Advertisment

சென்னை கத்திப்பாரா பாலம் விபத்தில் போக்குவரத்து எஸ்.ஐ. பலி: சிசி டி.வி. காட்சிகள் வெளியாகின

chennai traffic si accident today: போக்குவரத்து எஸ்.ஐ.யான நடராஜ் ஹெல்மெட் கையில் வைத்திருந்தும் அதை அணியாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
chennai traffic si accident cctv footages, chennai accident news, சென்னை கத்திப்பாரா பாலம் விபத்து

chennai traffic si accident cctv footages, chennai accident news, சென்னை கத்திப்பாரா பாலம் விபத்து

Chennai traffic si accident cctv footages: சென்னை கத்திப்பாரா பாலத்தில் போக்குவரத்து எஸ்.ஐ. நடராஜ் விபத்தில் பலியான சிசி டிவி காட்சிகள் வெளியாகின. ஹெல்மெட் அணியாததால் இந்த உயிர்ப் பலி நடந்ததாக தெரிய வந்திருக்கிறது.

Advertisment

சென்னை மவுண்ட் போக்குவரத்து காவல் துறையில் உதவி ஆய்வாளராக பணிபுரிகிறவர் நடராஜ். இவர் இன்று காலை கிண்டியில் இருந்து தாம்பரம் நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்றார். கத்திப்பாரா பாலத்தில் இடது ஓரமாக இவர் பயணித்தார். அப்போது ஹெல்மெட் வைத்திருந்தபோதும், தலையில் அணியவில்லை என தெரிகிறது.

கத்திப்பாரா பாலத்தில் இடதுபுறம் திரும்பும் வளைவில் நந்தம்பாக்கம் செல்லும் வாகனங்கள் போகவேண்டும். நேராக தாம்பரம் செல்லவேண்டிய நடராஜ், பாலத்தில் இடது ஓரமாக சென்றதால் சரியாக அந்த வளைவில் நந்தம்பாக்கம் நோக்கி திரும்பிய லாரி ஒன்று நடராஜ் மீது மோதியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

ஹெல்மெட் அணிவதன் அவசியத்தைக் கூறி சென்னை உயர் நீதிமன்றம் அடுத்தடுத்து உத்தரவுகளை பிறப்பித்ததை தொடர்ந்து, போக்குவரத்து போலீஸார் கடுமையாக நடவடிக்கைகளை சென்னையில் மேற்கொண்டு வருகிறார்கள். இதனால் முன்பு எப்போதையும்விட சென்னையில் பெரும்பாலான பயணிகள் ஹெல்மெட் அணிய ஆரம்பித்துவிட்டனர்.

ஆனால் போக்குவரத்து எஸ்.ஐ.யான நடராஜ் ஹெல்மெட் கையில் வைத்திருந்தும் அதை அணியாமல் சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஒருவேளை அவர் ஹெல்மெட் அணிந்திருந்தால் உயிர் தப்பியிருக்க வாய்ப்பு இருந்திருக்கலாம். இந்த விபத்தின் சிசி டிவி காட்சிகள் வெளியாகி, பார்ப்பவர்களை பதற வைத்துக் கொண்டிருக்கிறது.

 

Chennai
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment