Advertisment

மாநகர உளவுத்துறையின் தோல்வியே தவறான சம்பவங்கள் நடக்க  காரணம்

கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு, ஒரு அசாதாரண சூழலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

author-image
WebDesk
New Update
Coimbatore car blast

Coimbatore car blast

மாநகர உளவுத்துறையின் தோல்வியே தவறான சம்பவங்கள் நடக்க  காரணம் என கோவை மாவட்ட  ஐக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார்  குற்றம் சாட்டியுள்ளார்.

Advertisment

கோவை தெற்கு பகுதியில் கார் சிலிண்டர் வெடி விபத்திற்கு பிறகு, ஒரு அசாதாரண சூழலால் பதற்றம் ஏற்பட்டுள்ளது. அதற்காக மாநகர ஆணையரை சந்திக்க வந்ததாக கோவை மாவட்ட  ஐக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார்  தெரிவித்தார்.

publive-image

கோவை மாவட்ட  ஐக்கிய ஜமாத்தின் பொதுச்செயலாளர் அப்துல் ஜப்பார் 

செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், தீவிரவாத செயலில் ஈடுபட முயற்சி எடுத்திருக்கிறீர்கள். இறைவன் கோவை மாநகர மக்களை காப்பாற்றி இருக்கிறார். பாதை மாற்ற செயலில் ஈடுபட்டதற்கான தண்டனையை கடவுள்  வழங்கி இருக்கிறார்.

இந்த செயலில் ஈடுபட்டவர்கள் இன்னும் கோவையில் இருக்கின்றனர். அவர்களை கண்டுபிடித்து  கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் தவறு செயலில் ஈடுபடுபவர்களை ஒழிக்க ஜக்கிய ஜமாத் காவல்துறைக்கு ஒத்துழைப்பு தருவதோடு இணைந்தும் செயல்படும் என தெரிவித்தார்.

மாநகர ஆணையரை சந்திக்க வந்ததன் முக்கிய நோக்கமே மாநகர உளவுப்பிரிவு செயல்படவில்லை. அவர்கள் முறையாக அரசுக்கு தகவல் சொல்லவில்லையா என்ற கேள்வி எழுகிறது.

மாநகரின் முக்கிய பகுதியில் செயல்படும் குனியமுத்தூர், உக்கடம், பெரிய கடை வீதி, வெரைட்டி ஹால் ரோடு காவல் நிலையங்களில் புதிதாக  போடப்பட்ட உளவுத்துறை காவலர்களை எடுத்துவிட்டு அனுபவம் வாய்ந்த பழைய காவலர்களையே பணியமர்த்த  வேண்டும்.

அப்போது தான் உளவுத்துறை சிறப்பாக செயல்பட்டு குற்றங்களை ஒழிக்க முடியும் என்று அப்துல் ஜப்பார் தெரிவித்தார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment