By: WebDesk
Updated: December 16, 2020, 05:38:15 PM
Travel and Tourism : இந்த கொரோனா ஊரடங்கில் இருந்து கொஞ்சம் கொஞ்சம் தளர்வுகள் அறிவிக்கப்பட்டவுடன் எங்கே செல்வது? எங்கே சுற்றிப்பார்ப்பது? அதற்கு அனுமதி உண்டா என்று 1008 கேள்விகள் மனதிற்குள் தோன்றிக் கொண்டே இருக்கும். சில இடங்களில் அனுமதி இருக்கும். சில இடங்களில் ஆன்லைன் புக்கிங் தேவைப்படும். எங்கே தங்குவது என்ற குழப்பமெல்லாம் ஏற்படும். உங்களின் தலைவலியை குறைக்க சில தேர்வுகளை நாங்கள் தினமும் வழங்கி வருகிறோம். உங்களுக்கு விருப்பமான இடத்தை தேர்வு செய்து நீங்கள் சென்று வரலாம்.
மேலும் படிக்க : 9 மாதங்களுக்கு பிறகு குரங்கு நீர்வீழ்ச்சியில் குளிக்க அனுமதி !
கோவையில் அமைந்திருக்கும் ஈஷா யோகா மையத்திற்கு செல்ல விரும்பினால் என்ன செய்வது என்பதை இங்கே கூறுகின்றோம். கொரோனா ஊரடங்கு காரணமாக தியானலிங்கம் கோவிலுக்குள் பக்தர்களுக்கு அனுமதி கிடையாது. ஆனால் மலைகள் மற்றும் இயற்கை சூழலுக்கு நடுவே அமைந்திருக்கும் ஆதியோகியை வணங்க உங்களுக்கு அனுமதி தரப்படுகிறது.
மேலும் படிக்க :எந்த தேசிய பூங்காவிலும் இல்லாத சிறப்பு வசதி கஸிரங்காவில்!
முன்பெல்லாம் காலை 6 மணிக்கே அனுமதி வழங்கப்படும். ஆனால் தற்போது 9 மணிக்கு மாற்றப்பட்டுள்ளது. குழுவாக வந்தாலும் தனியாக வந்தாலும் சரி ஆன்லைன் புக்கிங் கட்டாயம். முகக்கவசம் கட்டாயம். உடல் வெப்பநிலையை அறிந்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுவீர்கள். ஒருவருக்கு ஒரு மணி நேரம் மட்டுமே அந்த பகுதியில் இருக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. எப்போதும் போல் அனுமதி இலவசம். ஆனால் பார்க்கிங் செய்ய வேண்டும் என்றால் அதற்கு தனியே கட்டணம் உண்டு. நரசீபுரம் வழியே கோவிலுக்கு அனுமதி கிடையாது. ஆலந்துறை செல்லும் சாலையில் ஒரு கிலோ மீட்டர் சென்றால் அங்கே இருக்கும் நுழைவாயில் வழியே செல்லாம். இயற்கை எழில் மிகுந்த சூழலில் சிறிது நேரம் ஒதுக்க வேண்டும் என்றால் ஈஷா உங்களுக்கு சரியான தேர்வாக இருக்கும்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Coimbatore news want to visit isha yoga check this