அக்டோபர் 5ம் தேதி முதல் மீண்டும் ஆரம்பமாகிறது சென்னை புறநகர் ரயில் சேவை!

இந்த ரயில்களில் பயணிக்க நோடல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதத்தை கையில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

By: Updated: October 2, 2020, 03:53:41 PM

Chennai suburban train services to resume from October 5 : கொரோனா பரவலின் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் சென்னை புறநகர் ரயில் சேவை நிறுத்தி வைக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக அரசு கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் சென்னையில் அக்டோபர் 5ம் தேதியில் இருந்து புறநகர் ரயில் சேவை துவங்கும் என்று தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த சேவை இயங்கும் என்பது குறிப்பிடத்தக்கது என்று அரசு தரப்பு அறிவித்துள்ளது. எந்தெந்த ரயில் சேவைகள் இயங்கும் என்பது, ரயில் நிலையங்களில் காட்சிப்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க : ஓஹோ! இது தான் பாதுகாப்பு பணியா சார்? உருட்டுக் கட்டையுடன் ”ட்யூட்டியில்” காவலர்!

பயணிகளுக்கு இருமுறை சோதனை நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. முதல் சோதனை ரயில்வே காவல்துறை அல்லது பாதுகாப்பு படையினரால் ரயில் நிலைய நுழைவாயிலில் நடத்தப்படும். அடுத்த சோதனை டிக்கெட் பரிசோதகரால் நடத்தப்படும்.

ஒரு முறைப்பயணம் அல்லது சீசன் டிக்கெட்டுகளை பணியாளர்கள் புறநகர் ரயில் நிலையங்களில் யூ.டி.எஸ். மூலமாக பெற்றுக் கொள்ளலாம். இந்த ரயில்களில் பயணிக்க நோடல் அதிகாரியிடம் இருந்து பெறப்பட்ட அனுமதி கடிதத்தை கையில் வைத்திருப்பது கட்டாயமாகிறது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai suburban train services to resume from october

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X