Advertisment

தேசிய ஊட்டச்சத்து குறித்த ஆய்வு : தமிழகத்தின் நிலை என்ன ?

அதிக எடைக்குறைவான  குழந்தைகள் தமிழகத்தில் இருக்கின்றனர், அதிகஎடை( ஓவர்வெயிட்) கொண்ட இளம் வயதினரும் அதே  தமிழகத்தில் தான் இருக்கின்றனர்.  

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
தேசிய ஊட்டச்சத்து குறித்த ஆய்வு : தமிழகத்தின் நிலை என்ன ?

Comprehensive National Nutrition Survey:  தேசிய அளவில் உள்ள அனைத்து குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் ஊட்டச்சத்து அளவைக் கணக்கீடும், விரிவான தேசிய ஊட்டச்சத்து ஆய்வறிக்கை (சி.என்.என்.எஸ்) சில தினங்களுக்கு முன்பு வெளியாகின. மத்திய சுகாதார அமைச்சகத்தின் உதவியுடன், 2016 முதல் 2018 வரை இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு,  தற்போது முடிவுகள் வந்துள்ளன என்பது குறிபிடத்தக்கது  .

Advertisment

இந்தியாவில் குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் ஊட்டச் சத்தின்மைக் காரணமாக ஏற்படும் : வேஸ்டிங், வளர்சிக் குன்றிய நிலை(ஸ்டன்டிங்), எடைக்குறைவு (அண்டர்வெயிட் ), அதிகஎடை (ஓவர் வெயிட் ), போன்ற முக்கியத் தகவல்கள் இந்த கருத்துக் கணிப்பில் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தக் ஆய்வில் தமிழ்நாட்டை பற்றியத் தகவல்கள் ஆச்சரியமளிப்பதாக இல்லையென்றாலும் , சற்று மலப்பை ஏற்படுத்துவதாகவே உள்ளது. உதாரணமாக, அதிக எடைக்குறைவான  குழந்தைகள் தமிழகத்தில் இருக்கின்றனர், அதிகஎடை( ஓவர்வெயிட்) கொண்ட இளம் வயதினரும் அதே  தமிழகத்தில் தான் இருக்கின்றனர்.

வளர்சிக் குன்றிய நிலை(ஸ்டன்டிங்) :

ஒட்டு மொத்த, இந்தியாவில் 34 சதவீத நான்கு வயதிற்க்கு உட்பட்ட குழந்தைகள் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக வளர்சிக் குன்றிய நிலையில் உள்ளனர். ஸ்டன்டிங் என்பது தகுந்த வயதிற்கு ஏற்ற உயரம் இல்லாமல் இருத்தல் .

publive-image

o - 4 வயது குழந்தைகளில் தமிழ்நாட்டில் 19.7 சதவீத குழந்தைகளும், பீகாரில் அதிகபட்சமாக 42 சதவீத குழந்தைகள் வளர்சிக் குன்றியாவர்களாய் உள்ளனர்.

வேஸ்டிங் :

வேஸ்டிங் என்பது ஊட்டச்சத்து ஆய்வுகளில் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. வேஸ்டிங் என்பதற்கு ஒரு குழந்தை இருக்கும் உயரத்திற்கு ஏற்ற இடை இல்லாமல் இருத்தல்.

publive-image

0-4 வயதுடைய குழந்தைகளில்  தமிழ்நாட்டில் 21 சதவீத குழந்தைகள் வேஸ்டிங் என்ற ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது இந்தியாவின் சராசரியை விட மிகவும் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

எடைக்குறைவு (அண்டர்வெயிட் ) :  இயல்பான குழந்தைகளை விட 20 சதவீத எடைக் குறைவாய் இருத்தல்.

publive-image

0-4 வயதுடைய குழந்தைகளில்  தமிழ்நாட்டில் 23.5 சதவீத குழந்தைகள் எடைக்குறைவால்   பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தியாவில்  சராசரியாக  33.4 சதவீத குழைந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அதிக எடை (ஓவர் வெயிட் ) : 10- 19 வயதுடையவர்கள்:

publive-image

வயதிக்கு பொருத்தமில்லாமல் அதிகமாய் இருக்கும் அதிக எடையும் ஒரு வைகயான கோளாறுதான். இந்த ஆய்வில் அதிகப்படியானவர்கள் தமிழ்நாட்டில் தான் உள்ளனர் என்று தெரிய வருகிறது. தமிழ்நாட்டில் உள்ள 14 சதவீத இளம்வயதினர் அதிக எடையால் பாதிகப்படுள்ளனர்.

 

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment