Advertisment

சென்னைக்கு ப்ரதீப் ஜான் என்றால் கோவைக்கு சந்தோஷ்! கொங்கு வெதர்மேன் பற்றி உங்களுக்கு தெரியுமா?

Coimbatore Weather updates : கொங்கு மண்டல விவசாயிகளுக்காக வானிலை அறிக்கையை வெளியிட்டு வருகிறார் சந்தோஷ்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Coimbatore Weatherman Santhosh Krishnan

Coimbatore Weatherman Santhosh Krishnan

Coimbatore Weatherman Santhosh Krishnan : கோவை அத்தப்பகவுண்டன் புதூரை சேர்ந்தவர் தான் இந்த சந்தோஷ் கிருஷ்ணன். விவசாய குடும்பத்தை பின்னணியாக கொண்டவர் இவர். விதை விதைப்பது துவங்கி அறுவடை காலங்கள் வரை வானிலையை கவனித்து அதற்கு ஏற்றார் போல் தன்னுடைய விவசாயத்தை செய்து வந்த இவருடைய தாத்தா தான் இவருக்கு இன்ஸ்பிரேஷன்.

Advertisment

தாத்தாவின் அனுபவத்தை வைத்துக் கொண்டு, கோவையின் வானிலையை கணித்து விவசாயிகளுக்கு உதவி வருகிறார் சந்தோஷ் கிருஷ்ணன். இவர் குறித்தும், கோவையின் வானிலை குறித்த அப்டேட்டையும் உடனுக்குடன் அறிந்து கொள்ள ”Coimbatore Weatherman” என்ற ஃபேஸ்புக் பக்கத்திற்கு நீங்கள் செல்லலாம்.  10ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போது வானிலை, காற்றழுத்த தாழ்வு நிலை, காற்றின் ஈரப்பதம், வெப்பச்சலனம், மழைக்கான வாய்ப்பகளுக்கு பின்னால் உள்ள அறிவியல் காரணங்களை கற்று தெரிந்து கொண்டார்.

மேலும் படிக்க : டமால் – டுமீல் என சென்னையில் கொட்டப்போகிறது கனமழை – தமிழ்நாடு வெதர்மென்

2011ம் ஆண்டு முதல் காலநிலையை கணித்துவரும் இவர் இந்தியாவில் இருக்கும் தலைசிறந்த வல்லுநர்கள் தகவல்கள் பரிமாறிக் கொள்ளும் கியா வெதர் ப்ளாக்கில் இருந்து நிறைய கற்றுக் கொண்டார். தன்னுடைய சந்தேகங்களையும் கேட்டு தீர்த்துக் கொண்டார். ஆனாலும் முகநூல் ஒரு கம்யூனிட்டி ஃபார்ம் செய்வதற்கு தயங்கிய அவர், விவசாயிகளுக்காக 2017ம் ஆண்டில் தன்னுடைய முகநூல் பக்கத்தினை உருவாக்கினார்.  கொங்கு மண்டலங்களான நீலகிரி, ஈரோடு, சேலம், கிருஷ்ணனகிரி, தர்மபுரி, கோவை, திருப்பூர், நாமக்கல், கரூர் ஆகிய பகுதிகளின் வானிலையை கணித்து விவசாயிகளுக்காக அறிவித்துவருகிறார்.

கோயம்புத்தூர் வெதர்மேன் முகநூல் பக்கத்திற்கு செல்ல : Coimbatore weatherman 

Tamilnadu Weather Coimbatore
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment