Advertisment

சின்னத்தம்பி யானையை பிடிக்க ஐகோர்ட் உத்தரவு! முடிவுக்கு வரும் போராட்டம்!

இந்த விசயத்தில் எந்த வித அசம்பவிதங்களும் நடைபெறாமல் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒரு மனித உயிர் கூட பலியாக கூடாது

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
இந்த விசயத்தில் எந்த வித அசம்பவிதங்களும் நடைபெறாமல் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒரு மனித உயிர் கூட பலியாக கூடாது

இந்த விசயத்தில் எந்த வித அசம்பவிதங்களும் நடைபெறாமல் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒரு மனித உயிர் கூட பலியாக கூடாது

சின்னதம்பி யானையை பிடித்து வனத்துறையினரின் கட்டுப்பாட்டில் வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. யானையை பிடிப்பது தொடர்பான உரிய உத்தரவை தலைமை வன பாதுகாவலர் பிறப்பிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

சின்னதம்பி யானையை கும்கியாக மாற்ற தடைக் கோரியும், அதை பிடித்து முகாமில் வைத்து பராமரிக்க உத்தரவிட கோரியும், மீண்டும் காட்டுக்கே அனுப்ப உத்தரவிட கோரி பல்வேறு பொது நல

வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட்டது.

அனைத்து வழக்குகளும் இன்று மீண்டும் நீதிபதிகள் மணிக்குமார் மற்றும் சுப்பிரமணியம் பிரசாத் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர் சின்னதம்பி யானையால் கிராம மக்கள் பாதிக்கப்படுவதாகவும் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர் எனவும் தெரிவித்தார்.

இந்த விஷயத்தில் சின்னதம்பி யானையின் பாதுகாப்பு மட்டுமல்ல பொது மக்களின் பாதுகாப்பு குறித்தும் அரசு அக்கறை செலுத்த வேண்டிய கடமை உள்ளது என தெரிவித்தார். சின்னதம்பி யானை விவசாய பயிர்களை உண்டு பழகி விட்டதால், மீண்டும் காட்டிற்கு கொண்டு செல்வது அவசியமற்றது என தெரிவித்தார். முகாமில் சின்னத் தம்பி யானை சிறப்பாக பராமரிக்கப்படும் என வனத்துறை சார்பில் அவர் தெரிவித்திருந்தார்.

ஓரிரு மாதங்களில் முகாமில் உள்ள மற்ற யானைகளுடன் பழக சின்னதம்பிக்கு பயிற்சி அளிக்கப்படும் எனவும் தலைமை வழக்கறிஞர் தெரிவித்தார்.

மேலும் படிக்க - இப்படியே விட்டால் சின்னத்தம்பியை யாராச்சும் சிலர் கொன்னுடுவாங்க! - பதறும் வனத்துறை

வனப்பகுதியில் இருந்து 10 கி.மீ தூரத்திற்குள் அதிக அளவில் பரவியுள்ள செங்கற் சூளைகளுக்கு பனை மரங்கள் பயன்படுத்தபடுவதால் அதன் வாசம் காரணமாகவே யானை உள்ளிட்ட காட்டு விலங்குகள் கிராமத்திற்குள் நுழைகிறது என தெரிவித்தார்.

அப்போது கூறிக்கிட்ட நீதிபதிகள், இந்த விசயத்தில் எந்த வித அசம்பவிதங்களும் நடைபெறாமல் இருப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் ஒரு மனித உயிர் கூட பலியாக கூடாது எனவும் கருத்து தெரிவத்தனர்.

பின்னர் இந்த வழக்கில் இடைக்கால உத்தரவிட்ட நீதிபதிகள், சின்னத்தம்பியை யானையை பிடிக்க வனத்துறை நடவடிக்கை எடுக்கலாம். இது தொடர்பாக தலைமை வன பாதுகாப்பு அதிகாரி உரிய உத்தரவுகளை பிறப்பிக்க வேண்டும். பிடிப்பதற்கு முன்னர் உரிய பாதுகாப்பு நடவடிக்கையை அரசு எடுக்க வேண்டும். பிடிக்கும் போது சின்னதம்பியை எந்த வகையிலும் துன்புறுத்தவோ காயம் ஏற்படுத்தவோ கூடாது. சின்னத்தம்பி யானையை முகாமுக்கு கொண்டு செல்வதா? அல்லது மீண்டும் காட்டுக்கு அனுப்புவதா என்பதை தலைமை பாதுகாப்பு அதிகாரியே முடிவு செய்யலாம் என உத்தரவிட்டனர்.

மேலும் சின்னதம்பியை நிரந்தரமாக முகாமில் வைப்பதா அல்லது காட்டிற்குள் அனுப்புவதா என்பது குறித்து பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என தெரிவித்த நீதிபதிகள்பிரதான வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்தனர்.

Madras High Court
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment