Advertisment

குப்பை கொட்டுவதை தடுக்க, வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி

கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சாலையோரங்களில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore news

notice board in Vadivelu verse style

கோவை மாவட்டம் கருமத்தம்பட்டி அடுத்த கணியூர் ஊராட்சிக்கு உட்பட்டது இந்திரா நகர் பகுதி. இங்கு ஏராளமான மக்கள் வசித்து வருகிறார்கள்.

Advertisment

கடந்த சில மாதங்களாகவே இந்த பகுதியில் சாலையோரங்களில் அப்பகுதி மக்கள் குப்பைகளை கொட்டி வந்தனர்.

publive-image

இதனால் அங்கு சுகாதார சீர்கேடு ஏற்பட்டது. மேலும் இவர்கள் கொட்டும் குப்பைகளில் -  கோழிவுக்கழிவுகள் - உணவு பொருட்கள் கிடப்பதால் அதனை உண்பதற்காக நாய்கள் தொல்லையும் அதிகரித்து காணப்பட்டது.

மேலும் சாலையில் செல்வோர் மீது குப்பையில் உள்ள பிளாஸ்டிக் பேப்பர் பறந்து விழுந்து சிறு, சிறு விபத்துகளும் ஏற்பட்டு வந்ததது.

இந்த நிலையில், மக்கள் சாலையோரங்களில் குப்பை கொட்டுவதை தவிர்க்க முடிவு செய்த கணியூர் ஊராட்சி நிர்வாகம், அந்த பகுதியில் குப்பை கொட்டாதீர் என நூதனமான அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளனர்.

publive-image

வடிவேலு வசன பாணியில் அறிவிப்பு பலகை வைத்த ஊராட்சி

இந்த அறிவிப்பு பலகையானது நகைச்சுவை நடிகர் வடிவேலு வின்னர் படத்தில் பேசிய ஒரு பிரபலமான வசனத்தை போன்று உள்ளது. அந்த அறிவிப்பு பலகையில், இந்த இடத்துக்கு நீயும் குப்பை கொட்ட வரக்கூடாது! நானும் வரமாட்டேன் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது.

இது அந்த பகுதி பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகளிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இதையடுத்து பொதுமக்கள் குப்பை கொட்டுவதை தவிர்க்கின்றனர்.

ஊராட்சி நிர்வாகம் சார்பில் வீடு வீடாக சென்று சுகாதாரப் பணியாளர்கள் குப்பையை சேகரித்து செல்கின்றனர்.

செய்தி: பி. ரஹ்மான்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment