/indian-express-tamil/media/media_files/2025/10/03/madurai-hc-crowd-2-2025-10-03-20-40-53.jpg)
இன்றைய பெட்ரோல், டீசல் விலை: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலை மாற்றியமைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ. 100.90-க்கும், டீசல் 92.48 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதேவேளை, இயற்கை எரிவாயு ஒரு கிலோ ரூ. 91.50 -க்கு விற்பனை செய்யப்படுகிறது.
- Oct 03, 2025 20:37 IST
நெடுஞ்சாலைகளில் கூட்டங்களுக்கு அனுமதி கூடாது - ஐகோர் இடைக்கால உத்தரவு
நெடுஞ்சாலைகளில் கூட்டங்களுக்கு அனுமதி கூடாது என்று உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு இடைக்கால உத்தரவிட்டுள்ளது.
“எந்தக் கட்சியின் பொதுக்கூட்டம், பரப்புரைக் கூட்டத்தையும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் நடத்தக்கூடாது. குடிநீர், உணவு, கழிப்பிடம் மற்றும் மருத்துவ வசதிகள் உள்ளதா என ஆய்வு செய்த பிறகே கூட்டங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும். அடிப்படை வசதிகள் செய்திருப்பதை காவல்துறை உறுதி செய்ய வேண்டும். அசம்பாவிதம் நடைபெறாமல் பார்த்துக்கொள்வேன் என கட்சிகளிடம் உறுதிமொழி வாங்கிய பிறகே காவல்துறை அனுமதி அளிக்க வேண்டும்” என சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட 7 பேர் தாக்கல் செய்த பொதுநல வழக்கில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நீதிபதிகள் தண்டபாணி, ஜோதிராமன் அமர்வு இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.
- Oct 03, 2025 20:32 IST
நெல்லையில் இருந்து தாம்பரத்துக்கு ஆயுத பூஜை சிறப்பு ரயில் அறிவிப்பு
ஆயுத பூஜை விடுமுறைக் கூட்ட நெரிசலைக் கருத்தில் கொண்டு, அக்டோபர் 5, 2025 அன்று திருநெல்வேலியில் இருந்து தாம்பரத்திற்கு முன்பதிவில்லா சிறப்பு ரயில் (Unreserved Special) ஒன்று இயக்கப்படவுள்ளது. ஆயுத பூஜை விடுமுறைக்குப் பிறகு பயணிகள் திரும்புவதைக் கருத்தில் கொண்டு இந்தச் சேவை அறிவிக்கப்பட்டுள்ளது.
ரயில் குறித்த விவரங்கள் (06014 திருநெல்வேலி - தாம்பரம் முன்பதிவில்லா சிறப்பு ரயில்):
ரயில் எண் 06014 (திருநெல்வேலி - தாம்பரம்)
புறப்படும் தேதி அக்டோபர் 5, 2025 (ஞாயிற்றுக்கிழமை)
புறப்படும் நேரம் மாலை 4:50 மணி (திருநெல்வேலி)
சென்றடையும் நேரம் அடுத்த நாள் (அக்டோபர் 6, திங்கள்) அதிகாலை 03:00 மணி (தாம்பரம்)
ரயில் பெட்டிகள் 11 - இரண்டாம் வகுப்பு இருக்கை பெட்டிகள் (Second Class Seating Coaches), 4 - இரண்டாம் வகுப்பு பொதுப் பெட்டிகள் (General Second Class Coaches), 2 - மாற்றுத்திறனாளிகளுக்கான பெட்டிகள் (Divyangjan Friendly)இந்தச் சிறப்பு ரயில் திருநெல்வேலியில் இருந்து புறப்பட்டு, நாகர்கோவில், வள்ளியூர், நாங்குநேரி, திருச்செந்தூர், மதுரை, திண்டுக்கல், விருத்தாசலம் உள்ளிட்ட முக்கிய நிலையங்களில் நின்று செல்லும்.
- Oct 03, 2025 19:36 IST
‘அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்றுதான் ஸ்டாலின் கரூர் சென்றார்’ - இ.பி.எஸ் விமர்சனம்
தருமபுரி மாவட்டத்தில் பேசிய அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, “அரசியல் ஆதாயம் தேட வேண்டும் என்றுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கரூர் சென்றார்; உண்மையிலேயே மக்கள் பாதிக்கப்பட்டார்கள் என்று அவர் செல்லவில்லை. கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து 68 பேர் உயிரிழந்தபோது அந்த மக்களை முதல்வர் ஸ்டாலின் ஏன் சந்திக்கவில்லை. சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால்தான் முதல்வர் ஸ்டாலின் கரூர் சென்றார்.” என்று விமர்சனம் செய்தார்.
- Oct 03, 2025 18:16 IST
த.வெ.க நிர்வாகிகள் ஆனந்த், நிர்மல்குமார் முன்ஜாமின் மனுக்கள் தள்ளுபடி
கரூர் கூட்டநெரிசல் வழக்கு தொடர்பான த.வெ.க பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார் ஆகியோரின் முன்ஜாமின் மனுக்களை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது
- Oct 03, 2025 16:49 IST
நாளை எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் நாளை திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், ராணிபேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை ஆய்வு மையம்
- Oct 03, 2025 16:18 IST
கிராம சபைக் கூட்டம்: காவலர்களை மண்டபத்திற்குள் வைத்துப் பூட்டிப் போராட்டம்
காந்தி ஜெயந்தி சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் அதிகாரிகள் பங்கேற்காததைக் கண்டித்து, பாகூர் குருவிநத்தம் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மின்வெட்டு, சாலை, பாலம் உள்ளிட்ட பல ஆண்டு கால நிலுவையில் உள்ள கோரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், கூட்டத்தில் இருந்த ஊழியர்கள் மற்றும் காவலர்களை மண்டபத்திற்குள் வைத்துப் பூட்டிப் போராட்டம் நடத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாகப் போலீசார் உறுதியளித்ததைத் தொடர்ந்து, போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
- Oct 03, 2025 15:21 IST
பல மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு
திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், அரியலூர், சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
- Oct 03, 2025 14:42 IST
திருச்செந்தூரில் பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் 2 பேர் பலி
திருச்செந்தூர் அருகே இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதியதில் இருவர் உயிரிழந்தனர். குலசேகரன்பட்டினம் தசரா திருவிழாவில் பங்கேற்றுவிட்டு சொந்த ஊர் திரும்பியபோது விபத்து ஏற்பட்டது. இருசக்கர வாகனத்தில் சென்ற குரு (25), ரஞ்சித் (18) உயிரிழந்த நிலையில் பாரத் (16) படுகாயம் அடைந்துள்ளார்.
- Oct 03, 2025 14:32 IST
மீண்டும் வடகலை - தென்கலை மோதல்
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் மீண்டும் வடகலை - தென்கலை பிரிவினர் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. துப்புல் வேதாந்த தேசிகர் மங்களா சாசன உற்சவத்தில் ஸ்தோத்திரம் பாடுவதில் பிரச்னை மூண்ட்டது. இது தொடர்பாக போலீசில் புகாரளிக்கப்பட்டது
- Oct 03, 2025 14:30 IST
கீழடி கண்டேன், பெருமிதம் கொண்டேன் - ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவு
"30 மாதங்களில் 12 லட்சம் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது கீழடி அருங்காட்சியகம். வெளிமாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து வருவோரும் தமிழரின் தொன்மை கவினுறக் காட்சிப்படுத்தப்பட்டிருப்பதக் கண்டு வியப்பதை இன்று நடந்த ஆய்வின்போது அறிந்துகொண்டேன்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
- Oct 03, 2025 14:01 IST
த.வெ.க-வினர் செயல்பாடுகளால் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம்- காவல்துறை
த.வெ.க-வினரின் செயல்பாடுகளால் நாமக்கலில் ரூ.5 லட்சம் அளவுக்கு சேதம் என உயர்நீதிமன்றத்தில் காவல்துறை விளக்கம். பொது சொத்துக்கள் சேதப்படுத்தியதாக மாவட்டச் செயலாளர் சதீத் குமார் மீது மேலும் 8 வழக்குகள் உள்ளன.
- Oct 03, 2025 13:55 IST
எடப்பாடியை வரவேற்று த.வெ.க நிர்வாகிகள் வைத்த பேனர் நீக்கம்
தருமப்புரியில் பரப்புரைக் கூட்டத்திற்கு வந்த எடப்பாடியை வரவேற்று த.வெ.க நிர்வாகிகள் பேனர் வைத்த நிலையில் புகைப்படம் சமூக வலைதளத்தில் பரவியதால் பேனர் அகற்றம்.
- Oct 03, 2025 13:52 IST
சி.பி.ஐ விசாரணை தேவையில்லை - அரசு தரப்பு வாதம்
கூட்ட நெரிசல் குறித்து சி.பி.ஐ விசாரணை கோரும் வழக்கில் எந்த சட்டவிரோத செயலையும் குறிப்பிடவில்லை. ஆதாரம் இன்றி வழக்கு தாக்கலால் கூட்ட நெரிசல் குறித்து சிபிஐ விசாரணை தேவையில்லை - பொது நல மனுக்கள் மீதான விசாரணையில் அரசு தரப்பு வழக்கறிஞர் உயர்நீதிமன்றம் கிளையில் வாதம்.
- Oct 03, 2025 13:48 IST
மருத்துவமனை தாக்குதல் வழக்கு- த.வெ.க மாவட்ட செயலாளருக்கு முன்ஜாமின் மறுப்பு
த.வெ.க தலைவர் விஜயின் நாமக்கல் பரப்புரையின் போது தனியார் மருத்துவமனை தாக்கப்பட்ட வழக்கில், த.வெ.க. மாவட்ட செயலாளருக்கு முன்ஜாமின் வழங்க உயர் நீதிமன்றம் மறுப்பு.
- Oct 03, 2025 12:28 IST
கீழடி அருங்காட்சியத்திற்கு வருகை தந்த முதலமைச்சர் ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்று காலையில் நடைபெற்ற கள ஆய்வு மற்றும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட முதல்வர் ஸ்டாலின், மதுரை செல்லும் வழியில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடி அருங்காட்சியத்திற்கு வருகை தந்து அங்குள்ள பொருட்களை பார்வையிட்டு வருகிறார்.
- Oct 03, 2025 12:21 IST
வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை எந்த கூட்டத்திற்கும் அரசு அனுமதி தராதது - மதுரை ஐகோர்ட்டில் அரசு பதில்
கரூர் உயிரிழப்பு தொடர்பான வழக்கு விசாரணையின் போது வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்படும் வரை எந்த கூட்டத்திற்கும் அனுமதி தராது என்று அரசு பதிலளித்துள்ளது
- Oct 03, 2025 11:58 IST
210 தொகுதிகளில் அதிமுக வெல்லும் - எடப்பாடி பழனிசாமி
தருமபுரி அரூர் தொகுதியில் அதிமுகவுக்கு கூடிய கூட்டத்தை முதல்வர் திரும்பிப் பார்க்க வேண்டும்; அடுத்தாண்டு அதிமுக கூட்டணி. 210 இடங்களில் வெல்லும் என்பதற்கான சாட்சி இந்த கூட்டம். 2021 தேர்தல் அறிக்கையில் 525அறிவிப்புகளை வெளியிட்ட ஸ்டாலின் 10% கூட நிறைவேற்றவில்லை; பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக பெற்று 4 ஆண்டுகளில் ரூ.22 ஆயிரம் கோடி கொள்ளை அடித்தனர் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
- Oct 03, 2025 11:37 IST
புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்
புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கியுள்ள இந்த புத்தகத் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
- Oct 03, 2025 11:16 IST
கரூர் சம்பவத்தில் சிபிஐ விசாரணை - பாஜக கவுன்சிலர் முறையீடு
கரூரில் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவத்தில் சிபிஐ விசாரணை கோரி பாஜக கவுன்சிலர் உமா ஆனந்த் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு. உயர்நீதிமன்ற மதுரை அமர்வை அணுக உமா ஆனந்த் தரப்புக்கு நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
- Oct 03, 2025 11:15 IST
தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் ஒன்றிய அரசுக்கு இளக்காரம் - முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாட்டு மீனவர்கள் என்றால் ஒன்றிய அரசுக்கு இளக்காரமாக போய்விட்டது. கச்சத்தீவை மீட்க வேண்டும் என பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஒன்றிய அரசுக்கு அனுப்பினோம்; நமது மீனவர்களை காக்க ஒன்றிய அரசு இதுவரை ஒன்றும் செய்யவில்லை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Oct 03, 2025 10:59 IST
"கரூருக்கு விசாரணைக்குழுவை பாஜக அனுப்பியது ஏன்?" - முதலமைச்சர் ஸ்டாலின்
கரூருக்கு விசாரணைக்குழுவை பாஜக அனுப்பியது ஏன்? மணிப்பூர், குஜராத், கும்பமேளா சம்பவங்களுக்கு விசாரணை குழுவை ஏன் அனுப்பவில்லை, தமிழ்நாட்டின் மேல் வன்மத்தோடு செயல்படும் மத்திய பாஜக அரசு. வெள்ள பாதிப்பின் போது தமிழகம் வராத மத்திய நிதி அமைச்சர் தற்போது கரூர் வந்தது ஏன்? அடுத்த ஆண்டு தேர்தல் என்பதால் ஆதாயம் தேட முயலும் பாஜக என்று பல கேள்விகளை வைத்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்
- Oct 03, 2025 10:58 IST
மற்ற வழக்குகள் குறித்து எங்களுக்கு தொடர்பு இல்லை - த.வெ.க. வழக்கறிஞர் அறிவழகன்
புஸ்ஸி ஆனந்த், நிர்மல் குமார் ஆகியோரின் முன் ஜாமின் மனு மீதான விசாரணைக்கு மட்டுமே நாங்கள் ஆஜராக உள்ளோம். மற்ற வழக்குகள் குறித்து எங்களுக்கு தொடர்பு இல்லை என்று உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் த.வெ.க. வழக்கறிஞர் அறிவழகன் பேட்டியளித்துள்ளார்.
- Oct 03, 2025 10:51 IST
டிசம்பரில் ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம்
இரண்டே ஆண்டுகளில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை முடித்த அரசு திமுக அரசு ராமநாதபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம் டிசம்பர் மாதத்தில் தொடங்கி வைக்கப்படும். ராமநாதபுரம் மாவட்டத்தை இனிமேல் தண்ணீர் இல்லாத காடு என சொல்ல முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
- Oct 03, 2025 10:50 IST
தன்னை உத்தமராக்கிக் கொள்ள பாஜகவின் வாஷிங் மெஷினில் குதித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
தவறு செய்வோர், அதில் இருந்து தப்பிக்க | பயன்படுத்தும் வாஷிங் மெஷின்தான் பாஜக. தன்னை உத்தமராக்கிக் கொள்ள அதில் குதித்துள்ள பழனிசாமிக்கு, ஆள் சேர்க்கும் அசைன்மெண்ட்டை பாஜக கொடுத்துள்ளது | கூட்டணிக்கு யாராவது வருவார்களா? என எடப்பாடி பழனிசாமி ஊருக்கு ஊர், மேடைக்கு மேடை பேசிக்கொண்டு வருகிறார் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் பேசியுள்ளார்.
- Oct 03, 2025 10:49 IST
கரூர் விஜய் பிரச்சார நெரிசல் மரணம் - 7 வழக்குகளின் விசாரணை மதுரை ஐகோர்ட்டில் தொடக்கம்
கரூர் விஜய் பிரச்சார நெரிசல் மரணம் தொடர்பான மனுக்கள் மீதான விசாரணை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தொடங்கியது. 41 பேர் உயிரிழந்தது தொடர்பாக 7 வழக்குகள் விசாரணை செய்யப்படவுள்ளது.
- Oct 03, 2025 10:46 IST
மேட்டூர் அணைக்கு நிலவரப்படி நீர் வரத்து 4863 கன அடியாக சரிவு
மேட்டூர் அணைக்கு இன்று காலை நிலவரப்படி நீர் வரத்து 4863 கன அடியாக சரிந்துள்ளது. அணையின் நீர் மட்டம் 115.50 அடியாகவும், நீர் இருப்பு 86.475 டி.எம்.சி. ஆகவும் உள்ளது. அணையில் இருந்து மொத்தமாக 18,500 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
- Oct 03, 2025 10:46 IST
பெண் சிசுக் கொலைக்கு ஆதரவாக சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டு வந்த நபர் கைது
பெண்களுக்கு எதிராகவும், பெண் குழந்தை கொலைக்கு ஆதரவாகவும் முகமூடி அணிந்து சமூக வலைதளங்களில் கருத்து வெளியிட்ட தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தைச் சேர்ந்த 35 வயதான திலீபன் என்பவர், சமூக ஊடகங்களில் புகார் எழுப்பப்பட்டதையடுத்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் பாளை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
- Oct 03, 2025 10:32 IST
தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு: முதலமைச்சர்
தமிழ்நாட்டுக்கு வஞ்சகம் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளது ஒன்றிய அரசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டின் மீதும் தமிழர்கள் மீதும் வன்மத்தை காட்டுகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாடு மீனவர்களை காக்க ஒன்றிய அரசு எதுவும் செய்யவில்லை என்று முதல்வர் குற்றச்சாட்டு. பிரதமர் பெயரில் உள்ள ஒன்றிய அரசின் திட்டத்துக்கும் திமுக அரசுதான் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் கூறியுள்ளார்.
- Oct 03, 2025 10:28 IST
ராமநாதபுரம் மாவட்டத்துக்கு 9 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராமநாதபுரம் மாவட்டத்திற்கு 9 புதிய வளர்ச்சி அறிவிப்புகளை வெளியிட்டார். இதில், ரூ.30 கோடியில் தேசிய நெடுஞ்சாலை 6 வழிச்சாலையாக மாற்றப்பட உள்ளது. திருவாடானை மற்றும் ஆர்.எஸ். மங்கலம் பகுதிகளில் ரூ.18 கோடியில் முக்கிய கண்மாய்கள் மேம்படுத்தப்படவுள்ளன. கடலாடி வட்டத்தில் உள்ள கண்மாய் மற்றும் சிக்கல் கண்மாய்களுக்கு முறையான மறுசீரமைப்பு செய்யப்பட உள்ளதாகவும், பரமக்குடியில் ரூ.4.5 கோடியில் புதிய அலுவலக கட்டடம் கட்டப்பட உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. ராமநாதபுரம் பழைய பேருந்து நிலையம் நவீன வணிக வளாகமாக மாற்றப்படவுள்ளதாகும், அரசு மகளிர் கல்லூரியில் ரூ.10 கோடியில் புதிய வகுப்பறை கட்டடங்கள் கட்டப்பட உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டது. கீழக்கரை நகராட்சிக்கு ரூ.3 கோடியில் புதிய அலுவலக கட்டடம், கமுதியில் விவசாயிகள் நலனுக்காக ரூ.1 கோடியில் 100 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக் கிடங்கு அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. இவை அனைத்தும் மாவட்டத்தின் வளர்ச்சிக்கும் சமூக நலனுக்குமான முக்கிய முயற்சிகள் ஆகும்.
- Oct 03, 2025 10:22 IST
ராமநாதபுரத்தில் பணிகளை தொடங்கி வைத்தார் முதல்வர்
ராமநாதபுரத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு விழா ஒருங்கிணைந்த பேரூந்து நிலையம், பரமக்குடியில் கல்லூரி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி கட்டிடம், கோவிலாங்குளத்தில் பள்ளி மாணவர்களுக்கான சமூக நீதி விடுதி, தங்கச்சிமடத்தில் மேல்நிலைப்பள்ளி கட்டிடங்களை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள புல்லாங்குடி பகுதியில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று ரூ.738 கோடி மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகளை வழங்கி, முடிக்கப்பட்ட திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
- Oct 03, 2025 10:11 IST
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.176.59 கோடி மதிப்பிலான முடிவுற்ற பணிகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.176 கோடியே 59 லட்சம் செலவிலான 109 முடிவுற்ற பணிகளை திறந்து வைத்து, ரூ.134 கோடியே 45 லட்சம் மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடியே 83 லட்சம் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இதையடுத்து முதலமைச்சர் ஆற்றிய உரையில்; ராமநாதபுரம் தண்ணீர் இல்லா காடு என்பதை மாற்றியது திமுக அரசுதான். விரிவாக்கப்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தின் கீழ் 2.95 லட்சம் மக்கள் பயன்பெறப்போகின்றனர்" என உரையாற்றினார்.
- Oct 03, 2025 10:10 IST
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோவிலுக்குள் புகுந்த காட்டு யானையால் பரபரப்பு
வெள்ளிங்கிரி ஆண்டவர் கோயிலுக்குள் புகுந்த காட்டு யானையை கண்டு பக்தர்கள் அலறியடித்து ஒட்டியுள்ளனர்.யானை சிறிது நேரம் உலாவியபின் மீண்டும் வந்த வழியாகவே வெளியே சென்றது. வனத்துறையினர் மீண்டும் யானை கோயில் வளாகத்திற்கு வராமல் கண்காணிப்பை தீவிரப்படுத்தி, பக்தர்கள் பாதுகாப்பாக செல்ல ஏற்பாடுகளை செய்தனர்.
- Oct 03, 2025 09:43 IST
ராமநாதபுரம் வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்
ராமநாதபுரத்தில் இன்று நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார் முதல்வர் ஸ்டாலின். ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ.134.45 கோடி மதிப்பீட்டிலான 150 புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் இன்று அடிக்கல் நாட்டுகிறார். அதேபோல், பல்வேறு துறைகளின் சார்பில் 50,752 பயனாளிகளுக்கு ரூ.426 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.
- Oct 03, 2025 09:33 IST
என்.எல்.சி சூரிய மின்சக்தி துறையின் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டம்
மத்திய அரசு அறிவித்த குறைந்தபட்ச ஊதியம், மாதம் 26 நாட்கள் பணி வழங்க கோரி, கடலூரில் என்.எல்.சி சூரிய மின்சக்தி துறையின் தொழிலாளர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
- Oct 03, 2025 08:54 IST
3 மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் அதிக மாணவர் சேர்க்கை -தொடக்க கல்வித்துறை
விஜயதசமி தினமான நேற்று, அரசு பள்ளிகளில் ஒரு லட்சத்திற்கும்மேல் மாணவர் சேர்க்கை நடைபெற்றுள்ளதாக கூறியுள்ள தொடக்க கல்வித்துறை, விழுப்புரம், வேலூர், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் அதிகளவில் மாணவர்கள் சேர்க்கை நடந்துள்ளதாக கூறியுள்ளது.
- Oct 03, 2025 08:04 IST
கரூர் துயர சம்பவம் - இன்று விசாரணை
கரூர் கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் இன்று விசாரணை. முன்ஜாமின் கோரி தவெக பொதுச்செயலாளர் ஆனந்த், நிர்மல்குமார் தாக்கல் செய்த மனு உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடைபெறவுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.
/indian-express-tamil/media/agency_attachments/33Ho9XHwZawzDekwDLnu.png)
Follow Us