chennai weather today: தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் நகர்வு காரணமாக, தமிழகத்தில் அடுத்த நான்கு நாட்களுக்கு பரவலாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் பருவமழை பொய்த்துப்போனதால் பல இங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. இந்நிலையில் மக்கள் அனைவரும் தென் மேற்கு பருவ மழையை நம்பியுள்ளனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களான கோவை, நீலகிரி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், நெல்லை மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக் கூடும் என்றும், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், கிருஷ்ணகிரி, விழுப்புரம், கடலூர், புதுக்கோட்டை, நாகை மற்றும் காரைக்காலில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் மேற்கு பருவமழை தீவிரமடைவதன் காரணமாக அடுத்த 5 நாட்களுக்கு மத்திய அரபிக்கடல் மற்றும் தென் மேற்கு அரபிக்கடல் பகுதிகளுக்கு மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் வேண்டுகோள் விடுத்துள்ளது
Tamil Nadu news today live updates
Tamilnadu weather: மழை வரும் நாட்கள்!
15-ஆம் தேதி மாலையும் 5 மணி முதல் அடுத்த நாள் 16-ஆம் தேதி அதிகாலை 5 மணி வரை சென்னையில் பல்வேறு இடங்களில் விட்டுவிட்டு மழை பெய்யும். இதே நிலை 17-ஆம் தேதி வரை நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
chennai weather : சென்னை நிலவரம்!
சென்னையை பொருத்தவரையில் குறிப்பிட்ட சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ள்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.