்ளது.



  • 07:50 (IST) 11 Nov 2021
    புழல் ஏரியில் நீர் திறப்பு

    திருவள்ளூர் மாவட்டம் புழல் ஏரிக்கு வரும் நீரின் அளவு 10 ஆயிரம் கனஅடியாக இருக்கிறது. நீர் திறப்பு 2 ஆயிரம் கன அடியில் இருந்து 3 ஆயிரம் கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.



  • 07:49 (IST) 11 Nov 2021
    சென்னையில் 11 சுரங்கப்பாதைகள் மூடல்

    கனமழை காரணமாக நகரின் பல்வேறு பகுதிகளில் நீர் தேங்கியுள்ளது. இதன் காரணமாக 11 சுரங்கங்கள் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.



  • 07:49 (IST) 11 Nov 2021
    திருவண்ணாமலையில் பள்ளிகளுக்கு விடுமுறை

    திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளது மாவட்ட நிர்வாகம்



  • 07:48 (IST) 11 Nov 2021
    குமரி மாவட்டத்தில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

    குமரி மாவட்டத்தில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்.



  • 07:48 (IST) 11 Nov 2021
    ஈரோடு மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை

    மழையின் காரணமாக ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார் அம்மாவட்ட ஆட்சியர்



  • 07:47 (IST) 11 Nov 2021
    தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை

    கனமழை காரணமாக தர்மபுரி, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.



  • 07:46 (IST) 11 Nov 2021
    சீற்றத்துடன் காணப்படும் கோவளம்

    விடிய விடிய பெய்து வரும் கனமழையால் செங்கல்பட்டு மாவட்டம் கோவளத்தில் கடலின் அலைகள் சீற்றத்துடன் காணப்படுகின்றன



Tamil Nadu Chennai Rains
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment