கோவை புலியகுளத்தில் இருந்து சவுரிபாளையம் நோக்கி இன்று காலை கழிவு நீர் அகற்றும் லாரி ஒன்று தாறுமாறாக ஓடியது. அப்போது புலியகுளம் விநாயகர் கோயில் அருகே சாலையில் நின்று இருந்த கார் மீது மோதியது. மேலும் சாலையில் நடந்த சென்ற முதியவர் மீது மோதியதில், சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார்.
இந்த விபத்தில் இரண்டு பேர் காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
பொதுமக்கள் மற்றும் போலீசார் 4 கிலோ மீட்டர் தூரம் அந்த கழிவு நீர் அகற்றும் லாரியை விரட்டிச் சென்று பிடித்தனர்.
விசாரணையில் ஓட்டுநர் ராமநாதபுரத்தை சேர்ந்த பிரவீன் குமார் என்பதும் காலையிலேயே குடி போதையில் இருந்ததும் தெரியவந்தது.
/indian-express-tamil/media/media_files/WUnWx8CG4SuGfRAhYkW9.jpeg)
இதைத் தொடர்ந்து காட்டூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பிரவீன் குமார் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர்.
லாரி ஏற்படுத்திய விபத்து அங்கு பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“