Advertisment

பிரியாணிக்கு அக்கப்போரா? மருத்துவமனையை சேதப்படுத்திய கொரோனா நோயாளி...

தமிழகத்தில் 911 பேர்களுக்கு நோய் தொற்று உள்ளது. கோவையில் மட்டும் 86 நபர்கள் இந்நோய்க்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore Corona Patient damaged ESI hospital for not allowing him to eat Biriyani

Coimbatore Corona Patient damaged ESI hospital for not allowing him to eat Biriyani

Coimbatore Corona Patient damaged ESI hospital for not allowing him to eat Biriyani : தமிழகத்தில் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. இந்நிலையில் பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisment

கோவை, போத்தனூரை சேர்ந்த 27 வயது இளைஞர் கொரோனாவால் பாதிக்கப்பட்டதை தொடர்ந்து அவர் கோவை சிங்காநல்லூர் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் இ.எஸ்.ஐ, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும் படிக்க : ரெட்ரோ வரலட்சுமி, இந்த யோகா டீச்சர் யாரு? – புகைப்படத் தொகுப்பு

அவருக்கு நேற்று அவருடைய மனைவி பிரியாணி சமைத்து எடுத்து வந்துள்ளார். ஆனால் மருத்துவர்கள் நிச்சயமாக அந்த உணவை அவருக்கு தரக்கூடாது என்று திட்டவட்டமாக மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரம் அடைந்த அந்த நபர், மருத்துவமனையில் பொறுத்தப்பட்டிருக்கும் தீயணைப்பு கருவியை உடைத்துள்ளார்.

இளைஞரின் செயலால் அதிருப்தி அடைந்த மருத்துவ நிர்வாகம், அவரின் இந்த செயல்பாடு தொடர்பாக சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். ரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல், பொது சொத்துகளை சேதப்படுத்துதல் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து உள்ளது சிங்காநல்லூர் காவல்துறை.

நேற்றைய அறிவிப்பின் படி தமிழகத்தில் புதிதாக 77 கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் 911 பேர்களுக்கு நோய் தொற்று உள்ளது. இதில் கோவையில் மட்டும் 86 நபர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Tamil Nadu Coronavirus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment