Advertisment

பெண்ணின் கழுத்தில் புகுந்த இரும்பு கம்பி.. அறுவை சிகிச்சை செய்து வெற்றிகரமாக அகற்றிய மருத்துவர்கள்

அந்த பெண்ணுக்கு வலிப்பு வந்தபோது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தியதாக அவருடன் வந்த உறவினர்கள் தெரிவித்தனர்,

author-image
WebDesk
New Update
Tamil news

Doctors remove iron rod from woman’s neck

கோவையில் வலிப்பு வந்த பெண்ணுக்கு இரும்பு கம்பியை கொடுத்த நிலையில் அந்த கம்பி கழுத்துப் பகுதியில் குத்தியதையடுத்து, கை கால்கள்  செயலிழந்த பெண்ணிற்கு, கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர்கள் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை செய்தனர்.

Advertisment

கோவையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி, அன்று 28 வயது மதிக்கத்தக்க இளம்பெண் ஒருவர் கழுத்தின் முன் பகுதியில் இரும்பு கம்பி ஒன்று குத்தியதில், கை கால்கள் செயலிழந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

publive-image

அந்த பெண்ணுக்கு வலிப்பு வந்தபோது கையில் கொடுக்கப்பட்ட கம்பி கழுத்தில் குத்தியதாக அவருடன் வந்த உறவினர்கள் தெரிவித்தனர்,

இதையடுத்து ஸ்கேன் மற்றும் இதர பரிசோதனை முடிவில் கழுத்தில் வலது பக்கம் பாய்ந்த கம்பியானது மூச்சுக் குழாய், உணவு குழாய் மற்றும் ரத்த நாளங்களில் மிக அருகில் பாய்ந்து தண்டுவடத்தில் குத்தி இருப்பது தெரிய வந்தது.

publive-image

அரசு மருத்துவமணை முதல்வர் நிர்மலா

பின்னர் மருத்துவமனை முதல்வர் நிர்மலா ஆலோசனைப்படி, நிபுணர்கள் அறுவை சிகிச்சை செய்து பெண்ணின் கழுத்தில் பாய்ந்த கம்பியை எந்தவித பாதிப்பும் இன்றி அகற்றினர். அறுவை சிகிச்சைக்கு பின்னர் நோயாளி கை கால்கள் இயக்கம் சீரடைந்து அதன் பின்னர் வீடு திரும்பினார்.

இந்த சிக்கலான அறுவை சிகிச்சையை வெற்றிகரமாக செய்த மருத்துவ குழுவினர்களை அரசு மருத்துவமனை முதல்வர் நிர்மலா வெகுவாக பாராட்டினர் என்பது குறிப்பிடத்தக்கது.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment