chennai tamilnadu rain weather : தமிழகத்தில் இந்தாண்டு சராசரியை விட 4 சதவிகிதம் அதிகமான மழை பெய்துள்ளதாகவும், ஜனவரி 10ம் தேதி வரை மழை பெய்யும் எனவும் வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை மீண்டும் தீவிரம் அடைந்துள்ளது. டிச.,25 முதல், மீண்டும் பருவமழை துவங்கி, டெல்டா மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் பரவலாக பெய்துள்ளது.நேற்று முன்தினம் இரவில் துவங்கிய மழை, நள்ளிரவையும் தாண்டி கொட்டியது. இந்த மழை, நேற்று மாலை வரை வெளுத்து வாங்கியது.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் பரவலாக மழை பெய்தது.
தமிழகத்தில் மேலும் 4 நாட்களுக்கு மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருக்கிறது.2020 ஆண்டை பொறுத்தவரை 946 மி.மீ மழை பொழிந்து உள்ளதாக கூறிய இது வழக்கத்தைவிட 4% அதிகம். தமிழக மாவட்டங்களில் வட கிழக்கு பருவ மழையானது கன்னியாகுமாரி மாவட்டத்தில் 39% குறைவான மழையும், ஈரோடு, திருச்சி 30% குறைவு, நாமக்கல், நீலகிரி 25% குறைவு என்று அவர் கூறினார். அதேபோல் விழுப்புரம் திருபத்தூர் 45% அதிகமாகவும், கடலூர் சென்னையில் 1303 மி.மி சராசரியாக பெய்யும், அதில் தற்போது 1572 மிமி கிடைத்துள்ளது. எனவே 33% அதிகம். பருவமழை ஜனவரி 10-ஆம் தேதி இருக்கும் என்றும் கூறினார்.
தமிழகத்தில் 22 மி.மீ. மழையை பெற்றுள்ளோம். அப்படியென்றால் ஜனவரி மாதத்தில் வழக்கமாக பெய்யும் 18 மிமீ மழை அளவை விட அதிகமாக வெறும் 4 நாட்களில் பெற்றுள்ளோம்.100 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சென்னையில் ஜனவரி மாதத்தில் பெய்த மழையில் நேற்று பெய்தது சிறப்பானதாகும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.