காவிரி மேலாண்மை வாரியம்: இன்று மாலை முதல்வருடன் மூத்த அமைச்சர்கள் ஆலோசனை!

தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.

காவிரி மேலாண்மை வாரியம்  குறித்து  முதலமைச்சர் பழனிசாமி தலைமையில், இன்று மாலை ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது. இதில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.

காவிரி விவகாரம்   குறித்த இறுது தீர்ப்பில்  , 6 வார காலத்திற்குள் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம்  தெரிவித்திருந்தது. இந்த கால அவகாசம் நாளையுடன்(29.83.18) முடிவடைகிறது.  இந்நிலையில், மத்திய அரசு மேலாண்மை வாரியம் என்ற வார்த்தை தீர்ப்பில் குறிப்பிடப்படாததால், அதை சுட்டிக்காட்டி மேலாண்மை வாரியத்துக்கு பதிலாக மேற்பார்வை ஆணையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று  தெரிவித்து வருகிறது.

இதனைத்தொடர்ந்து,  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காவிட்டால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு , தமிழக அரசு தொடர இருப்பதாக   நேற்றயைய தினம் செய்திகள் வெளியாகின. இந்நிலையில்,  இன்று (28.3.19) மாலை முதல்வர் பழனிசாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைப்பெறவுள்ளது. தலைமை செயலகத்தில் மாலை 4 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் மூத்த அமைச்சர்கள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துக் கொள்கின்றனர்.

கெடு முடிந்த பிறகும் மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு அமைக்காவிட்டால் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

 

 

 

×Close
×Close