Advertisment

Tamil News Today Highlights: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு 19-ம் தேதி பொதுவிடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

Tamil Nadu News, Tamil News LIVE Updates, Tamil Nadu Omicron Latest News 09 February 2022-தமிழகத்தில் இன்று நடக்கும் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் தெரிந்துகொள்ள இந்த இணைப்பில் இணைந்திருங்கள்!

author-image
WebDesk
New Update
Tamil News Today : தமிழக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளில் சொத்து வரி திடீர் உயர்வு

Tamil Nadu News Today Highlights: Petrol and Diesel Price: சென்னையில் தொடர்ந்து 97-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமுமில்லை. இன்று சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.101. 40 காசுகளாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ. 91.43 காசுகளாவும் விற்பனை செய்யப்படுகிறது.

Advertisment

Tamilnadu News Update: பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை!

தமிழ்நாட்டில் நீர் நிலைகள், நீர்வழிப் பாதைகள், நீர்ப்பிடிப்பு பகுதிகள் என வகைப்படுத்தப்பட்ட நிலங்களை ஆவணப்பதிவு செய்ய தடை விதித்து’ அனைத்து மாவட்ட பதிவாளர்களுக்கும் பத்திரப்பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

பனிச்சரிவில் சிக்கி 7 ராணுவ வீரர்கள் உயிரிழப்பு!

அருணாச்சல பிரதேச மாநிலத்தின்,  கமெங் செக்டரில் உயரமான பகுதியில் கடந்த 6ம் தேதி பனிச்சரிவில் சிக்கிய 7 ராணுவ வீரர்களும் உயிரிழந்ததாகவும், வீரர்களின் உடல்கள் மீட்கப்பட்டதாக ராணுவம்  அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும்.. மலாலா!

பெண்களை ஹிஜாப் அணிந்து பள்ளிக்கு செல்ல அனுமதிக்க மறுப்பது அதிர்ச்சியளிக்கிறது. இந்தியத் தலைவர்கள் முஸ்லீம் பெண்களை ஒடுக்குவதை நிறுத்த வேண்டும் என மலாலா யூசுப்சாய் கூறியுள்ளார்.

Tamil Nadu News LIVE Updates:

Corona Update: உலகம் முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 21.17 லட்சம் பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் உலக நாடுகளில் கொரோனா பாதிப்பு நிலவரம்

  • ஜெர்மனி - 2.12 லட்சம்
  • பிரேசில் - 1.71 லட்சம்
  • ரஷ்யா - 1.65 லட்சம்
  • அமெரிக்கா - 1.42 லட்சம்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil



  • 21:56 (IST) 09 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்; வாக்குப்பதிவு நடைபெறும் பகுதிகளுக்கு 19-ம் தேதி பொதுவிடுமுறை - தமிழக அரசு அறிவிப்பு

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் பகுதிகளுக்கு வாக்குப்பதிவு நாளான 19ஆம் தேதி பொதுவிடுமுறை என தமிழக அரசு அறிவித்துள்ளது



  • 20:52 (IST) 09 Feb 2022
    தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,971 பேருக்கு கொரோனா; 28 பேர் உயிரிழப்பு

    தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,971 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் கொரோனாவால் 28 பேர் உயிரிழந்துள்ளனர்



  • 20:03 (IST) 09 Feb 2022
    நெல் கொள்முதல் நிலையங்களில், லஞ்சம் வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை

    நெல் கொள்முதல் நிலையங்களில், விவசாயிகளிடம் இருந்து ஒரு பைசா வாங்கினாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகளுக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி எச்சரிக்கை விடுத்துள்ளார்



  • 19:10 (IST) 09 Feb 2022
    உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெற வேண்டும் - உதயநிதி ஸ்டாலின் பிரசாரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில், திருச்சி மாவட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாக உதயநிதி ஸ்டாலின் பிரசாரம் செய்து வருகிறார். அப்போது உள்ளாட்சி தேர்தலிலும் 100% வெற்றி பெற வேண்டும். திமுக அரசின் 8 மாத கால சாதனைகளை சொல்லவே இங்கு வந்துள்ளேன் என்று பிரச்சாரம் செய்து வருகிறார்.



  • 18:35 (IST) 09 Feb 2022
    மாணவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்? - சு.வெங்கடேசன் எம்.பி

    மாணவர்கள் என்ன ஆடை அணிய வேண்டும் என்பதை முடிவு செய்ய இவர்கள் யார்? என்று மக்களவையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன் ஆவேசமாக கேள்வி எழுப்பினார். மேலும், கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரத்தில், மத்திய அரசு தலையிடாதது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.



  • 18:08 (IST) 09 Feb 2022
    பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: “பாரதியார் வரிகளை மேற்கோள் காட்டி பேசும் பிரதமர் மோடிக்கு, பாரதியாரின் உருவசிலை குடியரசு தின அணிவகுப்பில் அனுமதிப்பதில் என்ன பிரச்சினை” என்று கேள்வி எழுப்பியுள்ளார்.



  • 17:34 (IST) 09 Feb 2022
    தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தூத்துக்குடியில் போட்டியிடும் திமுக வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக பிரச்சாரம் செய்து வருகிறார். பாரதியார், கட்டபொம்மன், வ.உ.சி பிறந்த மண் தூத்துக்குடி சட்டமன்றத் தேர்தலை போல உள்ளாட்சித் தேர்தலிலும் வெற்றி பெற செய்ய வேண்டும் என்று கூறினார்.



  • 17:26 (IST) 09 Feb 2022
    இந்தியாவில் 1 கோடி சிறார்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - மத்திய அமைச்சர் தகவல்

    இந்தியாவில் தற்போது வரை 15 - 18 வயதிலான ஒரு கோடி சிறார்களுக்கு 2 டோஸ் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.



  • 16:46 (IST) 09 Feb 2022
    ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம்

    ஹிஜாப் தொடர்பான வழக்கு கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில், ஹிஜாப் அணிய அனுமதியளிப்பது குறித்து தலைமை நீதிபதியே முடிவெடுக்கட்டும் - தனி நீதிபதி கிருஷ்ணா தீக்ஷித் கூறியள்ளார்.



  • 16:45 (IST) 09 Feb 2022
    ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கையில் தவறில்லை - உயர்நீதிமன்றம்

    பெத்தேல்நகர் ஆக்கிரமிப்புகளை அகற்றும் தமிழக அரசின் நடவடிக்கையில் தவறில்லை என்றும், தற்போது ஆக்கிரமிப்புகளை அகற்றும் அரசு, இத்தனை ஆண்டுகளாக அனுமதித்தது ஏன்? என்றும் சென்னை உயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.



  • 16:19 (IST) 09 Feb 2022
    சாலையை கடக்க முயன்ற ஒருவர் பேருந்து மோதி படுகாயம்

    குடியாத்தம் அருகே அரசு பேருந்து மோதி சாலையை கடக்க முயன்ற ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். சாலையின் குறுக்கே வந்தவர் மீது மோதாமல் இருக்க பேருந்தை திருப்பியதால் விபத்து நேர்ந்துள்ளது. இதில் அதிர்ஷ்டவசமாக பேருந்து பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.



  • 16:17 (IST) 09 Feb 2022
    பெங்களூர் நகரில் கூட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்களுக்கு தடை

    ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடகா முழுவதும் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், பெங்களூர் நகரில் கூட்டங்கள் மற்றும் ஆர்பாட்டங்கள் நடத்த 2 நாட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.



  • 15:42 (IST) 09 Feb 2022
    வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும்" - அன்புமணி ராமதாஸ்

    "இந்தியாவில் இஸ்லாமியப் பெண்களுக்கு இப்போதுதான் கல்வி வாய்ப்புகள் கிடைக்கத் தொடங்கியுள்ளன; எனவே, தோற்பது எதுவாக இருந்தாலும் வெல்வது பெண் கல்வியாக இருக்க வேண்டும்" என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.



  • 15:13 (IST) 09 Feb 2022
    விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்ட காங்கிரஸ்

    காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் 10 நாட்களில் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி. கொரோனாவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தலா ரூ25 ஆயிரம் நிதியுதவி; 20 லட்சம் அரசு வேலைகள் உருவாக்கப்படும் என்று காங்கிரஸ் வாக்குறுதி அளித்துள்ளது.



  • 15:10 (IST) 09 Feb 2022
    5 மாநில தேர்தல் : காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியீடு

    பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கு முதுநிலை படிப்பு வரை இலவசக் கல்வி பள்ளிக்கட்டணம் குறைக்கப்பட்டு காலியாக உள்ள 2 லட்சம் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் பசுவின் சானம் கிலோ 2 ரூபாய்க்கு வழங்கப்பட்டு அதில் இருந்து மண்புழு உரம் தயாரிக்கப்படும் என்று காங்கிரஸ் தேர்தல் அறிக்கை வெளியிட்டுள்ளது



  • 14:50 (IST) 09 Feb 2022
    நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள வங்கியில் தீ விபத்து

    நெல்லை ஸ்ரீபுரம் பகுதியில் உள்ள வங்கியில் தீ விபத்து ஏற்பட்டது. 2 தீயணைப்பு வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.



  • 14:45 (IST) 09 Feb 2022
    ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கை விசாரிக்க சிறப்பு புலனாய்வு குழு ஏற்படுத்தப்பட்டுள்ளது.



  • 14:36 (IST) 09 Feb 2022
    ஃபாஸ்டாக் மூலம் ரூ.5,000 கோடி: மத்திய அமைச்சர் தகவல்

    2021-2022 நிதியாண்டில் ஃபாஸ்டாக் மூலம் கிடைக்கும் வருவாய் ₹5,000 கோடியாக அதிகரிப்பு என மக்களவையில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.



  • 14:32 (IST) 09 Feb 2022
    அடிமைத்தனம் கூடாது: முதல்வர் ஸ்டாலின்

    அடிமைத்தனம் எந்த உருவிலும் கூடாதென போராடுவதே திராவிட இயக்கம். கொத்தடிமைத் தொழிலாளர் முறை ஒழிப்பு நாளில் மீட்கப்பட்ட கொத்தடிமைத் தொழிலாளர் நலச்சங்கத்தினரை சந்தித்தேன். அவர்களது நலன் காக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.



  • 14:04 (IST) 09 Feb 2022
    உ.பி. தேர்தல்: தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் பிரியங்கா

    உத்தரப் பிரேதச சட்டமன்ற தேர்தலுக்கான காங்கிரஸ் கட்சியின் தேர்தல் அறிக்கையை காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வெளியிட்டார்.



  • 13:55 (IST) 09 Feb 2022
    விவசாய நகைக்கடன் தொடர்பான வழக்கு: தள்ளுபடி செய்தது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.

    விவசாய நகைக்கடன் தள்ளுபடி தொடர்பான அரசாணையை ரத்து செய்ய கோரிய வழக்கை தள்ளுபடி செய்துள்ளது உயர்நீதிமன்ற மதுரைக் கிளை.



  • 13:49 (IST) 09 Feb 2022
    மலை இடுக்கில் இருந்து மீட்கப்பட்ட இளைஞர் மருத்துவமனையில் அனுமதி

    கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலம்புழாவில் மலைப்பகுதியில் சிக்கி ராணுவத்தினரால் மீட்கப்பட்ட மலையேற்ற வீரர் பாலக்காடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.



  • 13:37 (IST) 09 Feb 2022
    2ஆவது ஒருநாள் கிரிக்கெட்: மே.இ.தீவுகள் பந்துவீச்சு தேர்வு

    இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது மே.இ.தீவுகள் அணி. இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.



  • 13:37 (IST) 09 Feb 2022
    புதிய ஐபிஎல் அணியின் பெயர் அறிவிப்பு!

    அகமதாபாத்தை மையமாகக் கொண்ட ஐபிஎல் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் என பெயர் வைக்கப்பட்டுள்ளது.



  • 13:35 (IST) 09 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.



  • 13:35 (IST) 09 Feb 2022
    டாஸ்மாக் தொடர்புடைய வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுவிற்பனை செய்ய தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.



  • 13:35 (IST) 09 Feb 2022
    2ஆவது ஒருநாள் கிரிக்கெட்: மே.இ.தீவுகள் பந்துவீச்சு தேர்வு

    இந்தியா-மே.இ.தீவுகள் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் ஆட்டத்தில் டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது மே.இ.தீவுகள் அணி. இதையடுத்து இந்தியா பேட்டிங் செய்து வருகிறது.



  • 13:20 (IST) 09 Feb 2022
    டாஸ்மாக் தொடர்புடைய வழக்கு: தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்

    தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் கண்ணாடி பாட்டில்களில் மதுவிற்பனை செய்ய தடை கோரிய வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. பிளாஸ்டிக் தான் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால், கண்ணாடிகளை பயன்படுத்தக் கூடாது என உத்தரவிட முடியாது என்று நீதிமன்றம் தெரிவித்தது.



  • 13:13 (IST) 09 Feb 2022
    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் கமல்ஹாசன்

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி, மக்கள் நீதி மய்யம் கட்சியின் கமல்ஹாசன் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.



  • 13:05 (IST) 09 Feb 2022
    விவசாயத்திற்கு தனி பட்ஜெட் இல்லை: வேளாண் அமைச்சகம்

    விவசாயத்திற்கு வருடாந்திர தனி பட்ஜெட் அறிமுகப்படுத்தும் திட்டம் இல்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய வேளாண் அமைச்சகம் தெரிவித்தது.



  • 12:54 (IST) 09 Feb 2022
    மதம் பிடிக்காது, மனிதம் தான் பிடிக்கும் - கமல்ஹாசன்

    தமிழகத்தில் எந்த செயல் வரம்பு மீறினாலும் நான் கண்டிப்பேன். எனக்கு மதம் பிடிக்காது, மனிதம் தான் பிடிக்கும்; யாரும் எந்த மதத்தையும் விமர்சிக்க வேண்டாம் என மநீம தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.



  • 12:32 (IST) 09 Feb 2022
    தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி 87% ஆக அதிகரிப்பு

    தமிழகத்தில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க தடுப்பூசி செயல்பாடுகளே காரணம். திருவாரூரில் 93% பேர், தென்காசியில் 92% பேருக்கு நிலையான நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது சுகாதாரத் துறையின் 4ம் கட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது



  • 12:23 (IST) 09 Feb 2022
    வீரமங்கை முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது அறிவிப்பு!

    கர்நாடகாவில் ஹிஜாப் அணிந்து வீரத்தோடு தனது கல்லூரிக்குள் நுழைந்த மாணவி முஸ்கானுக்கு தமுமுகவின் பாத்திமா ஷேக் விருது வழங்கப்படும் என அக்கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிவிப்பு



  • 12:01 (IST) 09 Feb 2022
    பிகினியோ ஹிஜாபோ... அணிவது பெண்கள் உரிமை - பிரியங்கா காந்தி

    பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் என தான் அணிய வேண்டிய ஆடைகளை தேர்வு செய்வது பெண்களின் உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அதற்கான உரிமை உள்ளது, பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.



  • 11:53 (IST) 09 Feb 2022
    பிகினியோ ஹிஜாபோ... அணிவது பெண்கள் உரிமை - பிரியங்கா காந்தி

    பிகினி, ஜீன்ஸ், ஹிஜாப் என தான் அணிய வேண்டிய ஆடைகளை தேர்வு செய்வது பெண்களின் உரிமை இந்திய அரசியலமைப்பு சட்டப்படி அதற்கான உரிமை உள்ளது, பெண்களை துன்புறுத்துவதை நிறுத்துங்கள் என காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.



  • 11:38 (IST) 09 Feb 2022
    'ஹிஜாப்' - கைதானோர் மாணவர்கள் அல்ல - கர்நாடகா அமைச்சர்

    கர்நாடகாவில் விரும்பத்தகாத நிகழ்வுகள் என்ன நடந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும் . ஹிஜாப் சம்பவம் தொடர்பாக இதுவரை கைது செய்யப்பட்டோர் வெளியாட்களே தவிர மாணவர்கள் அல்ல என அம்மாநில அமைச்சர் அரக ஞானேந்திரா தெரிவித்தார்.



  • 11:19 (IST) 09 Feb 2022
    ராமஜெயம் கொலை வழக்கு – சிறப்பு புலனாய்வு குழு அமைப்பு

    அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கொலை வழக்கில் சிறப்பு புலனாய்வுக் குழுவை நியமித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தூத்துக்குடி எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையில் குழுவில், அரியலூர் டி.எஸ்.பி. மதன், சென்னை சிபிஐ அதிகாரி ரவி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.



  • 10:59 (IST) 09 Feb 2022
    மேகதாது திட்டம்.. இரு மாநிலங்களும் ஒத்துக் கொண்டால் மட்டுமே அனுமதி!

    மேகதாது திட்டத்திற்கு கர்நாடகாவுடன், தமிழக அரசும் ஒத்துக் கொண்டால் தான் மத்திய அரசு அனுமதி அளிக்கும் என ஜல்சக்தி துறை இணையமைச்சர் பிரகலாத் சிங் தெரிவித்துள்ளார்.



  • 10:56 (IST) 09 Feb 2022
    நீட் விலக்கு மசோதா.. ஆளுநர் குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார்!

    நீட் விலக்கு மசோதாவை இம்முறை ஆளுநர் கண்டிப்பாக குடியரசுத் தலைவருக்கு அனுப்புவார். மசோதாவை ஆளுநருக்கு அனுப்பிய பிறகு, குடியரசுத் தலைவரை சந்திக்க தமிழக முதல்வர் ஏற்பாடு செய்வார் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.



  • 10:52 (IST) 09 Feb 2022
    தாம்பரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஈபிஎஸ் பிரச்சாரம்!

    நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு, தாம்பரத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து எடப்பாடி பழனிசாமி பிரசாரம் இன்று மேற்கொள்கிறார்.



  • 10:44 (IST) 09 Feb 2022
    கேரளாவில் மலையிடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு!

    கேரள மாநிலம் பாலக்காட்டில் உள்ள மலம்புழா மலைப்பகுதியில் செங்குத்தான பள்ளத்தாக்கில் சிக்கிய இளைஞர் பாபு தற்போது மீட்கப்பட்டுள்ளார். இந்திய ராணுவக் குழுவினர் இளைஞரை பத்திரமாக மீட்டனர்!



  • 10:42 (IST) 09 Feb 2022
    எந்த உடை அணியவேண்டும் என்பது பெண்களின் உரிமை.. பிரியங்கா!

    கர்நாடக மாநிலம் ஹிஜாப் விவகாரம் குறித்து பேசிய பிரியங்கா காந்தி, எந்த உடை அணியவேண்டும் என முடிவெடுப்பது பெண்களின் உரிமை. இந்திய அரசியல் சாசனம் அந்த உரிமையை பாதுகாக்கிறது என கூறியுள்ளார்.



  • 10:37 (IST) 09 Feb 2022
    40 மணி நேரத்துக்கும் மேலாக மலையிடுக்கில் சிக்கியிருக்கும் இளைஞருக்கு உணவு வழங்கப்பட்டது!

    பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலையில் கடந்த 40 மணி நேரத்துக்கும் மேலாக, உணவு, தண்ணீர் இல்லாமல் ஆபத்தான மலையிடுக்கில் சிக்கியுள்ள இளைஞருக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. இளைஞரை கீழே கொண்டுவரும் முயற்சியில் மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • 10:27 (IST) 09 Feb 2022
    கேரளாவில் மலையிடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் பத்திரமாக மீட்பு!

    பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலையில் கடந்த 40 மணி நேரத்துக்கும் மேலாக, உணவு, தண்ணீர் இல்லாமல் ஆபத்தான மலையிடுக்கில் சிக்கியிருந்த இளைஞர் பத்திரமாக மீட்கப்பட்டதாக, பாலக்காடு எம்.எல்.ஏ சாபி பரம்பேல் அறிவித்துள்ளார்.



  • 10:10 (IST) 09 Feb 2022
    ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

    இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், 11 மீனவர்களையும், படகுகளையும் விடுவிக்க கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.



  • 10:10 (IST) 09 Feb 2022
    40 மணி நேரத்துக்கும் மேலாக மலையிடுக்கில் சிக்கியிருக்கும் இளைஞருக்கு உணவு வழங்கப்பட்டது!

    பாலக்காடு மாவட்டத்தில் உள்ள மலையில் கடந்த 40 மணி நேரத்துக்கும் மேலாக, உணவு, தண்ணீர் இல்லாமல் ஆபத்தான மலையிடுக்கில் சிக்கியுள்ள இளைஞருக்கு உணவு, தண்ணீர் வழங்கப்பட்டது. இளைஞரை கீழே கொண்டுவரும் முயற்சியில் மலையேற்ற பயிற்சி பெற்ற ராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.



  • 10:01 (IST) 09 Feb 2022
    கொரோனா வைரஸூக்கு ஒரே நாளில் 1217 பேர் உயிரிழப்பு!

    இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 71,365 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் 1217 பேர் உயிரிழந்தனர். மேலும் வைரஸ் பாதிப்பிலிருந்து 1,72,211 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.



  • 10:01 (IST) 09 Feb 2022
    ஐந்து ஆண்டுகளில், 655 என்கவுண்டர்கள்!

    நாடு முழுவதும் 2017-22 வரை ஐந்து ஆண்டுகளில், 655 என்கவுண்டர்கள் நடந்துள்ளது. அதிகபட்சமாக சட்டீஸ்காரில் 191, உத்தரபிரதேசத்தில் 117 என்கவுண்டர்கள் மற்றும் தமிழகத்தில் 14 என்கவுண்டர் நடந்துள்ளதாக உள்துறை அமைச்சகம் மக்களவையில் தெரிவித்துள்ளது.



  • 09:28 (IST) 09 Feb 2022
    உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம்!

    2021ஆம் ஆண்டு 210 மில்லியன் டன் பால் உற்பத்தி செய்யப்பட்டு, உலகளவில் பால் உற்பத்தியில் இந்தியா முதலிடம் பிடித்துள்ளது. தமிழகத்தில் மட்டும் 2021ஆம் ஆண்டு 9790.36 டன் பால் உற்பத்தி செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு மக்களவையில் தெரிவித்துள்ளது.



  • 08:41 (IST) 09 Feb 2022
    கர்நாடகாவில் நடப்பது கலக்கத்தைத் தூண்டுகிறது.. கமல்ஹாசன்!

    கர்நாடகாவில் நடப்பது க்கத்தைத் தூண்டுகிறது. கள்ளமில்லா மாணவர்கள் மத்தியில் மதவாத விஷச் சுவர் எழுப்பப்படுகிறது-கமல்ஹாசன் ட்வீட்.



  • 08:40 (IST) 09 Feb 2022
    உ.பி தேர்தல்.. 11 மாவட்டங்களில் நாளை முதல் கட்ட வாக்குப்பதிவு!

    உத்தரபிரதேச மாநிலத்தில், 11 மாவட்டங்களில் உள்ள 58 தொகுதிகளில் முதல்கட்டமாக நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.



  • 08:29 (IST) 09 Feb 2022
    ஹிஜாப் விவகாரம்.. கர்நாடக முதல்வர் மாணவர்களுக்கு வேண்டுகோள்!

    ஹிஜாப் விவகாரத்தில் நீதிமன்றத்தின் உத்தரவு வரும் வரை, மாணவர்கள் அமைதி காக்கவேண்டும் என கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கேட்டுக் கொண்டுள்ளார்.



  • 08:29 (IST) 09 Feb 2022
    காவி கொடி ஏற்றப்பட்ட விவகாரம்.. சிவமொக்கா எஸ்பி விளக்கம்!

    கர்நாடாக ஹிஜாப் விவகாரத்தில், தேசிய கொடியை இறக்கிவிட்டு காவி கொடி ஏற்றப்படவில்லை. வெறுமனே இருந்த கம்பத்தில்தான் காவி கொடி ஏற்றப்பட்டதாக’ சிவமொக்கா எஸ்பி பிஎம் லக்ஷ்மி பிரசாத் தெரிவித்துள்ளார்.



  • 08:29 (IST) 09 Feb 2022
    ராகுல் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழல்.. பாஜக எம்பி!

    ராகுல்காந்தி வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யாதபோது மட்டும் தான் நாடாளுமன்றம் வருகிறார். மத்திய அரசின் வெளியுறவுக் கொள்கை குறித்து பேசுவதற்கு ராகுல்காந்திக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அவர் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் ஊதுகுழலாக செயல்படுவதாக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யா சாடியுள்ளார்.



Tamilnadu News Update
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment