Chennai Weather: கன்னியாகுமரி - ஊட்டி மழை, சென்னையில் மேகமூட்டம்

Ooty Weather: கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. ஊட்டியில் ஒரு செ.மீ மழை பெய்தது.

RMC Chennai Releases Tamil Nadu Weather Report: தமிழ்நாடு வானிலை குறித்து இன்று பகல் 1 மணிக்கு சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய பணி அதிகாரி காசிம் வெளியிட்டிருக்கும் தகவல்கள் வருமாறு:

ஏப்ரல் 22-ம் தேதி (இன்று) தமிழகத்தின் சில பகுதிகளில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யும். 23, 24, 25-ம் தேதிகளில் தமிழகத்தில் வெகு சில இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை இருக்கும். ஏப்ரல் 26-ம் தேதி வறண்ட வானிலை காணப்படும்.

Chennai Weather, Tamil Nadu Weather, சென்னை மழை

chennai weather Report: ஊட்டியில் ஒரு செ.மீ மழை பெய்தது.

chennai, Ooty Weather Report: சென்னை வானிலை அறிக்கை

இன்றும், நாளையும் (22, 23-ம் தேதி) வெகு சில இடங்களில் இடி மின்னல் இருக்கும். இன்று வெகு சில இடங்களில் கன மழைக்கான வாய்ப்பு இருக்கிறது. சென்னை மற்றும் சுற்றுப்புறத்தில் அடுத்த 24 மணி நேரம் வானம் மேகமூட்டமாகவும், அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 29 டிகிரி செல்சியஸ் என இருக்கும். இவ்வாறு கூறியிருக்கிறார்.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக கன்னியாகுமரி மாவட்டம் குழித்துறை, பேச்சிப்பாறை ஆகிய இடங்களில் தலா 2 செ.மீ மழை பதிவாகியிருக்கிறது. ஊட்டியில் ஒரு செ.மீ மழை பெய்தது. புயல் எச்சரிக்கை எதுவும் இல்லை.

 

Get all the Latest Tamil News and India News in Tamil at Indian Express Tamil. You can also catch all the Tamil Nadu News by following us on Twitter and Facebook

×Close
×Close