அமைச்சர்கள், ஆட்சியர்களுடன் முதல்வர் ஆலோசித்தது என்ன?

மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டார்

தமிழகத்தில் அதிகரித்து வரும் குடிநீர் பிரச்சனையை தீர்க்க அரசு தொடர்ந்து பல்வேறு நடவடிக்கை எடுத்துவருகிறது. இந்நிலையில் விழுப்புரம், திருச்சி, தஞ்சை, சேலம், கோவை, நெல்லை, மதுரை, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர்களுடன் வீடியோ கான்பரன்சிங் மூலம் தலைமைச்செயலகத்தில் இருந்து முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி ஆலோசனையில் ஈடுபட்டார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தின் போது, அமைச்சர்கள் செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், உடுமலை ராதாகிருஷ்ணன், உதயகுமார், கருப்பண்ணன், தலைமைச்செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உட்பட முக்கிய அதிகாரிகள் உடனிருந்தனர்.

குறிப்பாக, இந்த ஏழு மாவட்டங்களில் வறட்சியால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் குடிநீர் தேவைகளுக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. மேலும் நிர்வாக ரீதியான கருத்துகளும் இக்கூட்டத்தில் பகிரந்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டம் சுமார் 30 நிமிடங்கள் வரை நடைபெற்றது.

×Close
×Close