Advertisment

பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பு: தம்பிதுரை, ஜெயகுமார் உடன் சென்றனர்

TN CM Edappadi K Palaniswami Meets PM Narendra Modi: பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி

பிரதமர் மோடியை சந்திக்கும் முதல்வர் பழனிசாமி

பிரதமர் நரேந்திர மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி டெல்லியில் இன்று சந்தித்தார். தம்பிதுரை, ஜெயகுமார் ஆகியோர் உடன் இருந்தனர். தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதனும் உடன் சென்றார். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்த சந்திப்பு நடந்தது.

Advertisment

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, கடந்த 30ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு அவரது அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பி இருந்தார். அதனைத் தொடர்ந்து, இன்று (அக்.8) சந்திக்க நேரம் ஒதுக்கப்பட்டது.

இதையடுத்து, நேற்று மாலை 5 மணியளவில் சென்னையில் இருந்து ‘ஏர் இந்தியா’ விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி டெல்லி புறப்பட்டு சென்றார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் உயர் அதிகாரிகள் சென்றனர்.

இரவு 8 மணிக்கு டெல்லி சென்றடைந்த முதல்வர் எம்.பி.க்களுடன் ஆலோசனை நடத்தினார். விமான நிலையத்தில் இருந்து காரில் புறப்பட்டு சென்ற அவர் இரவு தமிழ்நாடு இல்லத்தில் தங்கினார்.

இன்று காலை 11 மணிக்கு பிரதமர் மோடியை அவருடைய அலுவலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசினார். அப்போது மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை, அமைச்சர் ஜெயகுமார், தமிழ்நாடு தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More: பாஜகவுடன் அதிமுக கூட்டணி வைக்குமா? பிரதமரை சந்தித்த பின் பதிலளித்த முதல்வர் பழனிசாமி!

இந்த சந்திப்பின்போது, மதுரை தோப்பூரில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை விரைவில் வழங்க வேண்டும் என்று அவர் கோரிக்கை விடுத்தார். மேலும், தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்காமல் நிலுவையில் உள்ள மத்திய அரசின் நிதியை விரைவாக விடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

அதேபோல், தமிழக வளர்ச்சி திட்டங்களுக்கு தேவையான நிதியை ஒதுக்க வேண்டி, கோரிக்கை மனு ஒன்றையும் பிரதமர் மோடியிடம் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.

பாஜக - அதிமுக கூட்டணி குறித்தும் ஆலோசனை

இதுதவிர, மேகதாட்டுவில் அணை கட்டுவது தொடர்பாக பிரதமர் மற்றும் மத்திய அமைச்சர்களை கர்நாடக முதல்வர் குமாரசாமி சமீபத்தில் சந்தித்துள்ளார். இத்திட்டங்களுக்கு அனுமதியளிக்கக் கூடாது என்று பழனிசாமி வலியுறுத்தியதாக தெரிகிறது.

மேலும், தமிழக அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான நிலக்கரியை வழங்கும்படியும் தமிழக அரசு கோரிக்கை விடுத்துள்ளது. இவை தொடர்பான கோரிக்கைகள் அந்த மனுவில் இடம்பெற்றதாக தெரிகிறது.

அதுமட்டுமின்றி, முதல்வர் பழனிசாமி - பிரதமர் மோடியின் இந்த சந்திப்பில், நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு பாஜக - அதிமுக கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை நடந்திருக்க வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

Narendra Modi Edappadi K Palaniswami
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment