வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாடுங்கள் – தமிழக மக்களுக்கு முதல்வர் கோரிக்கை

Celebrate Ganesha Chaturthi in homes : தமிழக மக்கள் விநாயகர் சதுர்த்தி விழாவுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டும். முதல்வர் கோரிக்கை

Edappadi K. Palanisamy

கொரோனா  போன்ற ஒரு பெருந்தொற்று காலத்தில் பொது மக்கள் அனைவரும் தங்கள் வீடுகளிலேயே “விநாயகர் சதுர்த்தி விழாவை” கொண்டாடுமாறு அரசின் சார்பாக முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி தமிழக மக்களை கேட்டுக் கொண்டார்.

இதுகுறித்து வெளியான செய்திக் குறிப்பில் :  

22.8.2020 அன்று அன்று விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படவுள்ளது. இந்த ஆண்டு கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக, தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் மத்திய அரசின் உள்துறை அமைச்சகம் 29.7.2020 அன்று வெளியிட்ட அறிவிக்கையின்படி, மதம் சார்ந்த விழாக்கள், கூட்டு வழிபாடுகள் ஆகியவை நாட்டின் அனைத்து பகுதிகளிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

 

 

மத்திய அரசின் வழிகாட்டுதலின்படியும், மாநிலத்தில் கொரோனா  தொற்றினால் நிலவிவரும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டும், கொரோனா நோய் தொற்று பரவுதலை தடுக்கும் வகையில், பொது இடங்களில் விநாயகர் சிலைகள் அமைப்பதையும், பொது இடங்களில் வழிபாடு நடத்துவதையும், ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதையும், பொதுமக்கள் நலன் கருதி தடை செய்யப்பட்டு ஏற்கெனவே ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இந்நிலையில், பொதுமக்கள் அவரவர் வீடுகளிலேயே விநாயகர் சதுர்த்தி விழாவினை கொண்டாட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாண்பமை சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட பல்வேறு பொதுநல வழக்குகளை விசாரித்த நீதிமன்றமும் அரசின் ஆணையை பொதுமக்கள் பின்பற்ற வேண்டும் என ஆணையிட்டுள்ளது.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகளின் ஆணைகளையும், வழிகாட்டி நெறிமுறைகளையும் பின்பற்றி, கொரோனா நோய் தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பினை நல்க வேண்டுமென அனைத்து தரப்பினரும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்”.

என்று தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டது.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm palanisamy advised the people of tamil nadu to celebrate ganesha chaturthi in their homes

Next Story
தமிழகத்தில் 5,986 பேருக்கு கொரோனா : 116 பேர் பலிtamil nadu daily coronavirus report, today covid-19 positive cases, new coronavirus cases, tamil nadu total coronavirus deaths
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express