Advertisment

சென்னை தினத்தையொட்டி எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் பாதைகளில் மாற்றம்

Chennai Tamil News: சென்னை தினத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால், சென்னையின் பிரதான பாதைகளில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர்.

author-image
WebDesk
New Update
சென்னை தினத்தையொட்டி எலியட்ஸ் கடற்கரைக்கு செல்லும் பாதைகளில் மாற்றம்

Chennai Tamil News: சென்னை தினத்தை முன்னிட்டு போக்குவரத்து நெரிசல் ஏற்படும் காரணத்தால், சென்னையின் பிரதான பாதைகளில் சில மாற்றங்கள் கொண்டுவந்துள்ளனர்.

Advertisment

சென்னை தினமான ஆகஸ்ட் 20ஆம் மற்றும் 21ஆம் தேதிகளில், சென்னையிலுள்ள எலியட்ஸ் கடற்கரைக்கு செல்ல விரும்பும் வாகனங்களுக்கு, 7வது அவென்யுவிலிருந்தும் 6வது அவென்யுவிலிருந்தும் செல்ல அனுமதியளிக்கப்படவில்லை. மேலும் அவ்வழியில் வாகனங்கள் சென்றால், அவை 16வது குறுக்குத் தெரு வழியாக 2வது அவென்யூ நோக்கி திருப்பி விடப்படும்.

publive-image

பெருநகர சென்னை மாநகராட்சியின் திட்டப்படி ஆகஸ்ட் 20ஆம் மற்றும் 21ஆம் தேதிகளில் மதியம் 3.30 மணி முதல் இரவு 11.30 மணி வரை பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரையில், 6வது அவென்யூவில் போலீஸ் பூத் முதல் மீன் ஸ்டால் வரை போக்குவரத்து ஏற்பாடுகள் செய்யப்படும்.

மேலும், எலியட்ஸ் கடற்கரையில், 16வது குறுக்குத் தெருவில் இருந்து 6வது அவென்யூ நோக்கிச் செல்ல விரும்பும் வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, அவ்வழியில் செல்ல நினைக்கும் வாகனங்கள் தங்களின் இலக்கை அடைய 2வது அவென்யூ மற்றும் 16வது குறுக்குத் தெரு சந்திப்பில் திருப்பி விடப்படும்.

இதனுடன், 3வது மெயின் ரோட்டில் இருந்து 6வது அவென்யூ நோக்கி வருபவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, மேலும் அவ்வழிகளில் வருபவர்களுக்கு 3வது மெயின் ரோடு மற்றும் 2வது அவென்யூ சந்திப்பில் திருப்பி விடப்படும்.

எலியட்ஸ் கடற்கரையில் 4வது மெயின் ரோடு மற்றும் 5வது அவென்யூவில் இருந்து 6வது அவென்யூவிற்கு செல்லும் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது, தங்களின் இலக்கை அடைய 4வது மெயின் ரோடு மற்றும் 5வது அவென்யூ வழியாக திருப்பி செல்லலாம்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment