scorecardresearch

தமிழக மின்வாரிய முறைகேடு பற்றி செபி, சி.ஏ.ஜி அமைப்புகளில் புகார்: அண்ணாமலை உறுதி

தமிழக மின்வாரிய முறைகேடு நிகழ்த்துவதாக பாஜகவின் தலைவர் அண்ணாமலை நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் குற்றசாட்டு விதித்துள்ளார்.

4,442 கோடி ரூபாய்க்கு TANGEDCO, அனைத்து விதமான நடைமுறை, நிதி விதிமுறைகள் இல்லாமல் BGR Energy என்ற நிறுவனத்திற்கு மார்ச் 10, 2022இல் இத்திட்டத்தை கொடுத்திருக்கிறார்கள். இதனால் வரும் முறைகேடுகளையும் பாதிப்புகளையும் அதன் பின்னணியையும் பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலை நேற்றைய செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்திருக்கிறார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, மாநில துணைத்தலைவர் வி.பி.துரைசாமி, பொது செயலாளர் கரு நாகராஜன், செயலாளர் வரதராஜன் மற்றும் எம்.என்.ராஜா ஆகியோர் கலந்துகொண்டனர்.

செய்தியாளர் சந்திப்பில் கட்சியின் தலைவர் அண்ணாமலை கூறியதாவது:

“திராவிட முன்னேற்ற கழகத்தினுடைய ஆட்சி இப்போது பத்து மாத காலமாக பயணித்து தற்போது தங்களுடைய அடுத்தகட்ட பயணத்தை ஆரம்பித்திருக்கிறார்கள்.  தற்போது ஒருசில நிறுவனங்களை மட்டும் தேர்ந்தெடுத்து, முன்னேற்றி அவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். உதாரணமாக திரைப்பட துறை போன்றவற்றில் நுழைந்து வேறு யாரும் முன்னேற முடியாதது போன்ற அவலம் ஏற்பட்டது.

தற்போது பாஜக குற்றச்சாட்டாக வைப்பது என்னவென்றால், கிட்டத்தட்ட நான்காயிரத்தி நானூற்றி நாற்பத்தி இரண்டு கோடி ரூபாய் TANGEDCO (தமிழ்நாட்டினுடைய மின் உற்பத்தி நிறுவனம்) அனைத்து விதமான நடைமுறை, நிதி விதிமுறைகள் கடந்து BGR Energy என்ற நிறுவனத்திற்கு மார்ச் 10, 2022இல் இத்திட்டத்தை கொடுத்திருக்கிறார்கள்.

BGR Energy என்ற நிறுவனத்திற்கு எண்ணூர் அனல் மின் நிலையத்தின் 660 மெகா வாட் நிறுவும் ஒப்பந்தம் TANGEDCOவினால் டிசம்பர் 12, 2019 அன்று கொடுக்கப்பட்டது. இதனுடைய மொத்த மதிப்பு 4,442 கோடி ரூபாய் ஆகும். இதை அரசு மின் நிதி நிறுவனம் மூலமாக கொடுக்கிறார்கள்.

டிசம்பர் 12,2019இல் TANGEDCO இவர்களுக்கு ஒப்புதல் கடிதம் அளிக்கிறார்கள், ஆனால் ஏப்ரல் 23, 2021இல் TANGEDCO BGR Energyக்கு கொடுத்த ஒப்புதல் கடிதத்தை ரத்து செய்கிறார்கள். இதற்கான காரணம் என்னவென்று பார்த்தால், இந்த திட்ட செயல்பாட்டிற்கான வங்கி உத்தரவாதத்தை (40 கோடி ரூபாய்) அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. மற்றொரு காரணம் என்னவென்றால், இந்த நிறுவனத்திற்கென்று சொத்து மதிப்பு எதுவும் இல்லை. 2021-22ல் இந்த நிறுவனத்தின் நிகர இழப்பு 355 கோடியே 42 லட்சம்.

இதன் பிறகு, BGR Energy தன் எதிர்ப்பை காட்டும் விதமாக சென்னை உயர் நீதிமன்றத்தில் முறையிட்டனர். இந்த நிறுவனத்திற்காக ஆஜர் ஆனவர் திமுகவை சேர்ந்த வில்சன்,MP ஆவர்.  பின்பு TANGEDCOவின் நிபந்தனைகளை BGR Energy நிறைவேற்றுவோம் என்றும், அதுவரை வேறு நிறுவனத்திற்கு திட்டத்தை கொடுக்கவேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டனர்.

அடுத்து நீதிமன்ற விசாரணை ஜூன் 7 2021, ஜூன் 14 2021, ஜூன் 30 2021, ஆகஸ்ட் 15 2021, ஆகிய நாட்களில்  நடந்ததற்கு இருதரப்பிலும் வருகைபுரியவில்லை. 

இதைப்பற்றி பாஜக கடந்த ஆண்டு பத்திரிகையாளர் சந்திப்பில் சொல்லியிருந்தோம். அதற்காக என்மீது BGR Energy 500 கோடி ரூபாய்க்கு அவதூறு வழக்கு போட்டனர். ஆனால் அதை முறைப்படுத்தி எங்கள் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

மார்ச் 10 2022ஆம் தேதி, TANGEDCO நிதி விதிமுறைகளை மீறி அதே நிறுவனத்திற்கு ஒப்பந்தம் அளித்திருக்கிறது.

இதில் நாங்கள் குற்றச்சாட்டாக வைப்பது என்னவென்றால்:

– டிசம்பர் 30 2021இல், நீதிமன்றத்தின் அனுமதியின்றி, செபியின் நிதி வெளியீட்டில் நீதிமன்றத்தின் ஒப்புதலைப் பெற்றதாக BGR Energy தெரிவித்துள்ளனர். இதை செய்ததற்கான காரணம் என்னவென்றால், அவர்கள் பங்கு சந்தை விலையை செயற்கையாக ஊடுருவி அதிகப்படுத்தவேண்டும் என்பதுதான்.

– அவர்கள் இந்தியா முழுவதும் உள்ள முதலீட்டாளர்களை ஏமாற்றியுள்ளார். மேலும், பங்குச் சந்தையில் முறைகேடு நிகழ்த்தப்பட்டுள்ளது. 

– டிசம்பர் 3, 2021 இல், BGR Energyயின் வருடாந்திர பணப்புழக்க அறிக்கையின் மூன்றாவது காலாண்டை அவர்கள் சேர்க்கவில்லை.

– 2006 இல், மேட்டூர் அனல் மின் நிலைய ஒப்பந்தம் BGR Energyக்கு வழங்கப்பட்டது. 2010 சிஏஜி தணிக்கையின் போது, ​​இந்த ஒப்பந்தத்தால் 72 கோடி இழப்பு ஏற்பட்டதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

– மேட்டூர் அனல் மின் நிலையத்திற்கு BGR Energy ஆற்றலால் செய்யப்பட்ட ஆலை சுமை காரணி திறன் நிறுவலின் Plant Load Factor (PLF) மிகக் குறைந்த அளவே கொடுத்துள்ளனர். 2015 இல், அவர்களின் ஆலை சுமை காரணி 74% ஆக இருந்தது, 2016 இல் 65% ஆக இருந்தது, 2018 இல் 79% ஆக இருந்தது.

இதுவே முந்தைய திமுக ஆட்சியில் மின்தடை உருவாக காரணமாக அமைந்தது, மக்கள் பெரும் அவதிக்கு உள்ளானார்கள்.” என்று அண்ணாமலை குற்றசாட்டு வைத்துள்ளார்.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலையின் குற்றச்சாட்டிற்கு பதிலளிக்கும் விதமாக, தற்போது தமிழக மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி, “திமுக விற்கு அவப்பெயர் பெற்று தர வேண்டும் என்பதால் சரியான ஆய்வு இல்லாமல் குற்றசாட்டு வைப்பது போல் உள்ளது. BGR Energy நிறுவனத்துடன் கோபாலபுரத்திற்கு சம்மந்தம் இருக்கிறது என்று கூறியதற்கு 24 மணி நேரத்தில் அவர் ஆதாரம் வழங்க வேண்டும். இல்லையெனில் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கூறுகிறார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Complaint regarding tamil nadu electricity board scam annamalai opinion