கோவை குணா மரணம்.. நகைச்சுவை பிரபலங்கள் இரங்கல்

உடல் நலக்குறைவால் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகரும் மிமிக்கிரி கலைஞருமான கோவை குணா உயிரிழந்தார்.

Comedian Kovai Guna passes away
நகைச்சுவை கலைஞர் கோவை குணா காலமானார்.

கோவை விளாங்குறிச்சி பகுதியில் வசித்து வந்த கோவை குணா தமிழில் திரைப்படங்கள் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவைகள் மற்றும் மிமிக்கிரி செய்து பலரது மனதில் இடம் பிடித்தவர்.
பின்னர் தமிழ்நாடு பல குரல் கலைஞர்கள் என்ற சங்கத்தில் இணைந்து பல்வேறு தனியார் நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு அவரது திறமைகளை வெளிப்படுத்தி வந்தார்.

இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
அவர் கடந்த மூன்று ஆண்டுகளாக டயாலிசிஸ் சிகிச்சை எடுத்து வந்த நிலையில் இன்று உயிரிழந்ததாக கூறப்படுகிறது. தற்போது அவரது உடல் கோவை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

அவரது இறப்பிற்கு பல்வேறு திரையுலக பிரபலங்கள் நகைச்சுவை நடிகர்கள் பல குரல் கலைஞர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

செய்தியாளர் பி. ரஹ்மான்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Comedian kovai guna passes away

Exit mobile version