/indian-express-tamil/media/media_files/2025/10/06/tvmalai-spl-bus-2025-10-06-09-10-34.jpg)
கார்த்திகை தீபம் - தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
Today Latest News Updates: கரூரில் கடந்த மாதம் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்,, வேலுச்சாமிபுரத்தில் சாலையை அளவிட்டு 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
- Nov 01, 2025 21:36 IST
வேலூர்: மலைப்பகுதியில் யானை எலும்புக்கூடு கண்டுபிடிப்பு
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு வனச்சரகத்துக்குட்பட்ட அரவட்லா மலைப் பகுதியில் வனத்துறையினர் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது இறந்த யானையின் எலும்புக்கூடு இருப்பதை அவர்கள் கண்டுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்று வனத் துறை அலுவலர்கள், மருத்துவரை வரவழைத்து பரிசோதனை செய்தனர். பரிசோதனைக்குப் பிறகு இறந்த யானையின் எலும்புக்கூடுகளை வனப்பகுதியிலே தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து வனத் துறையினர் கூறுகையில், இறந்த யானை சுமார் 7 முதல் 8 வயது பெண் யானையாக உள்ளது. தண்ணீர் அருந்த வந்து தவறி விழுந்து யானை இறந்திருக்கக் கூடும் எனத் தெரிவித்தனர்.
- Nov 01, 2025 20:14 IST
கார்த்திகை தீபம்: தி.மலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்
தீபத் திருவிழாவிற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலைகு சுமார் 40 லட்சம்+ பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் பல்வேறு ஊர்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 4,764 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது. மேலும், வட்டார போக்குவரத்து துறை மூலம் திருவண்ணாமலையில் 9 தற்காலிக பேருந்து நிலையங்களில் இருந்து தேவைக்கேற்ப பேருந்து வசதி செய்துகொடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Nov 01, 2025 20:13 IST
தி.மலை பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிப்பு
ஐப்பசி மாதத்திற்கான பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரத்தை கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி பவுர்ணமி வருகிற 4-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 9.43 மணிக்கு தொடங்கி மறுநாள் (புதன்கிழமை) இரவு 7.27 மணிக்கு நிறைவடைகிறது. இந்த நேரத்தில் கிரிவலம் செல்லலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- Nov 01, 2025 19:45 IST
வால்பாறையில் சுற்றுலா வாகனங்களுக்கு இ-பாஸ் கட்டாயம்
வால்பாறையில் குற்றுச் சூழலை பாதுகாக்கும் வகையில் இ-பாஸ் நடைமுறையை கடைபிடிக்க கோர்ட்டு உத்தாவிட்டது. இதையடுத்து இன்று முதல் வால்பாறையில் இ-பாய் நடைமுறைக்கு வந்தது. https://www.tnepass.tn.gov.in/home இணையதளம் வாயிலாக இ-பாஸ் விண்ணப்பித்து பெற்று கொள்ளலாம். இதையடுத்து, வால்பாறைக்கு வரக்கூடிய சுற்றுலா பயணிகள் அனைவரும் இன்று இ-பாஸ் பெற்றே வந்தனர். ஆழியார் வனத் துறை சோதனை சாவடி, சோலையார் அணை இடதுகரை சோதனை சாவடி என 2 இடங்களில் வருவாய்த் துறை, உள்ளாட்சித்துறை, வனத்துறை மற்றும் காவல் துறையினர் இணைந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
- Nov 01, 2025 18:37 IST
கடலூர்: பைக் மீது ஏ.டி.எம் வாகனம் மோதியதில் 3 பேர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் கோண்டூர் அருகே பைக் மீது ஏடிஎம் வாகனம் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். தந்தை, மகன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், தாயும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது. வாகனம் நேருக்கு நேர் மோதியதில், அதன் கீழே சிக்கிய பைக் 20 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டது.
- Nov 01, 2025 17:27 IST
கரூர் சோகம்: 3டி லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவிடும் பணி
கரூர் வேலுச்சாமிபுரத்தில் 3d லேசர் ஸ்கேனர் கருவி மூலம் அளவிடும் பணி நிறைவடைந்தது.
கரூர் விஜய்புரையின்போது 41 பேர் உயிரிழந்த சம்பவ இடத்தில் சிபிசிஐடி அதிகாரிகள் 8 மணி நேரமாக விசாரணை நடத்தினர்
- Nov 01, 2025 17:19 IST
மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு கருத்து
கொடநாடு வழக்கில் எடப்பாடிதான் A1 என்றால் புடிச்சு ஜெயிலில் போடுங்களேன். நாங்கள்ளா வேண்டாமன்னு சொல்றோம்? சட்டப்படி ஜெயிலில் போடுங்க தம்பி. தி.மு.க. ஆட்சிதானே நடக்குது. திராணி இருந்தால், ஆதாரங்கள் இருந்தால் கைது பண்ணட்டும்
-மதுரையில் திண்டுக்கல் சீனிவாசன் பரபரப்பு கருத்து
- Nov 01, 2025 16:47 IST
கோயில் குளத்தில் மூழ்கி சகோதரர்கள் பலி
திருவள்ளூர் - திருவேற்காடு கோயில் குளத்தில் மூழ்கி அயனம்பாக்கத்தைச் சேர்ந்த தமீம் அன்சாரி என்பவரது மகன்களான ரியாஸ்(5), ரிஸ்வான்(3) ஆகியோர் பலியான சோகம் நிகழ்ந்துள்ளது.
பெற்றோர் வேலைக்கு சென்ற நிலையில் கோயில் குளத்தில் சடலமாக மீட்கப்பட்டனர். காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- Nov 01, 2025 14:15 IST
பழனிசாமி துரோகியா? நாங்கள் துரோகிகளா? - மதுரையில் டி.டி.வி தினகரன் பேட்டி
அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி தினகரன் மதுரையில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார். அப்போது அவர், "கொள்ளிக்கட்டையை தலையில் வைத்துக்கொண்டது போல எடப்பாடி பழனிசாமி செயல்படுகிறார். அ.தி.மு.க-வில் கொங்கு மண்டலத்தில் முக்கிய பங்கு வகித்தவர், ஏழு மாவட்டங்களின் செயலாளர்களுடன் ஜெயலலிதாவுக்கு நம்பிக்கையுடன் இருந்தவர் செங்கோட்டையன்.
செங்கோட்டையன் கட்சிக்கு விசுவாசமானவர்; கிளைச் செயலாளராக இருந்து அமைச்சராக உயர்ந்தவர். அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதற்கு அவர் வருந்த மாட்டார். ஜெயலலிதா முதல்வராக இருந்த காலத்திலும் எதிர்க்கட்சித் தலைவராக இருந்த காலத்திலும் பசும்பொன் நினைவிடத்திற்கு தொடர்ந்து வருகை தந்தவர் செங்கோட்டையன்.
“இப்போது அவர் அரசியலுக்காக அல்ல, மரியாதைக்காக பசும்பொன் நினைவிடத்திற்கு வந்துள்ளார். அதை எடப்பாடி தவறாக புரிந்து கொண்டு தேவையில்லாமல் நடவடிக்கை எடுத்துள்ளார். எடப்பாடிக்கு தற்போது விலாச புத்தி, விபரீத காலம் வந்து விட்டது போல உள்ளது. அவரின் அரசியல் அழிவை அவர் தானே உருவாக்கிக்கொண்டு வருகிறார். நாங்கள் அவரை வீழ்த்த வேண்டியதில்லை; அவர் தானாகவே வீழ்வார்,” என டிடிவி தினகரன் தெரிவித்தார்.
- Nov 01, 2025 12:46 IST
2026 தேர்தலில் மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறார் -டி.டி.வி. தினகரன்
2026 தேர்தலில் மோசமான தோல்வியை எடப்பாடி பழனிசாமி சந்திக்கப் போகிறார் என்று டி.டி.வி. தினகரன் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், "தகுதியில்லாத எடப்பாடி பழனிசாமி தகுதி உள்ள மூத்த நிர்வாகிகளை அதிமுகவில் இருந்து நீக்குகிறார். தென் தமிழ்நாட்டு மக்கள் எடப்பாடி பழனிசாமிக்கு உரிய பாடத்தை புகட்டுவார்கள். எடப்பாடி பழனிசாமிக்கு சுயநலத்தை தாண்டி எதுவும் இல்லை,"இவ்வாறு தெரிவித்தார்.
- Nov 01, 2025 12:31 IST
தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள் - சேலத்தில் இ.பி.எஸ் பேட்டி
சேலத்தில் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், "6 மாதங்களாக கட்சிக்கு எதிராக செங்கோட்டையன் செயல்பட்டு வந்தார். கட்சி சார்பட்ட விழாவில் ஜெயலலிதா படம் இடம்பெறவில்லை என தவறாக கருத்தை கூறினார் செங்கோட்டையன். நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் அதை விளக்கியபோது அவர் ஏற்கவில்லை. சட்டப்பேரவையில் திமுகவை எதிர்த்து ஒரு வார்த்தை கூட செங்கோட்டையன் பேசியதில்லை. தி.மு.க-வை ஆட்சியில் அமர்த்த ஓ.பி.எஸ் உள்ளிட்டோர் விரும்புகிறார்கள். அ.தி.மு.க தலைமைக்கு எதிராக செயல்பட்டால் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு இருக்க மாட்டோம். அ.தி.மு.க-வைப் பற்றி பேச டி.டி.வி தினகரனுக்கு எந்த தகுதியும் இல்லை. சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்றவாறு தங்களை மாற்றிக் கொள்பவர்கள்தான் ஓ.பி.எஸ், செங்கோட்டையன் போன்றோர்" என்று கூறினார்.
- Nov 01, 2025 12:12 IST
6 மாதங்களாக கட்சிக்கு எதிராகவே செங்கோட்டையன் செயல்பாடு இருந்து வருகிறது - எடப்பாடி பழனிசாமி பேட்டி
6 மாதங்களாக கட்சிக்கு எதிராகவே செங்கோட்டையன் செயல்பாடு இருந்து வருகிறது என்று அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியில், "அதிமுகவை பலவீனப்படுத்த யார் முற்பட்டாலும் பொறுத்துக்கொள்ள மாட்டோம். செங்கோட்டையன் பேச்சு மூலம் அவரது வன்மம் வெளிப்பட்டு விட்டது. அதிமுக தலைமைக்கு எதிராக செயல்பட்டால் நாங்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியுமா?" என்று தெரிவித்தார்.
- Nov 01, 2025 11:33 IST
கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் ஏ1 -செங்கோட்டையன் பரபரப்பு பேச்சு
கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த செங்கோட்டையன், கோடநாடு கொலை வழக்கில் எடப்பாடிதான் ஏ1. நான் பி டீம் அல்ல, யார் பி டீம் என்பதை நாடறியும் என்றார்.
- Nov 01, 2025 10:45 IST
அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் - ஆதரவாளர்களுடன் ஆலோசனை
அ.தி.மு.க-வில் இருந்து செங்கோட்டையனை நீக்கி கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் கோபிச்செட்டி பாளையத்தில் உள்ள செங்கோட்டையன் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை மேற்கொண்டார். செங்கோட்டையன் வீட்டிற்கு ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள் வருகை தந்தனர்.
- Nov 01, 2025 09:30 IST
எம்.சாண்ட் ஏற்றிச்சென்ற லாரி விபத்து - மணலில் சிக்கி 3 பேர் மரணம்
கரூர் அருகே எம்.சாண்ட் மணல் ஏற்றிச்சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான நிலையில், லாரியின் மேல் பகுதியில் அமர்ந்து சென்ற 3 வடமாநில தொழிலாளர்கள் மணல் குவியலில் சிக்கி பலியானிகர். லாரி ஓட்டுநரும் இன்னொரு வடமாநில தொழிலாளியும் காயங்களுடன் உயிர் தப்பினர்
- Nov 01, 2025 08:30 IST
ராஜராஜ சோழன் சிலைக்கு அரசு சார்பில் மரியாதை
தஞ்சை பெரிய கோவிலில் நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1040வது சதய விழாவில் தஞ்சை ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
- Nov 01, 2025 08:21 IST
2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் - உடன்பாடு ஏற்பட்டதால் வாபஸ்
மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர்கள் போராட்டம் திரும்பப் பெறப்பட்டது. காலமுறை பதவி உயர்வு வழங்கப்படாததைக் கண்டித்து 2 நாட்கள் பேராசிரியர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது. 15 நாட்களுக்குள் நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டது.
- Nov 01, 2025 08:21 IST
கரூர் துயரம் - சாலையை அளவிட்டு சி.பி.ஐ ஆய்வு
கரூரில் கடந்த மாதம் த.வெ.க தலைவர் விஜய் பிரச்சாரத்தின் போது கூட்ட நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இந்த வழக்கை சி.பி.ஐ-க்கு மாற்றி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில்,, வேலுச்சாமிபுரத்தில் சாலையை அளவிட்டு 2-வது நாளாக சிபிஐ அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us