scorecardresearch

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீதம் மழை அதிகம்? கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பேட்டி

விவசாயத்திற்காக உடனடியாக வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். தென் மாவட்டங்களை பொருத்தவரை புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வடிகால் புதுவசதியை உடனடியாக செய்ய வேண்டும்.

எந்தெந்த மாவட்டங்களில் எத்தனை சதவீதம் மழை அதிகம்? கோவை வேளாண் பல்கலை துணைவேந்தர் பேட்டி

பி.ரஹ்மான் கோவை மாவட்டம்

தென்மேற்கு பருவமழையை பொருத்தவரை சராசரிக்கு அதிகமாகவே மழை பொழிந்துள்ளது என்று வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கிதாலட்சுமி கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை குறித்து செய்தியாளர்களை சந்தித்த கோவை வேளாண் பல்கலைகழகத்தில் வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர் கீதாலட்சுமி கூறுகையில், தென்மேற்கு பருவ மழை, ஜூன் 1ல் துவங்கி தற்போது வரை நல்ல மழை பொழிந்து வருவதாக தெரிவித்தார்.

மேலும் தமிழகத்தில் 190% மழை பொழிவு உள்ளது.அதன்படி இம்முறை 90% அதிகமழை பொழிந்துள்ளது. அதே சமயம் செங்கல்பட்டு, கள்ளகுறிச்சி, கன்னியாகுமரியில் போதுமான மழை இல்லை. நீலகிரி, கிருஷ்ணகிரி, தர்மபுரி மாவட்டங்களில் 150% மழை பெய்துள்ளது. அதன்படி 50% மழை அதிகமாக பொழிந்துள்ளது. இதனால் மேட்டூரில் இருந்து 20 நாட்களுக்கு முன்பே தண்ணீர் திறக்கப்பட்டு விட்டது.

தென்மேற்கு பருவமழையை பொறுத்தவரை மயிலாடுதுறை, நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர் என முக்கிய மாவட்டங்களில், திருவாரூரில் 110% அதிகமாக 200 மிமீ க்கு 422 மிமீ மழை பெய்துள்ளது. இதனால் விவசாயத்திற்காக உடனடியாக வடிகால் வசதி செய்யப்பட வேண்டும். தென் மாவட்டங்களை பொருத்தவரை புதுக்கோட்டை, மதுரை, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் வடிகால் புதுவசதியை உடனடியாக செய்ய வேண்டும்.

Chennai Rain

மதுரையில் பெரியார் வைகையில் குருவை நெல் நடவு செய்தவர்கள் அந்த நெற்பயிர்களை பாதுகாக்க வடிகால் வசதி செய்து வைத்து கொள்ள வேண்டும். இங்கு 80% வரை அதிகமாக பெய்து 444மிமீ வரை மழை பெய்துள்ளது. வடகிழக்கிலும், 419மிமீ மழை பொழிவு இருந்துள்ளது. மழை அதிகமான பெய்வதால் காய்கறி பயிர்கள் இருக்கும் இடத்தில் தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும்.

கோவை உட்பட மேற்கு மாவட்டங்களில் ஓரளவு மழைதான் பெய்துள்ளது. இதனால் பிரச்சனைகள் இல்லை மேலும் நீலகிரியில் 1700மிமீ மழை பெய்துள்ளது. இதனால் அங்கு மண் அரிப்பை தடுக்க நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இந்த மழையினால் நிலத்தடி நீர் ஓரளவு மேலே வந்துள்ளது. தமிழகத்தில் நல்ல மழை காலமாக அமைந்துள்ளது.

மேலும் நீர்பாசனம் அதிகம் உள்ள இடங்களில் வடிகால் வசதி செய்ய வேண்டும். தக்காளி உள்ளிட்ட காய்கறி பயிர்களை பொறுத்தவரை, அதிகமழை இருந்தாலும் மழை இல்லாவிட்டாலும் பிரச்சினை வரும். தக்காளி போன்ற செடிகள் மழை அதிகமாக வரும்போது செடியின் பாரம் தாளாமல் மண் மீது விழுந்து தக்காளி அழுகிவிடும்

இதனால் மழைக்காலங்களில் தக்காளியின் விலை அதிகரிக்கும். இதன் காரணமாக நாம் புரோட்டெக்டட் கல்டிவேசன் முறையில் தக்காளியை வளர்க்கிறாம். இதனால் தக்காளி கீழே விழாமலும் அழுகாமலும் இருக்கும் செங்கல் சூளை பகுதிகள் மூடபட்ட இடத்தில் உள்ள மண் தான் வளமான மண் அதனை எடுத்து செங்கல் செய்து விட்டதால் கீழே உள்ள மண் வளமாக இருக்காது.

எனவே தமிழக அரசு “waste land development” திட்டங்கள் மூலம் அங்கு மரங்கள் நட முயற்சி எடுத்து வருகிறது. இதற்காக குழுக்கள் அமைத்து அவர்களுக்கு தேவையான அனைத்து தொழில்நுட்ப விஷயங்களை கற்றுக் கொடுக்க உள்ளது. நிலத்தடி நீர்மட்ட கணக்கெடுப்பை பொறுத்தவரை துல்லியமாக கணக்கெடுக்கும் அளவிற்கு நீரின் மட்டம் உயரவில்லை. ஆனால் நிலத்தடி நீர் உயர்ந்துதான் உள்ளது. வெங்காயத்தை பொறுத்தவரை, டெமிக் என்ற முன்கூட்டியே விலை நிர்ணயம் செய்து கூறுவார்கள். இது தங்களது இணையதளத்திலும் உழவன் செயலிலும் உள்ளது. இதனை மக்கள் பார்த்தால் எப்போது எந்த பயிர்களை விளைவிக்கலாம் என அறிந்து கொள்ளலாம்

தங்களிடமும் மழைப்பொழிவை துல்லியமாக கணக்கிடுவதற்கு தொழில்நுட்ப வசதிகள் உள்ளது. 285 தானியங்கி வானிலை மையங்கள் இருக்கின்ற நிலையில் 240 மையங்கள் இயங்கி வருகிறது. மீதமுள்ளவை கூடிய விரைவில் இயங்கும். தற்போது 80% சரியாக கணித்து வருகிறோம். கன்னியாகுமரி மாவட்டத்தை பொருத்தவரை காற்றின் திசை மாறுபாடு காரணமாகவே இம்முறை குறைந்த அளவு மழைப்பொழிவு இருந்துள்ளது.

23 நாட்களுக்குள் அது சராசரி நிலையை எட்டிவிடும். வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் வடிகால் வசதியை செய்து வைத்து கொள்ள வேண்டும். வேளாண் பல்கலைக்கழகத்தில் 13 பட்டப் படிப்புகளுக்கு 10ம் தேதி அன்று ரேங்க் லிஸ்ட் வெளியிட முடிவு செய்து செய்யப்பட்டுள்ளது.

Heavy rain forecast for 8 districts in Tamil Nadu, chennai weather forecast, weather forecast, chennai rains, tamil nadu weatherman, கனமழை பெய்ய வாய்ப்பு, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது, சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம், weather in chennai for next 24 hour, chennai weather forecast 24 hours, Today weather, today district wise rainfall, Tirunelveli, Kanyakumari, Dharmapuri, Erode, thenkasi

மேலும் டிப்ளமோ போன்ற பட்டய படிப்புகளை பொறுத்தவரை தமிழக அரசு 3 இடங்களில் தோட்டகலை டிப்ளமோ படிப்பை வழங்கி வருகிறது. உறுப்பு கல்லூரிகளை 8 இடங்களிலும், இணைய தளம் வாயிலாக அப்ளை செய்ய கேட்டு கொள்கிறோம். பட்டயபடிப்புகளில் மொத்தம் அக்ரி கல்சரில் 760 இடங்கள், ஹார்ட்டி கல்சரில் 400 இடங்கள், என்ஜினியரிங் இல் 40 இடங்கள், தமிழ் வழியில் 80 இடங்கள் நிரப்ப உள்ளது. 35 நாட்கள் வரை அப்ளை செய்யலாம் என்று கூறியுள்ளார்.

மேலும் இலங்கை பொருளாதார சரிவை சரிசெய்ய ஆலோசனைகள் (technical inputs) மட்டும் வழங்கி உள்ளதாகவும் குழுக்கள் எதுவும் செல்லவில்லை எனவும் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Coimbatore agricultural university vice chancellor say about tamilnadu rain