Advertisment

Tamil Nadu Rains: 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

author-image
WebDesk
New Update
Tamil news today : தொடர் மழையால் தேனி, கொடைக்கானலில் பள்ளிகளுக்கு விடுமுறை

Tamil Nadu Rains and Weather LIVE: தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

Advertisment

தமிழகத்தில் தென்மேற்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. பல மாவட்டங்களில் பலத்த மழை பெய்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு பகுதியில் தலா 13 செமீ மழை பதிவாகியுள்ளது.

உளுந்தூர்பேட்டை, வலங்கைமான் சுற்றுவட்டாரப்பகுதிகளில் தலா 12 செமீ மழை பதிவாகியுள்ளது. கடலூர் மாவட்டம் வேப்பூரில் தலா 11 செமீ மழையும் ஸ்ரீமுஷ்ணம், நீடாமங்கலம் பகுதிகளில் தலா 10 செமீ மழையும் பதிவாகியுள்ளது.

,

இந்நிலையில் அடுத்த மூன்று மணி நேரத்தில் தமிழகத்தில் உள்ள 9 மாவட்டங்களில் மிதமான மழை பெய்ய உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நீலகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.  

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment