Advertisment

கோவையில் முதல்வர் ஸ்டாலின்; ட்விட்டரில் கோபேக் vs வெல்கம் ட்ரெண்டிங் மோதல்!

கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காதாவர்களுக்காகவும் செயல்படுவேன் என்று கூறினார்.

author-image
WebDesk
New Update
CM MK Stalin visits Coimbatore, BJP and DMK supporters clash in social media, Go back stalin, kovai welcomes stalin, கோவையில் முதல்வர் ஸ்டாலின், ட்விட்டரில் கோபேக்ஸ்டாலின், கோவை வெல்கம் ஸ்டாலின், tamilnadu politics, cm mk stalin

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை தொடங்கி வைக்க கோவை சென்ற நிலையில், ட்விட்டரில் முதல்வர் ஸ்டாலினுக்கு எதிராக மாநிலத்தில் எதிர்க்கட்சியினர் பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் ட்விட்டரில் ‘கோபேக் ஸ்டாலின்’(திரும்பிப் போ ஸ்டாலின்) #GoBackStalin என்று ட்ரெண்டிங் செய்து வருகின்றனர். இதற்கு எதிராக திமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்கள் பலரும் கோவைக்கு ஸ்டாலினை வரவேற்று ‘கோவை வெல்கம் ஸ்டாலின்’ (கோவை ஸ்டாலினை வரவேற்கிறது) #KovaiWelcomeStalin என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து வருவதால் சமூக ஊடகங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisment

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இரண்டு நாள் சுற்றுப் பயணமாக இன்று (நவம்பர் 22) கோவை புறப்பட்டு சென்றார். கோவையில் கோவை வ.உ.சி. மைதானத்தில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பல்வேறு அரசு திட்டங்களை தொடங்கி வைத்து, பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதனிடையே, முதல்வர் ஸ்டாலின் கோவை செல்வதற்கு எதிராக மாநிலத்தில் எதிர்க்கட்சியினர் பாஜக, அதிமுக ஆதரவாளர்கள் ட்விட்டரில் ‘கோபேக் ஸ்டாலின்’(திரும்பிப் போ ஸ்டாலின்) #GoBackStalin என்று ட்ரெண்டிங் செய்தனர்.

பிரதமர் மோடி, கடந்த ஆண்டு தமிழகம் வருகை தந்தபோது, அப்போது எதிர்க்கட்சியாக இருந்த திமுக மற்றும் கூட்டணி கட்சி ஆதரவாளர்களும் நெட்டிசன்களும் #GoBackModi என்று பதிவிட்டு இந்திய அளவில் ட்ரெண்டிங் செய்தனர். இதற்கு பதிலடி கொடுக்கும் பாஜக ஆதரவாளர்கள் #GoBackStalin பதிவிட்டு ட்ரெண்டிங் செய்துள்ளது தெரிகிறது. இதனை, பாஜக - அதிமுக ஆதரவாளர்கள் பலரும் இதற்கு முன்பு நீங்கள் பிரதமர் மோடிக்கு செய்தீர்கள் இப்போது அது உங்களுக்கே திரும்ப வந்திருக்கிறது. கர்மா யாரையும் விடாது என்று பதிவிட்டு வருகின்றனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவை சென்ற நிலையில், ட்விட்டரில் #GoBackStalin என்று டிரெண்டிங் ஆனதைத் தொடர்ந்து திமுக ஆதரவாளரளும் நெட்டிசன்களும் ஸ்டாலினை வரவேற்று ‘கோவை வெல்கம் ஸ்டாலின்’ (ஸ்டாலினை கோவை வரவேற்கிறது) #KovaiWelcomeStalin என்று ட்விட்டரில் ட்ரெண்டிங் செய்து பதிலடி கொடுத்தனர்.

இதனால், ட்விட்டரில் ‘கோபேக் ஸ்டாலின்’ ‘கோவை வெல்கம் ஸ்டாலின்’ ட்ரெண்டிங் இடையே ஒரு பெரிய போட்டியும் மோதலும் காணப்பட்டது.

அதே நேரத்தில், #GoBackStalin என்று டிரெண்டிங் உத்தரப் பிரதேசத்திலும் பீகாரிலும் ட்ரெண்டிங் ஆனதாக சில பதிவுகள் காணப்பட்டது. அதே போல, #KovaiWelcomeStalin என்பதும் அங்கே ட்ரெண்டிங் ஆனது.

இந்த நிலையில், கோவை சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வ.உ.சி. மைதானத்தில் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அப்போது ரூ.441.76 கோடி மதிப்பில் 23,534 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “அனைவருக்குமான அரசாக பாரப்பட்சமின்றி சேவை செய்து வருகிறோம். நான் எப்போது அதிகம் பேசமாட்டேன், செயலில் தான் எனது பணி இருக்கும். தலைச்சிறந்த மாவட்டமாக கோவையை மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

கடந்த 10 ஆண்டுகளாக நிலுவையில் இருந்த விமான நிலையை விரிவாக பணிகளுக்கு தற்போது நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் குடிநீர் பிரச்னை தலைதூக்காமல் இருக்கும் பொருட்டு சீரான நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.

கடந்த ஆட்சிக் காலத்தில் கோவையில் எந்தவித திட்ட சாலை பணிகளும் மேற்கொள்ளப்படவில்லை. அதனால் மீண்டும் திட்ட சாலைகளை மேம்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. காந்திபுரத்தில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும். மத்திய சிறைச்சாலை புறநகர் பகுதிக்கு கொண்டுசெல்லப்படும்.

உங்கள் தொகுதியில் முதல்வர் மூலம் பல்வேறு மனுக்களுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் நிறைவேற்ற முடியாத மனுக்களுக்கு விளக்கம் கொடுக்கப்பட்டு வருகிறது” என்று கூறினார்.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்று ஆட்சி அமைத்தாலும் கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இருப்பினும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தவர்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காதாவர்களுக்காகவும் செயல்படுவேன் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி, பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட 10 எதிர்க்கட்சி எம்எல்ஏ-க்கள் அமர்வதற்கு முன்வரிசையில் இருக்கை போடப்பட்டிருந்தது. ஆனால், அதிமுக எம்எல்ஏ-க்கள் யாரும் நிகழ்ச்சிக்கு வரவில்லை. ஆனால், பாஜக எம்எல்ஏ வானதி சீனிவாசன் கலந்துகொண்டார். நிகழ்ச்சியில் அவருக்கு ஒதுக்கப்பட்ட இருக்கை மேடைக்கு கீழே இருந்த நிலையில், மேடைக்கு வந்து அமருமாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்தார்.

இதையடுத்து, வானதி சீனிவாசனுக்கு மேடையில் இருக்கை ஒதுக்கப்பட்டு மேடையில் அமரவைக்கப்பட்டார். அதோடு, வானதி சீனிவாசன் இந்த நிகழ்ச்சியில் வாழ்த்துரை வழங்கி பேசினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Bjp Dmk Cm Mk Stalin Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment