By: WebDesk
Updated: September 22, 2019, 08:32:08 AM
Chennai today weather forecast
Chennai today weather forecast : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை துவங்க இன்னும் சில காலங்கள் மட்டுமே இருக்கின்ற நிலையில் தமிழகத்தில் இன்றும் நாளையும் பல்வேறு இடங்களில் கனத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இன்று தமிழகத்தில் திருவள்ளூர், காஞ்சி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், ராமநாதபுரம், மற்றும் சிவகங்கை ஆகிய 14 மாவட்டங்களில் இன்று மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
Chennai today weather forecast : நேற்று அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்
சேலத்தின் ஓமலூர் பகுதியில் 6 செ.மீ மழை பெய்துள்ளது. திண்டுக்கல் மாவட்டத்திலும் 6 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சேலத்தின் மேட்டூர் பகுதியில் 4 செ.மீ மழை பதிவாகியுள்ளது
தஞ்சையின் அதிராம்பட்டினம் பகுதியில் 3 செ.மீ மழையும், திருவாரூர் மாவட்டத்தின் முத்துப்பேட்டையிலும் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
திருச்சியின் மணப்பாறை, திருவாரூர், தொழுதூர் மற்றும் லால்குடி பகுதியில் ஒரு செ.மீ மழை பதிவாகியுள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் கானப்படும். சில இடங்களில் கனமழைக்கான வாய்ப்புகள் உள்ளது. அதிகபட்சமாக 33 டிகிரி செல்சியஸ் வெப்பமும் 25 டிகிரி செல்சியஸ் வெப்பமும் பதிவாகும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.