மேம்பாலம் அடிக்கல் நாட்டுவிழா... முதலமைச்சர் கலந்து கொண்ட விழாவில் எம்எல்ஏ வரவில்லை

ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே ரூ.58.54 கோடி செலவில் கட்டப்படவிருக்கும் மேம்பாலப் பணிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டினார்.

ஈரோட்டில் அரசு மருத்துவமனை அருகே ரூ.58.54 கோடி மதிப்பில் மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டது. அதற்கு அடிக்கல் நாட்டும் விழா இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மேம்பாலபணிக்கு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் அமைச்சர்கள் செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, கருப்பண்ணன் ஆகியோர் பங்கேற்றனர். ஆனால், டிடிவி தினகரன் ஆதரவாளரான பெருந்துறை சட்டமன்ற உறுப்பினர் தோப்பு வெங்கடாசலம் இந்த விழாவில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

×Close
×Close