Advertisment

கோவை சம்பவம் எதிரொலி: திருச்சியில் அனாதையாக நின்ற 10 கார்கள் பறிமுதல்

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

author-image
WebDesk
New Update
Tiruchi car seized, Trichy car seized, Tamil news, Latest tamil news, Trichy news, Trichy, Tamil nadu news, திருச்சி செய்திகள், தமிழ் செய்திகள், திருச்சியில் கார்கள் பறிமுதல், பாஜக, திருச்சி, Tiruchi district, car seized, Tamilnadu news

கோவையில் கார் சிலிண்டர் வெடிப்பு சம்பவத்தின் எதிரொலியாக, திருச்சியில் கேட்பாரற்று சாலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்து 10 கார்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Advertisment

கடந்த 23.10.22-ம் தேதி கோவை மாநகரில் நடைபெற்ற காரில் சிலிண்டர் வெடித்தது தொடர்பாக தமிழக காவல்துறை இயக்குநரின் மேலான உத்தரவின்பேரில் திருச்சி மாநகரம் முழுவதும் சட்டம் ஒழுங்கை பாதுகாக்கவும், சந்தேக நபர்களை கண்காணிக்கவும், முக்கிய அரசு அலுவலங்கள், மத ஸ்தலங்கள், மற்றும் முக்கிய சாலைகளில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு (BDDS) உடன் இணைந்து தீவிர சோதனை செய்ய திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன், உத்தரவிட்டதின்பேரில், திருச்சி மாநகர காவல் துணை ஆணையர்கள் வடக்கு மற்றும் தெற்கு, சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.

அதன்படி இன்று திருச்சி மாநகரம் முழுவதும் சரக உதவி ஆணையர்கள் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தங்களுடைய காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பீட் (Beat) காவலர்கள் மற்றும் ரோந்து வாகனங்கள் (City Patrol Vehicle) மூலம் தீவிர வாகன தணிக்கை செய்யப்பட்டது.

மேலும் திருச்சி மாநகரை சுற்றி உள்ள 9 சோதனை சாவடிகள் மூலம் திருச்சி மாநகருக்குள் வரும் மற்றும் வெளியே செல்லும் அனைத்து வாகனங்களும் முழுமையாக தணிக்கை செய்யப்பட்டது. மேலும் முக்கிய பைபாஸ் சாலையில் மூன்று நெடுஞ்சாலை (Highway Patrol) ரோந்து வாகனங்களை கொண்டு வாகனங்களை தீவிரமாக கண்காணிக்கப்பட்டது.

இந்நிலையில் அமர்வு நீதிமன்ற காவல் நிலைய எல்லைக்குட்பட்ட லாசன்ஸ் ரோட்டில் ஐயப்பன்கோவில் அருகில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்ட்டிருந்து 1 கார் மற்றும் 2 இருசக்கர வாகனத்தையும், காந்தி மார்க்கெட் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பிரபாத் ரவுண்டான அருகில் 9 கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்ட்டிருந்த வாகனங்களை, வெடிகுண்டு கண்டுபிடிப்பு மற்றும் செயலிழப்பு பிரிவு (BDDS) உடன் இணைந்து சம்பவ இடத்திலே சோதனை செய்தும், வாகனங்களை கைப்பற்றி வழக்கு பதிவு செய்யப்பட்டு, தீவிர புலன்விசாரணை செய்யப்பட்டு வருகிறது.

மேலும் திருச்சி மாநகரில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் பொருட்டு இதுபோன்ற தொடர்ந்து அதிரடி சோதனை மேற்கொண்டும், குற்றங்களில் ஈடுபடுவோர் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என திருச்சி மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

செய்தி: க.சண்முகவடிவேல் - திருச்சி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"

Tiruchirappalli
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment