Advertisment

இப்படி கூடியிருக்கவே கூடாது: யார் தப்பு இது?

பீதியடையாமல், பயணங்களை தவிர்த்து, இருக்கும் இடத்திலேயே பாதுகாப்புடன் இருங்கள் என அரசு வலியுறுத்தி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Koyambedu Crowd

Koyambedu Crowd

Corona Outbreak : சீனாவில் ஆரம்பித்த கொரோனா தொற்று படிப்படியாக ஏனைய நாடுகளுக்கும் பரவியது. இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா என இந்த பட்டியல் நீளும். தற்போது இந்தியாவிலும் கொரோனாவின் அச்சுறுத்தல் தொடர்ந்துக் கொண்டிருக்கிறது.

Advertisment

முதியவர்களை மட்டும் குறிவைத்து கோவிட் 19 வைரஸ் தாக்குவது ஏன்?…

இதன் காரணமாக, கடந்த ஞாயிற்றுக் கிழமை நாடு முழுவதும், மக்கள் ஊரடங்கு அமல் படுத்தப்பட்டிருந்தது. அதன் பிறகு நேற்று (24-03-20) மாலை 6 மணி முதல் 144 சட்டம் அமலுக்கு வருவதாக திங்கட் கிழமை தமிழக அரசு அறிவித்தது. இதனால் சொந்த ஊர்களுக்கு படையெடுக்கத் தொடங்கினார்கள் சென்னை வாசிகள். ஏற்கனவே நாடு முழுவதும் ரயில் சேவை துண்டிக்கப்பட்டிருக்கும் நிலையில், திங்கள் கிழமை மாலை கோயம்பேடு பேருந்து நிலையம், பயணிகள் கூட்டத்தில் சிக்கித் தவித்தது. கொரோனாவை தடுக்கும் வழிகளின் முதன்மையானது ‘சோஷியல் டிஸ்டன்ஸிங்’ எனப்படும் சமூக விலகல் தான். ஆனால் அன்று கோயம்பேட்டில் அந்த கூட்டத்தைக் கண்ட அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் வெகுண்டு எழுந்தனர்.

கொரோனா கட்டுப்பாட்டால் பேருந்துகளும் கணிசமான அளவு குறைக்கப்பட்டிருந்தது. ஆனால் கோயம்பேட்டில் மக்கள் வெள்ளத்தைக் கண்டு, மீண்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. கும்பகோணம், விழுப்புரம் உள்ளிட்ட போக்குவரத்து கழகங்களில் இருந்து, 2,450 பஸ்களும், மாநகர போக்குவரத்து கழகத்தின் சார்பில், 400 பஸ்களும் என, 2,850 பஸ்கள் இயக்கப்பட்டன.

இவற்றில், 1.90 லட்சம் பேர் பயணித்தனர். தாம்பரத்தில் இருந்து இயக்கப்பட்ட, 430 அரசு பஸ்களில், 29 ஆயிரம் பேர் பயணித்தனர். இதுமட்டுமின்றி, தனியார் பஸ்கள், ஆம்னி பஸ்கள், வேன்கள், கார்கள், டாக்ஸிகள், ஆட்டோக்கள், இரு சக்கர வாகனங்களிலும், 2 லட்சம் பேர் பயணித்தனர். அதேபோல, நேற்றும் மதியம், 12:00 மணி வரை இயக்கப்பட்ட, அரசு பஸ்களில், 1 லட்சம் பேரும், தனியார் வாகனங்களில், 50 ஆயிரம் பேருக்கு மேலும் பயணித்தனர்.

இந்த வகையில், இரண்டு நாட்களில், சென்னையில் இருந்து மட்டும், 3.70 லட்சம் பேர், தங்களின் சொந்த ஊர்களுக்குச் சென்றனர். இதேபோல், கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நகரங்களில் வேலை செய்து வரும் பல்லாயிரக்கணக்கானோர் அவரவர் சொந்த ஊர்களுக்கு சென்றனர்.

கொரோனாவை கட்டிப் படுத்தும் முயற்சியில் ஒவ்வொரு தனி மனிதனும் மறக்காமல் நினைவில் கொள்ள வேண்டியது சமூக விலகியிருத்தல் தான். வெளிநாடுகளில் இருந்து இந்தியா வந்தவர்கள் மூலம் தான் பெரும்பாலும் இந்நோய் பரவி வருகிறது. இதன் அடுத்தக் கட்டமான சமூக பரவுதலை தடுக்க, ஒவ்வொருவரும் சமூகத்தில் இருந்து விலகி இருந்து அந்த சங்கிலியை உடைக்க வேண்டும். இதற்காக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வரும் வேளையில், பொது மக்களும் ஒத்துழைப்புடன் இருப்பது அவசியம். பீதியடையாமல், பயணங்களை தவிர்த்து, இருக்கும் இடத்திலேயே பாதுகாப்புடன் இருங்கள் என அரசு வலியுறுத்தி வருகிறது. ஆனால் திங்கட் கிழமை கோயம்பேட்டில் கூடிய அந்த கூட்டம் கொரோனாவை வரவேற்கும் விதமாக இருந்தது. நகரங்களில் ஆங்காங்கே ஓரிருவருக்கு இருக்கும் கொரோனாவை, தமிழகத்தின் கடைகோடி கிராமத்துக்கும் பயணிகள் அழைத்துச் சென்று விட்டார்களோ என்ற அச்ச உணர்வு மேலோங்குகிறது.

263 நபர்களின் உயிரும் உங்கள் கையில் தான்… அழைப்பை ஏற்று உடனே பணிக்கு சென்ற ஸ்வாதி!

ஒருவருக்கொருவர் குறைந்தது 1 மீட்டர் இடைவெளி விட்டு தான் பேச வேண்டும் என்று ரேடியோ, தொலைக்காட்சி, பத்திரிக்கை என அனைத்து ஊடகத்தின் வாயிலாகவும், அரசு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. ஆனால் அன்று கோயம்பேட்டில் சொந்த ஊருக்கு செல்ல ஒன்று கூடிய கூட்டத்தில் 10வ் செ.மீ கூட இடைவெளி இல்லை. தவறை நாம் செய்து விட்டு பின்னர் மற்றவர்களை குறை கூறுவது நியாயமானதல்ல. இதன் வெளிப்பாடு இனி வரும் தினங்களில் பிரதிபலிக்கும். இப்போதும் ஒன்றும் கெட்டுப் போய் விடவில்லை. சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு சென்றவர்கள், இருமல், சளி போன்ற பிரச்னைகளை எதிர்க்கொண்டிருந்தால், சந்தேகத்திற்கு இடமின்றி உங்களை தனிமைப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுக்கு மட்டுமல்ல, நீங்கள் யாரைப் பார்க்க இப்படி அடித்து பிடித்து போனீர்களோ அவர்களுக்கும் மிகுந்த நன்மை தரும்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்"

Corona Corona Virus
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment