Advertisment

பாலில் கலப்படம் : சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தாகூர் பெஞ்ச் தீர்ப்பு

author-image
kosal ram
புதுப்பிக்கப்பட்டது
New Update
பாலில் கலப்படம் : சிபிஐ விசாரணை கேட்டு ஐகோர்ட்டில் வழக்கு

பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, கடந்த வாரம் நிருபர்களிடம் பேசும் போது, தனியார் பாலில் கலப்படம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினார். மேலும் பால் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைட், குளோரின் ஆகியவை கலக்கப்படுவதாக கண்டுபிடித்திருப்பதாகவும் சொன்னார். இது உயிருக்கு ஆபத்தை விளைவிக்கக் கூடியது. பாலில் கலப்படம் செய்யும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தார்.

Advertisment

publive-image

அமைச்சரின் இந்த குற்றச்சாட்டை தனியார் பல் நிறுவனகள் மறுத்ததோடு, ஆவின் பாலிலும் கலப்படம் இருப்பதாக புகார் தெரிவித்தனர்.

இந்நிலையில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கறிஞர் சூரியபிரகாசம் நேற்று ஒரு மனுதாக்கல் செய்தார். மனுவில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருட்கள் கலப்பதாக தெரிவித்தார். பால் கெடாமல் இருக்க ஹைட்ரஜன் பெராக்சைட், குளோரின் கலக்கப்படுவதாகவும் கூறியுள்ளார். இது மிகவும் அதிர்ச்சியளிக்கக் கூடிய விஷயம். ஆனால் தனியார் பால் கம்பெனிகள் மீது இதுவரையில் நடவடிக்கை ஏதும் எடுக்கவில்லை.

மனித வாழ்வில் பால் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. பாலில் கலப்படம் செய்வது மிகப் பெரிய குற்றம். பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதியாக இருந்த தாகூர் பெஞ்ச் தீர்ப்பு கூறியதோடு, எல்லா மாநிலங்களிலும் சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று உத்தரவிட்டது. இதை ஏற்று மேற்கு வங்கத்தில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுவிட்டது. ஆனால் தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வரவில்லை. உடனடியாக தமிழகத்தில் சட்ட திருத்தம் கொண்டு வர உத்தரவிட வேண்டும்.

publive-image

அதோடு அமைச்சரே தனியார் பால் நிறுவனங்கள் பாலில் கலப்படம் செய்வதாக சொல்லியுள்ளார். ஆனால் பால் தயாரிக்கும் நிறுவனங்கள் பெரும்பாலும் ஆந்திரா, கர்நாடகாவில் உள்ளன. அவைகளின் மீது தமிழக போலீசாரால் நடவடிக்கை எடுக்க முடியாது. எனவே பாலில் கலப்படம் செய்வது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் சூரிய பிரகாசம் குறிப்பிட்டுள்ளார். இந்த மனு மீதான விசாரணை நாளை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Chennai High Court High Court Milk Minister Rajendra Balaji
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment