வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச படம் – சென்னையில் சிபிஐ சோதனை

வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் இன்று சோதனை நடத்தினார்கள். சிறுவர்-சிறுமிகளை உடலுறவில் ஈடுபட வைத்து அதை வீடியோவாக படம் பிடித்து இணையதளம் மற்றும் சி.டி.க்கள் மூலம் விற்பனை செய்யும் கும்பல்கள் உலகின் சில நாடுகளில் இயங்கி வருகின்றன. பல நாடுகளில் இதுபோன்ற வீடியோக்களை தடை செய்துள்ளன. இருப்பினும் நல்ல விலை கிடைப்பதால் மிகவும் ரகசியமாக இதுபோன்ற வக்கிரமான காட்சிகள் சிலர் மூலம் தங்குதடையின்றி பகிரப்பட்டு வருகிறது. சமூக […]

children sex videos in whatsapp cbi raid in chennai - வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச படம் - சென்னையில் சிபிஐ ரெய்டு
children sex videos in whatsapp cbi raid in chennai – வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச படம் – சென்னையில் சிபிஐ ரெய்டு

வாட்ஸ் அப் குழுவில் குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பரப்பிய விவகாரத்தில் சிபிஐ அதிகாரிகள் சென்னையில் இன்று சோதனை நடத்தினார்கள்.

சிறுவர்-சிறுமிகளை உடலுறவில் ஈடுபட வைத்து அதை வீடியோவாக படம் பிடித்து இணையதளம் மற்றும் சி.டி.க்கள் மூலம் விற்பனை செய்யும் கும்பல்கள் உலகின் சில நாடுகளில் இயங்கி வருகின்றன.

பல நாடுகளில் இதுபோன்ற வீடியோக்களை தடை செய்துள்ளன. இருப்பினும் நல்ல விலை கிடைப்பதால் மிகவும் ரகசியமாக இதுபோன்ற வக்கிரமான காட்சிகள் சிலர் மூலம் தங்குதடையின்றி பகிரப்பட்டு வருகிறது.

சமூக வலைதளங்களில் குழந்தைகளின் ஆபாச வீடியோ பகிரப்படுவது தொடர்பாக டெல்லி, காசியாபாத், ஃபரிதாபாத், மேற்குவங்கம், ஜெய்ப்பூர் ஆகிய இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக சென்னையிலும் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையை சேர்ந்த வினோத் கண்ணன், கோஷிமா ஆகியோரின் வீடுகளில் சிபிஐ சோதனை நடத்தி வருகிறது.

சில நாட்களுக்கு முன்பு சமூக வலைதளங்களில் சிறார் ஆபாச வீடியோக்களை பரப்பிய கேரளாவை சேர்ந்த 12 பேரை போலீசார் கைது செய்தது குறிப்பிடத்தக்கது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Child sexual abuse videos in whatsapp cbi raid in chennai

Next Story
அனுமதியின்றி கட்டப்பட்ட அண்ணாநகர் டவர் கிளப் – கட்டிடத்தை அகற்ற சென்னை ஐகோர்ட் உத்தரவுTamil Nadu news today live updates
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express

X