Advertisment

ரேஷனில் கருப்பட்டி வழங்க பரிசீலனை: முதல்வர் பழனிசாமி

“பனை பொருட்களின் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். தினமும் வீட்டில் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை பயன்படுத்தி குடித்து வருகிறேன்” என்று முதல்வர் பழனிசாமி கூறினார்.

author-image
WebDesk
New Update
karuppatti, panangkaruppatti, black sweet of palm in rations, cm edappadi k palaniswami, govt will consider karuppatti to distribute in rations, tamil nadu, nadar community, ரேஷனில் கருப்பட்டி வழங்க பரிசீலனை, முதல்வர் பழனிசாமி, நாடார் சமூக விழா

சென்னை அருகே உள்ள மாங்காட்டில் நாடார் சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி, பனங்கருப்பட்டியை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும் என்று தெரிவித்துள்ளார்.

Advertisment

சென்னை அருகே உள்ள மாங்காட்டில் நாடார் சமூக சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் விழா ஞாயிற்றுக்கிழமை (ஜனவரி 10) நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட முதல்வர் பழனிசாமி நடார் சமூக சாதனையாளர்களுக்கு விருதுகளையும் பரிசுகளையும் வழங்கினார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய முதல்வர் பழனிசாமி, “நாடார் சமுதாய மக்கள் கல்வி, உழைப்பு, சமூகப் பணி உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்குபவர்கள். நடார் சமூக மக்கள் கல்வியாளர்களை உருவாக்குவதில் முக்கியப் பங்களிப்பு செய்து வருகின்றனர். பெருந்தலைவர் காமராஜர் இந்த மண்ணில் இருந்து மறைந்தாலும் அவருடைய சாதனைகள் இன்னும் நிலைத்து நிற்கின்றன.

நாடார் சமூக மக்கள் பனைபொருட்கள் தயாரிப்பில் ஏராளமானோர் ஈடுபட்டு வருகின்றனர். அதன் நன்மைகள் எனக்கு நன்றாகத் தெரியும். அதை நான் தினந்தோறும் வீட்டில் சாப்பிட்டுக்கொண்டிருக்கிறேன். தினமும் கொத்தமல்லி காபியில் பனங்கருப்பட்டியை பயன்படுத்தி குடித்து வருகிறேன்.

இந்த விழாவில், கருப்பட்டியை ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு அளிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை பற்றி தமிழக அரசு நிச்சயம் பரிசீலனை செய்யும்.” என்று கூறினார்.

தமிழகத்தில் வருகிற பொங்கல் பண்டிகைக்கு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுடன் ரூ.2,500 பணம் வழங்க முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார். அதன்படி, தமிழகத்தில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment