போரூர் மேம்பாலத்தை திறந்துவைத்த முதல்வர் பழனிசாமி!

கடந்த 2010 ஆம் ஆண்டு தி.மு.க ஆட்சியில், போரூர் ரவுண்டானா பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி தொடங்கியது. ஆனால் பல்வேறு காரணங்களால் அப்பணி கிடப்பில் போடப்பட்டது.

இந்த மேம்பால பணிகள் சில மாதங்களுக்கு முன்பு மீண்டும் தொடங்கியது. எடப்பாடி பழனிசாமி அரசு தீவிரமாக மேம்பாலம் அமைக்கும் பணியை தொடங்கியது. தற்போது, மேம்பால பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இன்று மேம்பலத்தின் மீது போக்குவரத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார். இந்த எம்.ஜி.ஆர் மேம்பாலம் மவுண்ட் – பூந்தமல்லி, ஆற்காடு, பெங்களூரு தேசிய சாலைகளை இணைக்கும்.

இந்த மேம்பாலம் 480 மீட்டர் நீளம், 372 மீட்டர் அகலம் கொண்டதாகும். இந்த பாலத்துக்கு ‘எம்.ஜி.ஆர் மேம்பாலம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.

×Close
×Close