Advertisment

நல்ல செய்தி இல்லை: சென்னையில் 12 மண்டலங்களில் மீண்டும் கொரோனா வேகம் அதிகரிப்பு

மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிப்பது மற்றும் இ-பாஸ் முறையை அகற்றுவது போன்றவை தொற்றுநோயைத் துரிதப்படுத்தியிருக்கலாம்

author-image
WebDesk
New Update
Chennai positive cases Tamil News

Chennai positive cases Tamil News

Chennai Corona update: குறுகிய காலத்திற்கு நகரத்தில் கொரோனா தொற்று பரவும் வேகம் குறைந்த வேளையில், தற்போது மீண்டும் நோய் பரவும் வீரியம் அதிகரித்துள்ளது. ஒரு வாரத்திற்கு மேலாகத் தினமும் 1,200-க்கும் மேற்பட்ட வழக்குகளைப் பதிவு செய்து வருகிறது சென்னை. 15 கார்ப்பரேஷன் மண்டலங்களில் 12 வழக்குகள் பாசிட்டிவ் வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Advertisment

செப்டம்பர் மாதத்தில் கிட்டத்தட்ட மூன்று வாரங்களுக்கு நகரத்தில் தினசரி 1,000-க்கும் குறைவான வழக்குகள் பதிவாகின. ஆனால், அந்த மாதத்தின் இறுதி வாரத்தில் தினசரி எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது. கார்ப்பரேஷன் அதிகாரிகள், லாக்டவுன் நடவடிக்கைகளில் தளர்வுகளை மேற்கோள் காட்டி, இந்த அதிகரிப்பு "இயற்கை" என்று குறிப்பிட்டனர். "இப்போது முழு நகரமும் பொருளாதார நடவடிக்கைகளுக்காகத் திறக்கப்பட்டிருக்கிறது.

மக்கள் பேருந்துகளில் பயணம் செய்கிறார்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களுக்கும் செல்லத் தொடங்கியிருக்கிறார்கள். உணவகங்களும் செயல்படுகின்றன. எனவே, நோய் தோற்று வழக்குகள் அதிகரிப்பது இயல்பு என்று ஓர் அதிகாரி கூறுகிறார். ஆகஸ்ட் மாத இறுதியில் குறைவான வழக்குகளைப் பதிவுசெய்த திருவொற்றியூர், கடந்த ஏழு நாட்களில் அனைத்து மண்டலங்களுக்கிடையில் தினசரி வழக்கு வளர்ச்சியாக 9.6 சதவிகிதத்தை எட்டியுள்ளது. அதனைத் தொடர்ந்து 5.4 சதவிகித வளர்ச்சியுடன் தண்டையார்பேட்டை உள்ளது.

அதேபோல், மாதவரம் மற்றும் ஆலந்தூர் ஆகிய பகுதிகளும் 5.4 மற்றும் 5.3 சதவிகித வழக்கு வளர்ச்சியைப் பதிவு செய்கின்றன. இரட்டை இலக்க எண் (10 சதவிகிதம்) வழக்குகள் சதவிகிதத்தைக் கொண்ட ஒரே மண்டலம் ஆலந்தூர் மட்டுமே. சிறிய வீழ்ச்சிக்குப் பிறகு, வட சென்னையில் கிட்டத்தட்ட அனைத்து மண்டலங்களும் எழுச்சியைப் பதிவு செய்கின்றன. ஆகஸ்ட் மாத இறுதியில் 80 ஆக்டிவ் வழக்குகளுக்கு எதிராக, மணாலியில் தற்போது 250 ஆக்டிவ் வழக்குகள் உள்ளன. அதே நேரத்தில் தண்டையார்பேட்டையில் இந்த எண்ணிக்கை 500-லிருந்து 800-ஆக உயர்ந்துள்ளது.

சென்னையின் மொத்த வழக்குகளில் 7% மட்டுமே இப்போது ஆக்டிவாக உள்ளது:

கட்டுப்பாட்டு உத்திகள் மற்றும் பொதுச் சுகாதார அமைப்பு எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகிறது என்பதை மதிப்பிடுவதற்கு இனிமேல் இறப்பு விகிதத்தை அளவிடுவது முக்கியமானது என்று மாநகராட்சி அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார். “நாங்கள் அறிகுறி உள்ள வழக்குகளை முன்கூட்டியே கண்டுபிடித்து சிகிச்சைக்காக அனுப்புகிறோம். அறிகுறி இல்லாதவர்களும் காய்ச்சல் முகாம்களில் சோதிக்கப்படுகிறார்கள். சுகாதார அமைப்பு வலுவாக இருக்கிறது" என்றும் அவர் கூறியுள்ளார்.

மாவட்டங்களுக்கு இடையேயான பயணத்தை அனுமதிப்பது மற்றும் இ-பாஸ் முறையை அகற்றுவது போன்றவை தொற்றுநோயைத் துரிதப்படுத்தியிருக்கலாம் என மேலும் அந்த அதிகாரி சந்தேகிக்கிறார். “இப்போது, ஆயிரக்கணக்கான மக்கள் தினசரி வேலைக்காகச் சென்னை வருகிறார்கள். இந்த சூழ்நிலையில் தொற்றுநோயைக் கண்காணிப்பது கடினம்’’ என்றும் கூறினார். நகரத்தின் மொத்த பாதிக்கப்பட்ட வழக்குகளில் 7 சதவிகிதம் மட்டுமே ஆக்டிவாக உள்ளது. 91 சதவிகித நோயாளிகள் குணமடைந்துள்ளனர். இறப்பு விகிதம் 2 சதவிகிதத்திற்கும் குறைவாகவே உள்ளது.

பாதிக்கப்பட்ட ஆறு பேருக்கு எந்தவிதமான நோயுற்ற அறிகுறியும் இல்லை:

இறந்தவர்களில், ஆறு பேருக்கு நோயுற்ற அறிகுறிகள் எதுவுமில்லை. சேலத்தைச் சேர்ந்த 33 வயதான ஒருவர், சக நோய்களின் அறிகுறிகள் எதுவும் இல்லாமல் இறந்த இளையவர். இவர், கடந்த செப்டம்பர் 26 அன்று சேலம் மோகன் குமாரமங்கலம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கோவிட் 19 பாசிட்டிவ் என முடிவு வர, சுவாசக் கோளாறு, கோவிட் நிமோனியா காரணமாக உயிரிழந்துள்ளார்.

ராயபுரத்திலும் தற்போது 1,000 வழக்குகள் உள்ளன.

தற்போது, சென்னையில் 761 தெருக்களில் ஆக்டிவ் வழக்குகள் உள்ளன. இதில், பத்து கட்டுப்பாட்டு மண்டலங்கள் மட்டுமே உள்ளன.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"

Corona Virus Covid 19
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment