கோவை மாவட்டம் அன்னூர் வட்டம் பொகலூர் ஊராட்சிக்கு உட்பட்ட கோபுராசிபுரம் மற்றும் கூளேகவுண்டன் புதூர் பகுதியை சேர்ந்த விவசாயிகள் இன்று கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.
அப்போது அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் 746 குட்டைகளை நிரப்ப வேண்டியும் ஜல்ஜீவன் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்க ஆவணம் செய்ய வேண்டி ஆட்சியரிடம் விவசாயிகள் மனு அளித்தனர்.
இதுகுறித்து அவர்கள் அளித்துள்ள மனுவில், தங்கள் பகுதியில் உள்ள குட்டைக்கு திருப்பூர்-மேட்டுப்பாளையம் சாலையில் இருந்து அன்னூர் சிறுமுகை சாலைக்கு இணைப்பு சாலை வழியாக அத்திக்கடவு அவிநாசி திட்டத்தின் கீழ் குழாய் அமைத்து 746 குட்டைக்கு தண்ணீர் வருவதை மாரநாயக்கர்(விவசாயி) என்பவர் தடுப்பதாக, அத்திக்கடவு அவினாசி திட்ட பொறியாளர் சாலமன் கூறுகிறார்.
இதனால் தங்கள் பகுதியில் உள்ள சுமார் 100 விவசாய குடும்பங்கள் பாதிக்கப்படுகிறது.
எனவே தங்கள் ஊருக்கு அவிநாசி அத்திக்கடவு திட்டத்தின் மூலம் அந்த 746 குட்டைகளை நிரப்பவும், ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்க ஆவணம் செய்யுமாறு விவசாயிகள் மனுவில் வலிறுத்தி உள்ளனர்.
மேலும் மாரநாயக்கர் என்பவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“