Advertisment

அலுவலகத்தில் இருந்தபடியே அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் ஸ்டாலின்!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அலுவலகத்தில் இருந்தபடியே, அரசின் திட்டங்களைக் கண்காணிப்பதற்கு “முதல்வர் டாஷ்போர்டு - தமிழ்நாடு 360” அவருடைய அலுவலகத்தில் தொடங்கப்படுகிறது.

author-image
WebDesk
New Update
CM MK Stalin gets digital dashboard to monitoring status, govt project and govt schemes, cm dashboard, அலுவலகத்தில் இருந்தபடியே அனைத்து திட்டங்களையும் கண்காணிக்கும் ஸ்டாலின், முதலமைச்சர் முக ஸ்டாலின், தமிழ்நாடு, Tamilnadu, CM MK Stalin, CM MK Stalin dashboard 360

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது அலுவலகத்தில் இருந்தபடியே, அனைத்து திட்டங்களையும் கண்காணிப்பதற்கு அகன்ற திரையுடன் சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஒருங்கிணைந்த தகவல் தொடர்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி திட்டங்களைக் கண்காணிக்கும் இந்த தொழில்நுட்பம் முதல்வருக்காக பெரிய அளவில் கொண்டுவருகிறது.

Advertisment

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதன்கிழமை முதல் மாநிலம் முழுவதும் பல்வேறு அரசுத் துறைகள் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்களின் நிலையை தலைமைச் செயலகத்தில் உள்ள தனது அலுவலகத்தில் பொருத்தப்பட்டுள்ள மிகப் பெரிய அகன்ற டிஜிட்டல் திரை மூலம் கண்காணிக்கிறார். தமிழ்நாடு மின் ஆளுமை முகமையால் (TNeGA) உருவாக்கப்பட்ட இந்த முதலமைச்சர் திரை, மாநிலத்தில் செயல்படுத்தப்படும் திட்டங்களை எளிதாகக் கண்காணிப்பதை உறுதி செய்வதற்காக அனைத்து அரசுத் துறைகள், மாவட்ட நிர்வாகங்கள், அரசு நிறுவனங்கள் மற்றும் காவல்துறையின் டேட்டாக்களை ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டது.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் புதன்கிழமை இந்த கண்காணிப்புத் திரையை தொடங்குகிறார். இந்த நடவடிக்கை குறித்து தமிழக அரசு செவ்வாய்க்கிழமை ஒரு டீஸர் வீடியோவை வெளியிட்டது. இதில் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அமைச்சர் மனோ தங்கராஜ், காவல்துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) சைலேந்திர பாபு மற்றும் அரசு உயர் அதிகாரிகள் திட்டங்கள் மற்றும் திட்டங்களின் கண்காணிப்பு குறித்து இதை எளிதாக செயல்படுத்துவதற்கான தேவையை விளக்கினார்கள்.

செப்டம்பர் 17ம் தேதி நடைபெற்ற துறைச் செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியதாவது: தனது அரசு திட்டங்களையும் மக்கள் நலத் திட்டங்களையும் அறிவிப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், அவை செயல்படுத்தும் முறையைத் தொடர்ந்து கண்காணிக்கும் வழிமுறையை அறிமுகப்படுத்தும் என்று கூறினார்.

அரசின் பட்ஜெட் அறிவிப்பு உள்ளிட்ட பல நேரங்களில் அரசால் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் செயல்படுத்துவதை தனிப்பட்ட முறையில் கண்காணிக்க உதவும் வகையில், தனது அலுவலகத்தில் நிறுவப்படும் அகன்ற திரையை தமிழ்நாடு மின் ஆளுமை முகமை உருவாக்கும் என்று அறிவித்திருந்தார்.

முதலமைச்சர் கண்காணிப்பு திரை தகவல் தொழில்நுட்பம் மற்றும் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைத்து, அரசாங்கத்தின் தலைமையில் இருப்பவர்களால் விவரங்களைக் கண்காணிக்கும் விதத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவருகிறது என்று அரசு உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கண்காணிப்பு திரை வெவ்வேறு துறைகளின் வெவ்வேறு டேட்டா தொகுப்புகளை இணைக்கும். மாநிலத்தின் தொலைதூர கிராமத்தில் செயல்படுத்தப்படும் திட்டத்தின் தற்போதைய நிலையை முதல்வர் செயலகத்தில் உள்ள அவரது அலுவலகத்தில் இருந்தபடியே கண்காணிக்க முடியும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.

இத்திட்டங்களை முதலமைச்சர் கண்காணித்து வருகிறார் என்பதை அதிகாரிகளும் அறிவார்கள் என்பதால் பணிகள் குறித்த நேரத்தில் முடிவடைவதை உறுதி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கண்காணிப்பு திரையை (சி.எம். டாஷ்போர்டு) உருவாக்க தமிழ்நாடு மின் ஆளுமை முகமை இரண்டு மாதங்களுக்கும் மேலாக உழைத்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.

பத்தாண்டுகளுக்கு பிறகு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவின் ஆட்சி அமைச்துள்ளது. இந்த ஆண்டு மே 7ம் தேதி முதலமைச்சராக பதவியேற்ற மு.க. ஸ்டாலின், அரசின் செயல்பாடுகளில் அதிக வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது குறித்து வலியுறுத்தி வருகிறார். அரசு முதன்முறையாக மின்னணு பட்ஜெட்டை தாக்கல் செய்து, கோப்புகளை டிஜிட்டல் முறையில் சரிபார்த்து கையொப்பமிட உதவும் இ-அலுவலகங்களை அமைக்க பல கோடி ரூபாய் செலவழித்து வருகிறது.

அந்த வரிசையில், அரசின் திட்டங்களைக் கண்காணிப்பதற்கு முதல்வர் “டாஷ்போர்டு - தமிழ்நாடு 360” அவருடைய அலுவலகத்தில் தொடங்கப்படுகிறது.

இந்த திரையில், துறை வாரியாக அரசின் திட்டங்கள் எந்த நிலையில் உள்ளது என்பதைக் காட்டும். இது மக்களின் எண்ணத்தை அரசாங்கத்திற்கு தெரிவிக்கும். மக்களுக்கு அரசாங்கத்தின் சேவைகள் குறித்த விழிப்புணர்வை சித்தரிக்கும். இந்த திட்டத்தின் கீழ், திட்டங்களின் நிலை குறித்த தகவல்களை பொதுமக்களுக்கு அரசு முன்கூட்டியே தெரிவித்து வருகிறது.

இது போல, அரசின் திட்டங்களைக் கண்காணிக்கும் டிஜிட்டல் திரை தமிழ்நாடு முதலமைச்சர் அலுவலகத்தில் மட்டுமல்ல,நாடு முழுவதும், ஒரிசா, பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட சில மாநிலங்களின் முதல்வர்கள் இந்த திரையை வைத்துள்ளனர், இந்த திரை கிடைக்கக்கூடிய தகவல்களை காட்டுகின்றன. செயற்கை நுண்ணறிவு மற்றும் டேட்டா பகுப்பாய்வு மூலம் இந்த திரையை உருவாக்க தமிழ்நாடு மேம்பட்ட தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தியுள்ளது. எனவே, இது நிகழ்நேர தகவலை மட்டுமல்ல, கணிப்புகளையும் அளிக்கும் என்று அதிகாரிகள் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த திரை மூலம் கண்காணிக்கும் முறையை விளக்கிய அதிகாரிகள் வட்டாரம், “ஒவ்வொரு அரசுத் துறைக்கும், இந்தத் திட்டத்துக்கு ஒரு நோடல் அதிகாரி இருப்பார் என்று தெரிவித்தனர்.

நோடல் அதிகாரிகள் தொழில்நுட்ப வல்லுனர்களுடன் ஒருங்கிணைந்து, இந்த திரையில் 24 மணிநேரமும் தகவல்களை அப்டேட் செய்வார்கள். அதிகாரிகள் குழு இந்த அப்டேட்களை ஒருங்கிணைக்கும். இந்த திட்டத்தின் அடுத்த கட்டமாக, இந்த தகவல் இணைய போர்டல் மூலம் பொதுமக்களின் பார்வைக்கும் கிடைக்கும் என்று கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Cm Mk Stalin Tamil Nadu Government
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment