Advertisment

அவைகளும் உயிர்தானே... பறவைகளுக்காக அரை ஏக்கரில் விவசாயம் செய்யும் முத்து முருகன்

கோவையில் 62 வயதான விவசாயி முத்து முருகன் அவைகளும் உயிர்தானே என்று பறவைகளுக்காக அரை ஏக்கரில் சிறுதானியங்களை விவசாயம் செய்துள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore farmer grow millets for wild birds, farmer grow millets for wild birds, பறவைகளுக்காக அரை ஏக்கரில் சோளம் கம்பு விவசாயம் செய்யும் விவசாயி, கோவை விவசாயி முத்து முருகன், farmer milltes production at half-acre of land, farmer fed of wild birds, farmer muthu murugan

விவசாயிகள் பெரும்பாலும் அதிக மகசூலுக்காகவும் சிலர் இயற்கை விவசாயமும் செய்கின்றனர். ஆனால், கோவையில் 62 வயதான விவசாயி முத்து முருகன் அவைகளும் உயிர்தானே என்று பறவைகளுக்காக அரை ஏக்கரில் சிறுதானியங்களை விவசாயம் செய்துள்ளார். விவசாயிகள் உலக மக்களுக்கு மட்டும் சோறிடுபவர்கள் அல்ல பறவைகளுக்கும் மற்றும் பிற உயிரினங்களுக்கும் உணவிடுபவர்கள் விவசாயிகள்தான் என்பதை நிரூபித்துள்ளார் இந்த பாசக்கார விவசாயி.

Advertisment

கோவையைச் சேர்ந்த விவசாயி முத்து முருகன் 1984-ம் ஆண்டில் இருந்து தனக்கு சொந்தமான நிலத்தில் விவசாயம் செய்துவருகிறார். கடந்த சில ஆண்டுகளாக முத்து முருகன் தன்னுடைய நிலத்தில் அரை ஏக்கரில் கம்பும் சோளமும் பயிர் செய்து வருகிறார். அதில், ஏராளமான பறவைகள் மகிழ்ச்சியாக தானியங்களை உண்டு பறந்து திரிந்து விளையாடுகின்றன.

விவசாயி முத்து முருகன் அந்த அரை ஏக்கரில் கம்பும் சோளமும் பறவைகளுக்காக மட்டுமே பயிர் செய்கிறார். இது அப்பகுதி மக்களிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்து முத்து முருகன் ஊடகங்களிடம் கூறுகையில், “புவி வெப்பமாதல் காரணமாக, நாம் கடுமையான தண்ணீர் பற்றாக்குறையை சந்தித்துள்ளோம். பறவைகளும் இதே பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளன. அதனால், இயற்கையாக விளையும் இந்த தானியங்களை பறவைகளுக்கு அளிக்க முடிவு செய்தேன். அதை தொடர்ந்து, பின்பற்றவும் முயற்சி செய்தேன். நிலத்தில் பூச்சிக்கொள்ளி மருந்துகளை தெளிப்பதில்லை. அதனால், அங்கே பறவைகள் அவை விரும்பும் இடத்தில் கூடு கட்டிக்கொள்கின்றன. சோளம் பயிர் நல்ல விளைச்சலைத் தரவில்லை. ஆனால், கம்பு நன்றாக வளர்ந்துள்ளன.” என்று முத்து முருகன் கூறினார்.

இப்படி, சோளம், கம்பு ஆகிய சிறுதானியங்களை பயிர் செய்து பறவைகளுக்கு உணவாக அளிப்பதால் பறவைகளை அழிவில் இருந்து காப்பாற்றும் என்று விவசாயி முத்து முருகன் கூறுகிறார்.

பறவைகளுக்கு தனியாக பயிர் செய்து உணவிடுவது குறித்து முத்து முருகன் கூறுகையில், “பல உயிரினங்களை அழிவிலிருந்து காப்பாற்ற இது நமக்கு கிடைத்த வாய்ப்பு. நம் நாட்டில் பொருட்கள் மிகவும் மாறிவிட்டது துரதிர்ஷ்டவசமானது. இந்த பறவைகளை விரட்ட பல விவசாயிகள் இளைஞர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளனர். விவசாயிகள் இன்று பணம் சம்பாதிப்பது பற்றி மட்டுமே சிந்திக்கிறார்கள். பசுக்கள் மற்றும் ஆடுகள் தங்கள் உணவை சாப்பிட்ட பின்னரே விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு செல்வார்கள். சுற்றுச்சூழலையும் அனைத்து உயிரினங்களையும் கவனித்துக்கொண்டால் மட்டுமே விவசாயிகள் பயனடைவார்கள் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். பறவைகள் மற்றும் விலங்குகளின் ஆரோக்கியத்திற்கும் அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும்” என்று கோரிக்கை வைக்கிறார் கருணை மிக்க விவசாயி முத்து முருகன்.

இன்று எல்லா தொழில்களிலும் லாபத்தையும் பணத்தையும் நோக்கமாகக் கொண்டு செயல்படத் தொடங்கிவிட்டனர். விவசாயத்திலும் மகசூலையும் லாபத்தையும் நோக்கமாகக் கொண்டு ரசாயன உரங்களை பயன்படுத்துவது விவசாயிகள் இடையெ அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. சிலர், ரசாயண உரங்களை தவிர்த்து இயற்கை விவசாயம் செய்தும் வருகின்றனர். அதே நேரத்தில், விவசாயிகள் பெரும்பாலும் தங்கள் விளைச்சலை பறவைகள் சாப்பிடுவதை விரும்பமாட்டார்கள். இப்படி எல்லா விவசாயிகளும் பறவைகளை விரட்டினால், அவைகள் உணவுக்கு எங்குதான் செல்லும். அத்தகை பறவைகளையும் சூழலியலில் அனைத்து உயிர்களும் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதையும் நோக்கமாகக் கொண்டு பறவைகளும் உயிர்தானே என்று நினைத்து விவசாயி முத்து முருகன் அவைகளுக்காக அரை ஏக்கரில் சிறுதானியங்களை பயிர் செய்வது அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Tamil Nadu Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment