Advertisment

நகைக் கடன் தள்ளுபடி: கூட்டுறவு வங்கிகளில் விவரம் சேகரிக்கும் பணி தீவிரம்

கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது.

author-image
WebDesk
New Update
co operative society bank, jewel loans waives, document verification going, tamil nadu govt, dmk, cm mk stalin, கூட்டுறவு வங்கிகளில் விவசாய நகைக் கடன் தள்ளுபடி, ஆவணங்கள் சேகரிக்கும் பணி தீவிரம், விவசாயிகள் நகைக்கடன், விவசாயக் கடன், கூட்டுறவு வங்கி, co operative society bank, agri loans waives, tamil nadu

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் திமுக அளித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார். அதன்படி, கூட்டுறவு வங்கிகளில் நிலுவையில் உள்ள நகைக்கடன் தள்ளுபடி தொடர்பாக, கூட்டுறவு வங்கிகளில் கடந்த ஏப்ரல் மாதம் வரை 5 பவுன் மற்றும் 5 பவுனுக்கு மேல் உள்ள நகைக்கடன் நிலுவை விவரங்களை சேகரித்து உடனே அனுப்ப வேண்டும் என்று கூட்டுறவுத் துறை உத்தரவிட்டுள்ளது.

Advertisment

கடந்த அதிமுக ஆட்சியில் தேர்தல் அறிவிப்பதற்கு முன்னதாக, கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன்கள் தள்ளுபடி, 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்வதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, உடனடியாக, தேர்தல் அறிவிக்கப்பட்டதால் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் மற்றும் 5 சவரன் நகைக்கடன் தள்ளுபடி செய்ததற்கான சான்றிதழ்கள் இன்னும் விவசாயிகளுக்கு அளிக்கப்படவில்லை.

அதே நேரத்தில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன், நகைக்கடன் அதிமுகக்காரர்களுக்கு அதிகமாக அளிக்கபட்டிருக்கிறது. அது பற்றி சரிபார்க்கப்பட வேண்டும் என்று திமுக சார்பில் விமர்சனங்கள் எழுந்தன.

நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றதையடுத்து மே மாதம் மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக பதவியேற்றார். இதனைத் தொடர்ந்து, திமுக தேர்தல் அறிக்கையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்த வாக்குறுதிகளை படிப்படியாக நிறைவேற்றப்படும் என்று அறிவித்தார்.

இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்கியதற்கான நிதி ஆதாரங்களின் விவரங்களையும், பயனாளிகள் விவரங்களையும் அலுவலகத்திற்கு மின்னஞ்சலிலும், தபாலிலும் அனுப்பி வைக்க வேண்டும் என அனைத்து மண்டல இணைப்பதிவாளர்களுக்கு கூட்டுறத்துறை சார்பில் சுற்றறிக்கை அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சேலம் மாவட்டத்தில் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் விவரங்கள் கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது. சேலம் மாவட்டத்தில், சம்பந்தப்பட்ட கூட்டுறவு வங்கி மூலம் நகைக்கடன் பெற்றவர்களுக்கு போன் மூலம் தகவல் தெரிவித்து நகைக்கடன் பெற்றதற்கான ஆவணங்களை வந்து ஒப்படைக்குமாறு தெரிவிக்கப்பட்டு வருகிறது.

நகைக்கடன் பெற்றவர்கள், அவர்களுடைய ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, பான் கார்டு போன்ற ஆவணங்களை கொடுத்து பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, மக்கள் கூட்டம் கூட்டுறவு வங்கிகளில் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக, நகைக்கடன் பெற்ற நபர்களை செல்போன் மூலம் தொடர்பு கொண்டும் விவரங்கள் சரிபார்க்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில், ஒருவரின் பெயரில் வெவ்வேறு கூட்டுறவு சங்கங்களில் நகைக்கடன் பெற்றுள்ளார்களா? என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றுள்ளவர்களின் ஆவணங்களை சேகரிக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்றுவருகிறது. கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் பெற்றவர்களின் ஆவணங்கள் விவரங்கள் சேகரிக்கும் பணி விரைவில் முடிவடைந்து விடும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Nadu Tamil Nadu Govt
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment