மேற்கு தொடர்ச்சி மலை மாவட்ட மக்களுக்குத் தான் இன்றைய வெதர் அப்டேட்

Chennai Weather : அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும்

By: Published: August 25, 2019, 8:05:19 AM

Chennai weather today Western Ghats region given heavy rainfall alert : நேற்று மதியம் சென்னையின் பல்வேறு பகுதியில் சாரல் மழை பெய்தது. நேற்று இரவு 8 மணியில் இருந்து திருவான்மியூர், பெசண்ட் நகர், கிண்டி, வேளச்சேரி, சைதாப்பேட்டை. தியாகராயநகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்தது. வேலை முடித்துவிட்டு வீடு திரும்புவோர்,  வார இறுதி என்பதால் சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள் பலரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இன்றைய வானிலை

அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்யும் என மண்டல வானிலை ஆராய்ச்சி மையம், சென்னை அறிவித்துள்ளது. மேலும், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான நீலகிரி, கோவை, தேனி, மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சென்னை வானிலை

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும். குறைந்தபட்சமாக 25 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று அதிக அளவு மழைப் பொழிவை பெற்ற இடங்கள்

சேலம் மேட்டூர் பகுதியில் 6 செ.மீ மழை பதிவானது. ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் 5 செ.மீ மழை பதிவானது.  ஏற்காடு, திருவிடைமருதூர் – 4 செ.மீ.  வேலூரி காவேரிபாக்கம், ஈரோட்டின் கோபி, சேலம் ஓமலூர், திருவாரூரின் வலங்கை மான், திருவள்ளூரின் திருத்தணி, தர்மபுரியின் பாப்பிரெட்டிபட்டி, கோவையின் சின்னக்கல்லாறு உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க : தமிழகம், புதுச்சேரியில் 2 நாட்களுக்கு மழை: எந்தெந்த ஊர்களுக்கு தெரியுமா?

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Chennai weather today western ghats region given heavy rainfall alert

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X