Advertisment

தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்! முதல்வர் அதிரடி.

ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தண்ணீர் பிரச்சனைக்கு தீர்வு..ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயிலில் குடிநீர்! முதல்வர் அதிரடி.

cm palaniswamy announcement : சென்னை உட்பட தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சிரமம் அடைந்து வருகின்றனர். இந்நிலையில், தலைமை செயலகத்தில் அதிகாரிகளுடன் முதல்வர் பழனிசாமி இன்று (21.6.19) ஆலோசனை மேற்கொள்ள இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.

Advertisment

இதற்கிடையே, 20 லட்சம் லிட்டர் தண்ணீரை வழங்க கேரளா முன்வந்துள்ள நிலையில், அந்த உதவியை ஏற்பது தொடர்பாகவும் முதல்வர் இன்று முடிவெடுப்பார் என உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ட்விட்டரில் விளக்கி இருந்தார்.கண்டிப்பாக தமிழகத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு முக்கிய முடிவு இன்று எடுக்கப்படும் என்று அனைத்து தரப்பிலும் எதிர்பார்க்கப்பட்டது. சுமார் 2மணி நடைப்பெற்ற இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமைச்சர் எஸ்பி வேலுமணி உட்பட பலர் கலந்துக் கொண்டனர்.

ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு முதல்வர் பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் செய்தியாளர்கள் பல்வேறு கேள்விகளை எழுப்பினர். தமிழகத்தில் தண்ணீர் பிரச்சனைக்கு ஆலோசனைக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் மற்றும் தீர்வுகள் குறித்து முதல்வர் தெரிவிருப்பதாவது,

“சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்டு விட்டன. ஆனாலும் சென்னை மக்களுக்கு தேவையான நீரை கொடுத்து வருகிறோம். கடல்நீரை குடிநீராக்கும் திட்டம், நிலத்தடி நீர், குவாரிகளில் எடுக்கும் நீர் ஆகியவற்றை சேகரித்து தண்ணீர் வழங்கி வருகிறோம். ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வர ஏற்பாடு செய்ய கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

முடிந்த அளவுக்கு துரித நடவடிக்கை எடுத்து உரிய நீர் வழங்கப்படுகிறது. அதிகாரிகள் நியமனம் செய்து குடிநீர் பிரச்னையை கண்காணிக்க அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. 12 டிஎம்சி நீர் கிருஷ்ணா நதியில் இருந்து வர வேண்டும் ஆனால் 2 டிஎம்சி மட்டுமே கிடைத்தது. தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீரை கர்நாடக அரசோ தர மறுக்கிறது.

தேர்தல் வந்ததால் அரசு செயல்பட முடியாத சூழல் ஏற்பட்டது. ஆனால் நடத்தை விதிகள் முடிந்ததும் உடனடியாக கூட்டம் போட்டு, நிதி ஒதுக்கி குடிநீர் விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டோம். தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீரை கேரளா தந்தால் நன்றாக இருக்கும். இது குறித்து கேரள முதல்வருக்கு கடிதம் எழுத உள்ளேன்.

சென்னைக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் நான்கு ஏரிகளும் வறண்ட நிலையில் மக்களுக்கு தண்ணீர் கொடுக்கிறோம். இதற்கு ஊடகங்கள் ஆதரவு வழங்க வேண்டும். அனைத்து பகுதிகளுக்கும் பிரித்து பிரித்தே அம்மா குடிநீர் பாட்டில்கள் அனுப்பப்படுகின்றன. அம்மா குடிநீரை மக்கள் விரும்பி வாங்குகிறார்கள். ஜோலார்பேட்டையிலிருந்து சென்னைக்கு ரயில் மூலம் 10 மில்லியன் லிட்டர் குடிநீர் கொண்டுவர ரூ.65 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

விடுதிகள் மற்றும் உணவகங்கள் தண்ணீர் பற்றாக்குறையால் மூடப்பட்டது என்பது மிகவும் தவறான செய்தி. அதே போன்று அமைச்சர்கள் குடியிருப்புகளுக்கு அதிகப்படியாக நீர் விநியோகம் செய்யப்படுகிறது என்று கூறுவதும் தவறான செய்தி. ஏழை மக்களுக்கு குடிநீர் விநியோகிப்பதே அரசின் முதல் கடமை . தரமற்ற நீரையும், தண்ணீரை அதிக விலைக்கு விற்றாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

சென்னையில் ஒரு நாளைக்கு 9800 முறைகள் லாரிகள் மூலம் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சென்னையின் குடிநீர் பிரச்சினையை மட்டும் தீர்க்க ரூ158.42 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது” என்றார்.

இந்த பேட்டி முடிந்த  30 நிமிடங்களில்  முதல்வரிடம் இருந்து அடுத்த அறிவிப்பு வெளியானது. அதில் தமிழகத்தின் குடிநீர் பிரச்சனையை தீர்க்க கூடுதலாக 200 கோடி ஒதுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.மொத்ததில் தமிழக தண்ணீர் பற்றாக்குறையை போக்க தமிழக அரசு ரூ. 358. 42 கோடி ஒதுக்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Chennai Tamilnadu Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment