Advertisment

கோவை வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்டும் போராட்டம்

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாடு நலன் சார்ந்து, தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை.

author-image
WebDesk
New Update
Coimbatore

Coimbatore political parties’ black flag protest against governor rn ravi

இன்று கோவை வந்த ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட முயன்ற பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்தவர்களை போலீசார் கைது செய்தனர்.

Advertisment

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா இன்று நடக்கிறது. இதில் கலந்து கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என். ரவி சென்னையில் இருந்து விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

இந்த நிலையில் கோவை லாலி ரோடு சிக்னலில், அனைத்து முற்போக்கு அமைப்பினர் ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்திற்கு தந்தை பெரியார் திராவிடர் கழக பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார்.

Coimbatore political parties’ black flag protest against governor rn ravi
Coimbatore political parties’ black flag protest against governor rn ravi
Coimbatore political parties’ black flag protest against governor rn ravi
Coimbatore political parties’ black flag protest against governor rn ravi
Coimbatore political parties’ black flag protest against governor rn ravi

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் தமிழ்நாடு நலன் சார்ந்து, தமிழக சட்டமன்றத்தில் ஒரு மனதாக நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி வழங்கவில்லை. நீட் தேர்வுக்கு எதிராக ஒப்புதல் அளிக்கவில்லை.

தமிழ்நாடு அரசு கல்வித்துறை அறிவித்திருக்கின்ற மாநில பொது பாடத்திட்டத்தை பல்கலைக்கழகங்கள் ஏற்க வேண்டியது இல்லை என்று ஆளுநரின் அறிவிப்பு தமிழ்நாடு மக்களின் உணர்வுகளுக்கு எதிராக உள்ளது. ஆளுநர் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு தடையாக இருக்கிறார் என்று கூறினர்.

இந்த போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி, ஆதித்தமிழர் பேரவை திராவிடர் தமிழர் பேரவை உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

கருப்புக்கொடி போராட்டத்தை ஒட்டி லாரி ரோடு சிக்னலில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

இந்நிலையில், போலீசார் கருப்பு கொடி காட்ட முயன்றவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment