Advertisment

கொரோனா : 'சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி' - மத்திய அரசு

Coronavirus news Updates: இந்தியாவிலும் 29 பேருக்கு கொரோனா வைரஸ் பரவியுள்ளதாக மத்திய சுகாத்தாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் இன்று அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளார்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
கொரோனா : 'சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி' - மத்திய அரசு

Coronavirus Outbreak Latest Updates: சீனாவில் 2019-ல் டிசம்பர் 31 அன்று புதிய கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதாக செய்தி வெளியானது. 2019 டிசம்பர் தொடக்கத்தில் சீனாவின் ஹூபே மாகாணத்தில் உள்ள வூஹான் நகரின் கடல் உணவு சந்தையில் முதன்முறையாக காணப்பட்ட இந்த வைரஸ் மிகக் குறுகிய காலத்திலேயே உலக நாடுகளுக்கு பரவியது. இதுவரை, இந்த வைரஸால் 3000 க்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர்.

Advertisment

ஒரே நாளில் 15 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள் உட்பட 23 மக்கள் கொரொனோ வைரஸ் (COVID-19)பாசிடிவ் என்று வந்ததையடுத்து, விமான நிலையம் மூலமாகவோ, துறைமுகங்கள் மூலமாகவோ இந்தியாவிற்குள் வரும் அனைவருக்கும் வெப்ப பரிசோதனை உட்படுத்தப்படும் என்று அரசாங்கம் புதன்கிழமை அறிவித்தது.

இதுவரை, இந்தியாவில் மொத்தம் 29 மக்கள் கொரொனோ வைரசால் பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil”

Live Blog

Coronavirus in India updates: இந்தியாவை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ்



























Highlights

    22:34 (IST)05 Mar 2020

    நாளை முதல் சிறப்பு விமானங்கள்

    ஈரானில் சிக்கித்தவிக்கும் பயணிகளுக்காக நாளை முதல் சிறப்பு விமானங்கள்

    இந்தியர அரசின் ஒப்புதல் கிடைத்தவுடன் ஈரானில் தவிக்கும் 2,000 இந்தியர்கள் விமானம் மூலம் அனுப்பி வைக்கப்படுவர்

    - ஈரான் தூதரகம்

    20:37 (IST)05 Mar 2020

    ஐரோப்பிய யூனியன் சுற்றுப்பயண அட்டவணை மாற்றம்

    கொரோனா வைரஸ் எதிரொலியால் பிரதமர் நரேந்திர மோடியின் ஐரோப்பிய யூனியன் சுற்றுப்பயண அட்டவணை மாற்றப்பட்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

    19:52 (IST)05 Mar 2020

    இன்று வரை இந்திய விமான நிலையங்களில் 6 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு சோதனை

    6550 விமானங்களில் இருந்து இன்று வரை மொத்தம் 6,49,452 பயணிகள் இந்தியா முழுவதும் உள்ள விமான நிலையங்களில் சோதனை செய்யப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இன்று வரை 15,651 பயணிகள் திரையிடப்பட்டுள்ளனர்,

    19:50 (IST)05 Mar 2020

    ஈரானில் கொரோனா வைரஸ் : 90 -க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு

    ஈரானில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. 2 ஆயிரத்து 822 பேருக்கு கொரோனா வைரஸ் நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஈரானுக்கு தேவையான பொருட்களை வாங்க, மருந்து வாங்குவதற்கான தடைகளை அமெரிக்கா நீக்க வேண்டும் என அந்நாட்டு அதிபர் ஹசன் ரூஹானி கோரியுள்ளார். முடிந்த அளவு விரைவில் கொரோனாவில் இருந்து ஈரான் மீண்டு வரும் ரூஹானி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

    19:48 (IST)05 Mar 2020

    ஈரானில் சிக்கி தவிக்கும் மீனவர்களை மீட்க வேண்டும் : மாநிலங்களவையில் அதிமுக எம்.பி. விஜிலா சத்யானந்த் கோரிக்கை

    ஈரான் நாட்டு கடற்கரையோரம் சிக்கி தவிக்கும் கன்னியாகுமரி மற்றும் முட்டம் ஆகிய பகுதிகளை சார்ந்த 400 மீனவர்களை காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய அரசுக்கு அதிமுக எம்.பி. விஜிலா சத்தியானந்த் மாநிலங்களவையில் கோரிக்கை விடுத்துள்ளார். உணவு குடிநீர் உள்ளிட்ட அத்தியாவசிய வசதிகள் கூட கிடைக்காத நிலையில் இருப்பதாகவும் அவர்களை பத்திரமாக மீட்க வேண்டும் என, அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    18:36 (IST)05 Mar 2020

    சான்றிதழ் காட்டினால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதி

    இத்தாலி மற்றும் தென் கொரியாவில் இருந்து இந்தியா வரும் பயணிகளுக்கு மார்ச் 10ம் தேதி முதல் சில நிபந்தனைகளை இந்திய அரசாங்கம் அறிவித்துள்ளது.

    இந்த இரண்டு நாடுகளில் இருந்து இந்தியா வரும் பயணிகள் அந்தந்த நாடுகளில் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ ஆய்வகங்களில் இருந்து, கோவிட்-19 தொற்றால் எந்த பாதிப்பும் இல்லை என சான்றிதழ் பெற்று வந்தால் மட்டுமே இந்தியாவிற்குள் அனுமதிக்கப்படுவார்கள்.

    17:53 (IST)05 Mar 2020

    இந்திய - ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது ரத்து

    இந்திய - ஐரோப்பிய உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்பது ரத்து செய்யப்பட்டுள்ளது என வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. கொரோனா தாக்கத்தின் எதிரொலியாக பிரசல்ஸ் நகரில் நடைபெறுவதாக இருந்த இந்திய - ஐரோப்பிய உச்சி மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

    17:33 (IST)05 Mar 2020

    கொரொனா வைரஸ் பரவுவதால் மார்ச் இறுதிவரை பள்ளிகளை மூட டெல்லி மாநில அரசு உத்தரவு

    கொரோனா வைரஸ் பரவிவருவதால் இம்மாதம் இறுதிவரை டெல்லியில் உள்ள அரசு மற்றும் தனியார் தொடக்கப்பள்ளிகளை மூட டெல்லி மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.

    17:28 (IST)05 Mar 2020

    கொரோனா பாதிப்பு எதிரொலி: ரஜினியின் அண்ணாத்த படப்பிடிப்பு கைவிடப்பட்டதாக தகவல்

    கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக வடமாநிலத்தில் நடைபெற இருந்த ரஜினியின் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கைவிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    15:40 (IST)05 Mar 2020

    உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்றால் என்ன?

    உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையம் என்பது இந்திய அரசின் குடும்ப நல அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படும் அமைப்புகளில் ஒன்று. <3> இந்த அமைப்பின் முதன்மை நோக்கம் சட்டங்களை வகுத்து, பாதுகாப்பான உணவை வழங்கி மக்களின் நலத்தைக் காப்பது ஆகும். <3> உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் சட்டம், 2006 என்ற சட்டத்தின் கீழ் இந்த அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது

    15:38 (IST)05 Mar 2020

    கோழி, ஆட்டிறைச்சி மூலம் கொரொனோ வைரஸ் பரவாது - FSSAI தலைவர்

    கோழி, ஆட்டிறைச்சி, கடல் உணவு மூலம் கொரோனா வைரஸ்  பரவுவதில்லை என்று உணவுப் பாதுகாப்பு மற்றும் தரப்படுத்தல் ஆணையத்தின் (FSSAI) தலைவர் கூறியுள்ளார் 

    14:27 (IST)05 Mar 2020

    கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க திடமான செயல் திட்டங்கள் வேண்டும் -ராகுல் காந்தி

    காங்கிரஸ் தலைவரும், வயநாடு பாராளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி, பாராளுமன்றத்தில் கொரோனா வைரஸ் குறித்த  சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனின் அறிக்கையை விமர்சித்துள்ளார். 'கொரோனா வைரஸ் நெருக்கடியை சமாளிக்க திடமான செயல் திட்டங்களை அரசாங்கம் வெளியிட  வேண்டும்' என்று கூறியுள்ளார்.   

    13:07 (IST)05 Mar 2020

    கொரொனோ வைரஸ் குறித்து அகிலேஷ் யாதவ் மக்களவையில் கருத்து

    சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று மக்களவையில் பேசுகையில் : “கொரோனா வைரஸ் ஒரு கடுமையான தொற்று. அந்த அபாயத்தை நாட்டின் குடிமக்கள் அறிந்திருப்பதை மத்திய அரசு உறுதி செய்ய வேண்டும்.  இது மிகவும் முக்கியமான விஷயம். இப்போது, விமான நிலையத்தில் மட்டுமே ஸ்க்ரீனிங் செய்யபப்ட்டு வருகின்றன.  ரயிலில் பயணிகள் மூலம்  இந்த தொற்று பரவினால், கிராமப்புறங்களில் உள்ள ஆயிரக்கணக்கான மக்களை பாதிக்கும்” என்றார்.  

    13:03 (IST)05 Mar 2020

    எம்.பி க்கள் மாஸ்க் அணிந்தவாறு நாடாளுமன்றம் வருகை

    லடாக் பாஜக எம்.பி. ஜம்யாங் செரிங் நம்கியால் இன்று மாஸ்க் அணிந்தவாறு  நாடாளுமன்றத்திற்கு வருகை புரிந்தார் .

    12:00 (IST)05 Mar 2020

    கொரொனோ வைரஸ் குறித்து குலாம் ஆசாத் நபி கருத்து

    காங்கிரஸ் தலைவர் குலாம் ஆசாத் நபி, "முழு நாடும் பதட்டத்தில் நிலையில் உள்ளது, இந்தியாவின் மக்கள் கூடும் இடங்களாக கருதப்படுவது  ரயில் நிலையங்களும், பேருந்து நிலையங்களும் தான்.....  இதுபோன்ற கோரோனா வைரஸ் குறித்த விழிப்புணர்வு இருக்க வேண்டும்" என்று தெரிவித்தார்.  

    11:58 (IST)05 Mar 2020

    மக்கள் கூடும் கூடங்களுக்கு தடை செய்ய வேண்டும் - பாஜக எம்.பி. ஸ்வாபன் தாஸ்குப்தா

    பாஜக எம்.பி. ஸ்வாபன் தாஸ்குப்தா கூறுகையில், “உலகில் பல நாடுகள் ,  மக்கள் கூடும் பெரிய கூட்டங்களுக்கு தடை விதித்து வருகின்றன. இந்திய சுகாதார அமைச்சகமும்  இதைச் செய்ய வேண்டும் என்று நான் நினைக்கிறேன்" என்று தெரிவித்தார்.  

    11:55 (IST)05 Mar 2020

    கொரோனா வைரஸ் குறித்து மாநிலங்களவையில் ஹர்ஷ் வர்தன்

    கொரோனா வைரஸ் குறித்து மாநிலங்களவையில் பேசிய மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தன், " உலக சுகாதார அமைப்பு, கொரோனா வைரசை உலகளாவிய தொற்றுநோய் என்று  அறிவிக்கவில்லை என்றாலும், விழிப்புடன் இருக்குமாறு நாடுகளை கேட்டுக் கொண்டுள்ளது.

    வைரஸால் தொடர்பு கொண்ட ஒருவர், 1-14 நாட்களுக்குள் பாதிப்புக்குள்ளாவார். நம் நாட்டில், மார்ச் 4 ஆம் தேதி வரை 29 மக்கள் கொரோனோ வைரசால் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கடந்த மூன்று நாட்களாக, விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு கொரோனா வைரஸ் அறிகுறி உள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இந்த சூழ்நிலையை தனிப்பட்ட முறையில் தொடர்ந்து கண்காணித்து வருகிறார். நிலைமையைக் கண்காணிக்க அமைச்சர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் மாநில அரசுகளுக்கு  வீடியோ பதிவின் மூலம் அறிவுரைகள் கொடுக்கப்படுகின்றன. சீனா, கொரியா மற்றும் பிற கோவிட் -19 நாடுகள் போன்ற இடங்களுக்கு பயணிப்பதைத் தவிர்க்க இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    11:18 (IST)05 Mar 2020

    கொரோனா வைரஸ் தொற்று ஏன் இந்திய மருந்தியல் துறையை பாதிக்கக்கூடும்?

    இந்தியாவில் மருந்துகளை தயாரிக்க இறக்குமதி செய்யப்படும் மொத்த மருந்துகள் மற்றும் இடைநிலைகளில் (மூலப்பொருட்கள்) கிட்டத்தட்ட 70% சீனா வழங்குகிறது. சில 354 மருந்துகள் மற்றும் மருந்து பொருட்கள் 2017 ல் சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டன. சீனாவில் செயல்பாடுகள் நிறுத்தப்படுவது தொடர்ந்தால், பெரும்பாலான நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் வைட்டமின்கள் தயாரிக்கப் பயன்படுத்தப்படும் நொதித்தல் அடிப்படையிலான பொருட்களின் விநியோகம் மிகவும் பாதிக்கப்படும் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். 

    மேலும், விவரங்களுக்கு - கொரோனா வைரஸ் தொற்று ஏன் இந்திய மருந்தியல் துறையை பாதிக்கக்கூடும்?

    11:04 (IST)05 Mar 2020

    10 விமான பயணிகளுக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கருதப்படுகிறது

    இந்தியாவில் கொரோனா வைரஸ் உள்ளதாக அடையாளம் காணப்பட்ட மக்களின் எண்ணிக்கை - 29

    இதில், 16 இத்தாலிய சுற்றுலாப் பயணிகள், அவர்களின் ஓட்டுனர் ஒருவர் 

    கேரளவில் - 3 ( நலமுடன் உள்ளனர் )

    ஹைதராபாத் - 1

    டெல்லி - 2

    ஆக்ரா - 6

    சீனா, ஹாங்காங், தாய்லாந்து, சிங்கப்பூர், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், நேபாளம், இந்தோனேசியா, மலேசியா, ஈரான், இத்தாலி ஆகிய நாடுகளில் இருந்து பயணம் செய்த மொத்தம் 4,421 பயணிகள் நேற்று டெல்லி விமான நிலையத்தில் , தெர்மல் ஸ்க்ரீனிங் செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேருக்கு கொரோனா அறிகுறி இருப்பதாக கருதப்படுகிறது. இவர்கள் உடனடியாக மருத்துவமைக்கு அனுப்பி வைக்கப் பட்டுள்ளனர்

    10:03 (IST)05 Mar 2020

    இத்தாலிய சுற்றுப் பயணிகள், இந்தியாவில் 215 பேருடன் தொடர்பு கொண்டிருக்கலாம் - ராஜஸ்தான் அமைச்சர் அறிவிப்பு

    இத்தாலிய நாட்டில் இருந்து இந்தியாவிற்கு சுற்றுலாப் பயணிகளாக வந்த 23  பேரில் 16 நபர்களுக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது.  ராஜஸ்தானின் ஆறு மாவட்டங்களில் குறைந்தது 215 பேருடன் இவர்கள்  தொடர்பு கொண்டிருக்கலாம் என்று அம்மாநில  சுகாதார அமைச்சர் ரகு சர்மா புதன்கிழமை சட்டபேரவையில் தெரிவித்தார்.

    இவர்களில், 93 பேர்களின் சாம்பிள்கள்  சேகரிக்கப்பட்டுள்ளன; சோதனையில் 51 மக்களுக்கு கொரோனா வைரஸ் இல்லை என்றும்  , மீதமுள்ளவர்களின் சோதனை முடிவுகளுக்கு காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.  

    09:28 (IST)05 Mar 2020

    முன்னெச்சரிக்கை எடுக்கப்பட்டுள்ளது - ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை டீன் ஆர். ஜெயந்தி

    நாங்கள் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்துள்ளோம்.  12 தனிமைப்படுத்தப்பட்ட அறைகள் அமைகப்பட்டுள்ளன.  கொரோனா வைரஸ் கண்டரியபட்டால் அவற்றைக் கையாளக்கூடிய நிபுணர் குழுவும் உருவாக்கப்பட்டுள்ளது என்று ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின்  டீன் ஆர். ஜெயந்தி தெரிவித்தார்.  

    09:21 (IST)05 Mar 2020

    தமிழகத்தில் 1,367 நோயாளிகள் தனிமைப்படுத்தல் மூலம் கண்காணிப்பு

    கொரோனா வைரஸ் நோய்த் தோற்று பதிவாகும் என்று அச்சத்திற்கு இடையே தமிழக பொது சுகாதார அமைப்பு மற்றும் சமூக சுகாதார ஊழியர்கள் தற்போது 1000-க்கும் மேற்பட்ட நோயாளிகளை வீடுகளில் தனிமைப்படுத்தி கவனித்து வருகின்றனர்.

    தமிழக பொது சுகாதார இயக்குனரகம் (டி.பி.ஹெச்) குறிப்பிட்டுள்ளபடி, தற்போது எந்தவொரு அரசு மருத்துவமனையிலும் கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதாக சந்தேகப்படும்படி நோயாளிகள் இல்லை. ஆனால், வைரஸ் பாதிப்புக்குள்ளான பகுதிகளில் இருந்து வந்தவர்கள் மற்றும் நோய் அறிகுறிகளுக்கான சாத்தியமான இணைப்புகளுக்காக வீட்டு தனிமைப்படுத்தல்களில் 1,367 நோயாளிகள் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளது. நூற்றுக்கணக்கான பொது சுகாதார ஊழியர்கள் இந்த நோயாளிகளை தொலைபேசியில் கண்காணித்து வருகின்றனர்.

    Corona Virus news Updates: கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு வாரியத் தேர்வுக்கு வரும் மாணவர்கள் தேர்வு மையத்தில் மாஸ்க், ஹேண்ட் சானிட்டைசர்கள் எடுத்துச் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) அறிவித்தது.

    தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு இதுவரை யாருக்கும் கண்டறியப்படவில்லை என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

    Coronavirus
    Advertisment

    Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

    Follow us:
    Advertisment