Advertisment

Anti CAA Protest: 4-வது நாளாக தொடரும் போராட்டம்

ஷாஹீன்பாக், வண்ணாரப்பேட்டை இரண்டையும் ஒன்றாக இணைத்து இப்பகுதியை ஷாஹீன்பேட்டை என்று அழைத்தால் என்ன? - போராட்டக்காரர்கள்!

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Anti CAA Protest, Chennai

போராட்டத்தில் முஸ்லிம் பெண்களும், குழந்தைகளும் பெருமளவில் பங்கேற்றுள்ளனர்

Chennai Shaheen Bagh protest: இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் மத்திய அரசு கொண்டு வந்துள்ள தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள் தொகை பதிவேடு மற்றும் குடியுரிமை திருத்த சட்டம் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடத்தி வருகின்றனர். டெல்லியின் ஹாஹீன் பாக் இந்த போராட்டத்தில் மிக முக்கியமான இடத்தை பெற்றது. பெண்கள் அனைவரும் இந்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதே போன்று மும்பையிலும் ஷாஹீன் பாக் போன்ற போராட்டங்கள் நடைபெற்றது. சென்னையின் வண்ணாரப்பேட்டையில் கடந்த வெள்ளிக் கிழமையன்று (14/02/2020) ஷஜ்ஜா முனுசாமி மற்றும் அஸிஜ் முகமது சாலைகளில் போராட்டம் நடைபெற்றது. அமைதியாக நடைபெற்ற போராட்டத்தை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர். அங்கு கைது செய்யப்பட்ட பலர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

Advertisment

மேலும் படிக்க : வண்ணாரப்பேட்டை போராட்டம் : பிப்.14 இரவை கறுப்பு இரவாக்கிய காவல்துறை – ஸ்டாலின் கண்டனம்!

தமிழகம் முழுவதும் பரவிய போராட்டம்

இஸ்லாமியர்கள்  தாக்கப்பட்டத்தை கண்டித்தும், பல்வேறு பகுதியில் 15ம் தேதி காலையில் இருந்து போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. மத்திய அரசின் மூன்று திட்டங்களையும் தமிழகத்தில் நிறைவேற்ற மாட்டோம் என்று சட்ட சபையில் முதல்வர் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர். இன்று சென்னையின் ஷாகீன் பாக் போராட்டம் நான்காம் நாளை எட்டியுள்ளது. இன்று இந்த சட்டங்களுக்கு எதிராக எங்கே போராட்டங்கள் நடைபெறுகிறது? போராட்டங்களின் போது மக்கள் வைக்க இருக்கும் கோரிக்கைகள் என்னென்ன என்பதை இந்த லைவ் ப்ளாகில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

மேலும் படிக்க : சி.ஏ.ஏ தடியடி - இணை ஆணையர் கபில் குமார் மீது விசாரணை கோரும் எம்.பி. கனிமொழி

பிப்ரவரி 19ம் தேதி முற்றுகைப் போராட்டம்

பிப்ரவரி 19ம் தேதி தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று மனிதநேய மக்கள் கட்சி அறிவித்துள்ளது. தமீமுன் அன்சாரி வெளியிட்ட அறிக்கையில் சென்னை, காஞ்சி, திருவள்ளுர் மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் அன்றைய தினம் கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிடும் போராட்டம் நடைபெறும் என்று கூறியிருந்தார். இது தொடர்பான முழுமையான தகவலைப் படிக்க

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil

Live Blog

போராட்டங்களின் போது மக்கள் வைக்க இருக்கும் கோரிக்கைகள் என்னென்ன என்பதை இந்த லைவ் ப்ளாகில் பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.

 



























Highlights

    16:32 (IST)17 Feb 2020

    எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன அறிக்கை (3/3)

    ஆகவே, வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்து நீதி விசாரணை மேற்கொண்டு, தவறிழைத்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

    அதோடு, சி.ஏ.ஏ சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்ற திமுக அளித்த கோரிக்கை சபாநாயரால் நிராகரிக்கப்பட்டுள்ளதையும் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பாக கண்டிப்பதோடு, தீர்மானத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தி கேட்டுக்கொள்கின்றேன்.

    16:32 (IST)17 Feb 2020

    எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டன அறிக்கை (2/2)

    இந்த சூழலில் காவல்துறையின் அடக்குமுறையை நியாயப்படுத்தியும், போராட்டக்காரர்களின் நோக்கங்களை கொச்சைப்படுத்தும் விதத்திலும் தமிழக முதல்வர் அவர்கள் சட்டப்பேரவையில் உண்மைக்குப் புறம்பான தவறான தகவலை தெரிவித்துள்ளார். முதல்வரின் இந்த அறிக்கை கண்டிக்கத்தக்கது. அதுமட்டுமின்றி, போராட்டத்துக்கு சம்மந்தம் இல்லாத இறந்துபோன ஒருவரை வைத்து அரசியல் நடத்தினார்கள் என்ற தவறான தகவலையும் முதல்வர் தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் நடைபெற்ற போராட்டம் என்பது காவல்துறையின் தடியடியையும், பெண்கள் மீதான தாக்குதலையும் கண்டித்துதானே தவிர இறந்துபோன ஒருவரை முன்னிலைப்படுத்தி அல்ல. ஆகவே முதல்வரின் அறிக்கை முற்றிலும் உண்மைக்கு புறம்பானதாகும்.

    அமைதி வழியில் போராடிய மக்களின் மீது வன்முறையை ஏவிய காவல்துறையின் நடவடிக்கையை நியாயப்படுத்தும் முதல்வரின் அறிக்கை ஏற்கத்தக்கதல்ல. முதல்வரின் அறிக்கையானது தமிழக அரசு போராட்டங்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கும் என்ற வாக்குறுதிக்கு முரணானதாக உள்ளது.

    16:31 (IST)17 Feb 2020

    வண்ணாரப்பேட்டை காவல்துறை தடியடி குறித்த முதல்வரின் அறிக்கைக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சி கண்டனம்

    சி.ஏ.ஏ. என்.பி.ஆர்., என்.ஆர்.சி.,க்கு எதிராகவும், சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்ற தமிழக அரசை வலியுறுத்தியும், வண்ணாரப்பேட்டையில் தன்னெழுச்சியாகப் போராடி வரும் மக்கள் மீது, அடக்குமுறையை கையாண்டு தடியடி நடத்தி வன்முறையை ஏவியது காவல்துறை. அமைதியான வழியில் யாருக்கும் இடையூறு இல்லாத வகையில் நடைபெற்ற அந்த போராட்டத்தில் காவல்துறை திட்டமிட்டு அராஜக தாக்குதலை நடத்தியது. பெண்கள் மீதும் வன்முறையை ஏவியது.

    போராட்டக்காரர்களை தரதரவென இழுத்துச் சென்று வாகனத்திலும் வைத்து கண்மூடித்தனமாக காவல்துறை தாக்குதலை நடத்தியது. தக்குதலில் பலர் ரத்தக்காயம் அடைந்தனர். காயத்துக்கு சிகிச்சை பெறக்கூட அனுமதி மறுக்கப்பட்டனர். அது தொடர்பான ஏராளமான வீடியோக்கள் உலகம் பார்க்க சமூக வலைதளங்களில் உள்ளன.

    15:15 (IST)17 Feb 2020

    வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள் தான் காரணம் - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி (2/2)

    பழைய வண்ணாரப்பேட்டை போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்:

    மேற்படி போராட்டக்காரர்கள், தண்டையார்பேட்டையில் உள்ள வாணிமகால் மண்டபத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டனர். இந்நிலையில் சம்பவம் நடந்த இடத்தில் இருந்து ஆறு தெருக்கள் தாண்டி வாழ்ந்து வந்த 70 வயது நிரம்பிய முதியவர்  நோயின் காரணமாக இயற்கை மரணம் அடைந்தார். ஆனால் அவர் காவல் துறையின் தடியடியில் இறந்தார் என உண்மைக்கு மாறான வதந்தி பரப்பப்பட்டது.  அந்த வதந்தியை நம்பி தமிழகம் முழுவதும் இஸ்லாமியர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். 

    15:13 (IST)17 Feb 2020

    வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள் தான் காரணம் - சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி

    பழைய வண்ணாரப்பேட்டை  போராட்டம் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி இன்று சட்டப்பேரவையில் விளக்கம் அளித்தார்:   

    கடந்த பிப்ரவரி 14 ஆம் தேதி மாலை பழைய வண்ணாரப்பேட்டையில்  நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு தடுப்பை அமைத்து  காவல்துறையினர் அரணாக  இருந்தனர். அப்போது வெளியில் இருந்து வந்த போராட்டக்காரர்கள் காவல்துறையின் அமைதி தடுப்பை தள்ளிவிட்டு சாலை மறியல் செய்ய முற்பட்டனர். கைது செய்ய முற்பட்ட காவல்துறையினர் மீது கற்கள், சோடா பாட்டில்கள் மற்றும் செருப்புகளை போராட்டக்கார்கள்  வீசினார்கள். இவ்வாறு கலவரத்தில் ஈடுபட்ட போராட்டக்கார்களை சுமார் 82 பேரை கைது செய்து அரசு பேருந்தில் ஏற்றிய போது, பேருந்துக்குள் ஏறியவர்கள் ரகளையில் ஈடுபட்டு பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனர்.

    13:32 (IST)17 Feb 2020

    சென்னையின் ஷாஹீன்பாகில் திருமணம் செய்து கொண்ட ஜோடிகள்

    வண்ணாரப்பேட்டையில் நடைபெற்று வரும் சி.ஏ.ஏவுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு இளம் ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டுள்ளது. இந்த திருமண நிகழ்வில் மணமக்கள் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் உடன் இருந்தனர். கையில் சி.ஏ.ஏவுக்கு எதிரான பதாகைகளுடன் இந்த திருமணம் நடைபெற்றது.

    13:17 (IST)17 Feb 2020

    தீர்மானம் கொண்டுவர அனுமதிக்காத சபாநாயகருக்கு கண்டனம்

    12:15 (IST)17 Feb 2020

    சட்டப்பேரவையில் இருந்து வெளியேறிய திமுக

    சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் குறித்து பேரவையில் முதலமைச்சர் விளக்கம் அளித்துள்ளார். அனுமதியின்றி பொதுமக்களுக்கு இடையூறு தரும் வகையில் பலர் போராட்டம் நடத்தியதாகவும், காவலர்கள் மீது கல் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் வீசப்பட்டதாகவும் கூறிய அவர் இயற்கை மரணமடைந்த ஒருவர் போராட்டத்தில் இறந்ததாக வதந்திகள் பரவியதாகவும் அவர் அறிவித்தார். முதலமைச்சரின் பதில் திருப்தி தரவில்லை என்று கூறி திமுகவினர் பேரவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

    11:40 (IST)17 Feb 2020

    போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திரும்பப்பெற வேண்டும் - முக ஸ்டாலின்

    வண்ணாரப்பேட்டை போராட்டத்தில் பங்கேற்ற போராட்டக்காரர்கள் மீது போடப்பட்ட வழக்குகளை திருமபப் பெற வேண்டும் என்று முக ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும் தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு சி.ஏ.ஏவுக்கு எதிராக பேரவையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்றும், அமைதியான முறையில் நடைபெற்ற போராட்டத்தில் தடியடி நடத்த தூண்டியது யார் என்று கேள்வியும் எழுப்பியுள்ளார் முக ஸ்டாலின்.

    11:21 (IST)17 Feb 2020

    சட்டப்பேரவை முற்றுகைக்கு தடைகோரி மனு

    சி.ஏ.ஏ.வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றாவிட்டால் சட்டப்பேரவையை முற்றுகையிட இருப்பதாக தமிமுன் அன்சாரி அறிவித்தார். ஆனால் அந்த முற்றுகைக்கு தடைக்கோரி உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

    10:35 (IST)17 Feb 2020

    கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வருகை

    சென்னை வண்ணாரப்பேட்டையில் சி.ஏ.ஏவுக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்ற அப்பாவி மக்கள் மீது காவல்துறை தடியடி பிரயோகம் நடத்தியது. இதனை கண்டித்து கண்டன பதாகையுடன் தமிமுன் அன்சாரி சட்டப்பேரவை வந்துள்ளார்.

    09:57 (IST)17 Feb 2020

    சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் மனு அளித்த எம்.எல்.ஏக்கள்

    சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்று சட்டப்பேரவை செயலாளரிடம் மனு. சி.ஏ.ஏவுக்கு எதிராக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றக் கோரி எம்.எல்.ஏக்கள் தமிமுன் அன்சாரி மற்றும் கருணாஸ் ஆகியோர் மனு அளித்துள்ளனர்.

    09:16 (IST)17 Feb 2020

    போராட்டங்களை கண்காணிக்க12 சிறப்பு அதிகாரிகள் நியமனம்

    வண்ணாரப்பேட்டையில் நடப்பது போன்றே தமிழகத்தில் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நடைபெறும் அனைத்து போராட்டங்களையும் கண்காணிக்க12 சிறப்பு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

    09:06 (IST)17 Feb 2020

    போராட்டத்தில் ஈடுபட்ட இந்துக்கள்

    நேற்று நடைபெற்ற போராட்டத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதோர்களும் பலர் பங்கேற்றனர். அவர்களில் பெரும்பாலானோர் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களுக்கு உணவு, தண்ணீர் ஆகியவற்றை வழங்கினர்.

    08:58 (IST)17 Feb 2020

    இங்கு இஸ்லாமியர்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர்

    இங்கு இஸ்லாமியர்கள் காலம் காலமாக வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் பலர் இங்கே பல்வேறு தொழில்களை நடத்தி வருகின்றனர். நாங்கள் அனைவரும் இங்கு ஒற்றுமையாக இருக்கின்றோம். அதனால் அவர்களின் போராட்டத்தில் பங்கேற்க நாங்கள் இங்கே வந்திருக்கின்றோம் என்றும் போராட்டத்தில் பங்கேற்றவர்கள் கூறினார்கள்.

    08:44 (IST)17 Feb 2020

    மகாத்மா காந்தியின் பேரன் பங்கேற்பு

    சி.ஏ.ஏவுக்கு எதிராக சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்க மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்தி வண்ணாரப்பேட்டை வந்திருந்தார்.

    6 சிறப்பு அதிகாரிகள் நியமனம் : குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிரான போராட்டங்களை கண்காணிக்க சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபி மேற்பார்வையில் 6 அதிகாரிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். சிலை கடத்தல் தடுப்புப்பிரிவு கூடுதல் டி.ஜி.பி. அபய்க்குமார் சிங்  மதுரை மாநகர் மற்றும் மதுரை சுற்றுப்பகுதியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து ஆய்வு செய்வார்.  கூடுதல் டி.ஜி.பி. மகேஷ்குமார் அகர்வால் திருநெல்வேலி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து அறிந்து கொள்ள நியமிக்கப்பட்டுள்ளனர். பொருளாதார குற்றப்பிரிவு ஐ.ஜி. முருகன் நெல்லை சரகத்திற்கு நியமிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான முழுமையான தகவல்களைப் படிக்க

    சிவில் சப்ளை சி.ஐ.டி. ஜி.ஸ்டாலின் (எஸ்.பி) பழனி மற்றும் ஒட்டன்சத்திரம் பகுதிகளில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுவார். 13வது பட்டாலியனை சேர்ந்த கமாண்டர் வி. பாஸ்கரன் போடி மற்றும் கம்பம் பகுதிகளை பார்வையிடுவார். 5வது பட்டாலியனை சேர்ந்த கமாண்டர் தூத்துக்குடியின் காயல்பட்டினம் பகுதியில் நடைபெறும் போராட்டங்கள் குறித்து மேற்பார்வையிடுவார்.

    Chennai
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment