Advertisment

ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்தே செயல்படுகிறேன்; எங்களுக்குள் பிரச்சனை இல்லை! - முதல்வர் பழனிசாமி

கருணாநிதி நல்ல உடல் நலனுடன் இருப்பதாக முதல்வர் பழனிச்சாமி பேட்டி

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ஓ.பி.எஸ்ஸுடன் இணைந்தே செயல்படுகிறேன்; எங்களுக்குள் பிரச்சனை இல்லை! - முதல்வர் பழனிசாமி

Edappadi palanisamy about karunanidhi

திமுக தலைவர் கருணாநிதி நல்ல உடல் நலனுடன் இருப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பேட்டியளித்துள்ளார்.

Advertisment

சேலத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேட்டியளித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "நான் பிரார்த்தனை செய்தது போன்று மேட்டூர் உட்பட பல அணைகள் நிரம்பியுள்ளன. திருப்பதிக்கு கடந்த முறை நான் சென்றபோது அணைகள் அனைத்தும் நிரம்ப வேண்டும் என பிரார்த்தனை செய்தேன்.

இறைவன் அருளால் காவிரியில் தண்ணீர் வருகிறது. இயற்கை நமக்கு சாதகமாக இருக்கிறது. தமிழகம் முழுக்க எல்லா அணைகளும் நிரம்பி இருக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையில் சரியாக தண்ணீர் வருகிறது. காவிரியின் பாதை சமவெளியாக இருப்பதால் அணை கட்ட முடியாது. அப்படியே கட்டினால் நீர் ஊருக்குள் புகுந்து மக்கள் பாதிக்கப்படுவார்கள். நீரை தேக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

8 வழிச்சாலை திட்டத்தால் சேலம் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மாவட்ட மக்களும் பயன்பெறுவர். 8 வழிச்சாலை திட்டத்திற்காக 95% நில அளவைப் பணிகள் முடிந்துவிட்டன. சேலம் சாலை ஏற்கனவே மக்களுக்கு பெரிய அளவில் உதவும் என்று கூறி இருந்தேன். நில உரிமையாளர்களுக்கு சரியான இழப்பீடு கொடுக்கப்படும். தமிழகம் முன்னேற இந்த சாலை அதிகம் உதவும். இந்தியாவிலேயே இது இரண்டாவது பெரிய சாலையாகும். லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்த ஆலோசனை நடத்தி வருகிறோம். விரைவில் நல்ல முடிவு எட்டப்படும்.

ஒபிஎஸ் இபிஎஸ் இடையே பிரச்னை என பரபரப்புக்காக செய்தி வெளியிடப்படுகிறது. நாங்கள் இருவரும் இணைந்து செயல்படுகிறோம். எந்த தேர்தலையும் சந்திக்க அதிமுக எப்போதும் தயாராக உள்ளது. ஐகோர்ட் உத்தரவுப்படி சொத்து வரி உயர்த்தப்பட்டது. எந்த திட்டத்தை கொண்டு வந்தாலும் ஒரு சிலர் எதிர்க்கதான் செய்வார்கள்.

திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அதிமுக சார்பாக விசாரிக்கப்பட்டது. அதிமுக அமைச்சர்கள் அவரை சந்தித்து வந்தனர். கருணாநிதி உடல்நலத்துடன் இருக்கிறார். அவர் முழு உடல்நலத்துடன் திரும்பி வர வேண்டும் என்று அதிமுக சார்பாக வேண்டிக்கொள்கிறோம்." என்று முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment