Advertisment

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன்; இலக்கை நோக்கி பயணித்த சுயமான தீவிரவாதி!

கோவை கார் சிலிண்டர் வெடிப்பில் பலியான ஜமேஷா முபீன் தனது நாட்குறிப்பில் மற்ற கடவுள்களைப் பற்றி எழுதியுள்ளார். அவருடைய வீட்டில் கைப்பற்றப்பட்ட பொருட்களில் ஐ.எஸ்.ஐ.எஸ் குறியீடு கொண்ட பலகையும் இருந்துள்ளது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore blast

Tamil news updates

பிற மதங்களைச் சேர்ந்த கடவுள்களின் பெயர்கள், குடியுரிமை திருத்தம் சட்டம், கர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சை, முஸ்லீம்களை இரண்டாம் தர குடிமக்களாக நடத்தப்படுவது பற்றிய குறிப்புகள் கொண்ட விளக்கப்படம் - ஆகியவை கடந்த வாரம் கோவை கார் சிலிண்ட வெடிப்பில் உயிரிழந்த ஜமேஷா முபினின் வீட்டில் இருந்து தமிழக காவல்துறையினரால் மீட்கப்பட்ட குறைந்தது 4 டைரிகளில் தமிழில் கையால் எழுதப்பட்ட பதிவுகளில் ஒன்றாக உள்ளது.

Advertisment

கோவையில் உள்ள கோவில் அருகே 2 கேஸ் சிலிண்டர்கள் ஏற்றப்பட்ட கார் வெடித்து சிதறியதில் ஜமேஷா முபீன் (29) என்ற பொறியியல் பட்டதாரி உயிரிழந்தார். இந்த வழக்கில் அவரது கூட்டாளிகள் என்று கூறப்படும் முகமது அசாருதீன் மற்றும் கே அப்சர் கான் உட்பட 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மத்திய அரசு, மாநில அரசின் பரிந்துரையின் பேரில், இந்த வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பிடம் (என்ஐஏ) வியாழக்கிழமை ஒப்படைத்தது. என்.ஐ.ஏ வெள்ளிக்கிழமை எஃப்.ஐ.ஆர் பதிவு செய்தது.

இந்த வழக்கு விசாரணையை அதிகாரப்பூர்வமாக என்.ஐ.ஏ-விடம் ஒப்படைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தமிழ்நாடு காவல்துறையின் மூத்த புலனாய்வு அதிகாரிகள் தி சண்டே எக்ஸ்பிரஸிடம் பேசுகையில், தங்கள் விசாரணையில் இந்த வழக்கின் சில முக்கிய அம்சங்கள் தெரியவந்துள்ளன என்று தெரிவித்தனர்.

விசாரணையின் போது மீட்கப்பட்ட ஆதாரங்களைப் பற்றி அறிந்த ஒரு உயர்மட்ட அதிகாரிகள் வட்டாரம் கூறுகையில், கோவை, உக்கடத்தில் உள்ள ஜமேஷா முபீனின் வீட்டில் இருந்து மீட்கப்பட்ட புத்தகங்கள் மற்றும் வாசகங்கள் உள்ளிட்ட குறிப்பேடுகளில் ஒரு பகுதி டைரிகள் எனக் கூறினர்.

“ஜமேஷா முபீனின் நாட்குறிப்பு பதிவுகள் பெரும்பாலும் மற்ற மதங்கள், குறிப்பாக இந்து மதம் மற்றும் கிறித்துவம் பற்றிய அவரது பார்வையை வெளிப்படுத்துகின்றன. அவர் அந்த மதங்களின் கடவுள்களின் பெயர்களை மேற்கோள் காட்டியுள்ளார். மேலும், ஒருவரையொருவர் இணைக்கும் அம்புகளுடன் கையால் எழுதப்பட்ட சார்ட் விளக்கப்படத்தில் அவற்றை சித்தரித்துள்ளார். சி.ஏ.ஏ ஹிஜாப் சர்ச்சை, உணவு மீதான கட்டுப்பாடுகள், மாட்டிறைச்சி காரணமாக நடந்த கொலைகள் போன்ற சம்பவங்கள் இந்திய முஸ்லிம்கள் எதிர்கொள்ளும் பிரச்சனைகளாக குறிப்பிடப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் இரண்டாம் தர குடிமக்களாக மாறி வருகின்றனர். இந்தச் பிரச்னைகளை எப்படிச் சமாளிப்பது என்றும் அவர் திகைத்தார்” என்று வட்டாரங்கள் தெரிவித்தன. மேலும் சமய இலக்கியங்கள் அனைத்தும் தமிழில் உள்ளன என்று தெரிவித்தனர்.

தி சண்டே எக்ஸ்பிரஸ்ஸிடம் பேசிய கோவை நகர காவல்துறை ஆணையர் வி பாலகிருஷ்ணன், இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 6 பேரில் உள்ள முபீனின் கூட்டாளிகள் அசாருதீன் மற்றும் அஃப்சர் ஆகியோர் விசாரணையின் போது, ​​முஸ்லிம்களால் எதிர்கொள்ளப்படும் அடக்குமுறை குறித்து அடிக்கடி தனது கருத்தை வெளிப்படுத்தியதை ஒப்புக்கொண்டதாக கூறினார்.

“அவருடைய உக்கடம் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் வெடிகுண்டு தயாரித்தல், ஜிஹாத் மற்றும் பிற மதங்களைப் பற்றிய அவரது வெளிப்படையான பார்வைகள் பற்றியது. நாங்கள் விசாரித்த குற்றஞ்சாட்டப்பட்ட இருவரின் கருத்துப்படி, ஜமேஷா முபீன் இந்திய முஸ்லிம்கள் மற்றும் அவர்கள் எவ்வாறு ஒடுக்கப்படுகிறார்கள் என்பது குறித்து தனது கருத்தை வெளிப்படுத்துவார்” என்று பாலகிருஷ்ணன் கூறினார். முபீன் ஒரு சுயமான தீவிரவாதி என்று இதுவரை தங்கள் விசாரணையில் தெரியவந்துள்ளது. அவை பெரும்பாலும் புத்தகங்கள் மற்றும் இணையத்தில் இருந்து பெறப்பட்டது. மேலும், அவருக்கு எந்த அதிநவீன வெடிகுண்டு தயாரிக்கும் திறனும் இல்லை.” என்று கூறினார்.

சாதிக் முபீன் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் குண்டுவெடிப்பு பற்றிப் பேசிய பாலகிருஷ்ணன், “சனிக்கிழமை (அக்டோபர் 22) இரவு 11.25 மணியளவில், காஸ் சிலிண்டர்கள் மற்றும் பிற பொருட்களை தனது காரில் ஏற்றிக்கொண்டு, முபீன் அருகிலுள்ள சாலையில் சென்று அங்கு நிறுத்தினார். குண்டுவெடிப்புக்கு முன் அவர் இறுதி பயணத்தை தொடங்குவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு. அவர் ஒரு இலக்கை நோக்கிச் சென்று கொண்டிருந்தார் என்று நாங்கள் நம்புகிறோம். அந்த இலக்கு எதுவென இன்னும் அறியப்படவில்லை. அவர் கோயிலுக்கு வெளியே ஒரு போலீஸ் செக்போஸ்ட்டைக் கண்டபோது தன்னைத்தானே வெடிக்கச் செய்தார். முபீனின் இலக்கு குறித்த எந்த விவரங்களையும் அசாருதீனும், அஃப்ஸரும் வெளியிடவில்லை.” என்று கூறினார்.

முபீனின் வீட்டில் இருந்து பொலிசார் கைப்பற்றிய முக்கிய ஆதாரம், பச்சை சட்டத்துடன் ஐ.எஸ்.ஐ.எஸ் சின்னம் வரையப்பட்ட பலகை. “இதுவரை, அவர் வெளியில் இருந்து உதவி பெற்றதற்கான எந்த ஆதாரமும் இல்லை. ஆனால், மற்றவர்களை நாங்கள் விசாரித்ததில் முபீன், 200க்கும் மேற்பட்டவர்களைக் கொன்ற சுய-தீவிரவாதத் தாக்குதலாளியான சஹ்ரான் ஹாஷிம் (இலங்கையில் ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னால் இருந்த முக்கிய தற்கொலைப் படைத் தீவிரவாதி) மீது அதிக மரியாதை வைத்திருந்தார் என்பது தெரியவந்துள்ளது” என்று ஒரு விசாரணை அதிகாரி கூறினார்.

ஜமேஷா முபீன் செவித்திறன் மற்றும் பேச்சு குறைபாடுள்ள பெண்ணை தனது மத நம்பிக்கையால் ஏற்பட்ட தியாக உணர்வின் காரணமாக திருமணம் செய்திருந்தார் என்று கூறிய அதிகாரி, குண்டு வெடிப்புக்கு நான்கு நாட்களுக்கு முன்பு அவர் தனது மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளை அவரது வீட்டிற்கு அனுப்பினார். குண்டுவெடிப்புக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு, அவர் தனது புதிய மாருதி 800 காரில் பொருட்களை ஏற்றினார். அதை அவர் அஃப்சரின் குடியிருப்புக்கு அருகில் நிறுத்தினார். பின்னர் நள்ளிரவு 1 மணியளவில் வீடு திரும்பிய அவர், மாற்றுவதற்காக திரும்பிச் சென்றார்” என்று அந்த அதிகாரி கூறினார்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tamilnadu Coimbatore Nia
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment